Published:Updated:

சிரிம்பிக்

சிரிம்பிக்
பிரீமியம் ஸ்டோரி
சிரிம்பிக்

பத்து பதினஞ்சு டேபிள்களைப் போட்டு வேகவேகமா டார்கெட்டை நோக்கி டேபிளுக்கு அடியில தவழணும். அதான் கேம்.

சிரிம்பிக்

பத்து பதினஞ்சு டேபிள்களைப் போட்டு வேகவேகமா டார்கெட்டை நோக்கி டேபிளுக்கு அடியில தவழணும். அதான் கேம்.

Published:Updated:
சிரிம்பிக்
பிரீமியம் ஸ்டோரி
சிரிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த ஆண்டு ஜப்பானின் புதுப்புது விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதென்ன போங்கா இருக்கு... நம்ம ஊர்ல இருந்தும் விதவிதமான போட்டிகளை ஒலிம்பிக்ல அறிமுகப்படுத்தினா பூரா மெடல்களையும் நம்ம அரசியல்வாதிகள் அள்ளிட்டு வந்துற மாட்டாங்களா..?

சிரிம்பிக்

அண்டர் தி டேபிள் ரன்னிங்

பத்து பதினஞ்சு டேபிள்களைப் போட்டு வேகவேகமா டார்கெட்டை நோக்கி டேபிளுக்கு அடியில தவழணும். அதான் கேம். நம்ம எடப்பாடியாரின் வேகத்துக்கு இந்த ஆட்டத்தை ஒலிம்பிக்ல அறிமுகப்படுத்தினா அவர்தான் தங்கமகனாக ஜொலிப்பார். இந்த கேமையே ‘பர்பி ஹண்டிங்’ என்ற பெயரில் பர்பியைக் காலுக்கடியில் போட்டுத் தேடுவதாக மாற்றினாலும் அன்னாரே ஜொலி ஜொலிப்பார். கம்ப சேக்கிழார் ராக்ஸ்!

சிரிம்பிக்

பெண்டிங் சலாம் கேம்

நின்றபடி மட்டையாய் மடங்கி வணக்கம் வைக்குறதுதான் போட்டி. அந்தக் காலத்து ஏர் இந்தியா மகாராஜா சிம்பலைவிட அதிகமாக மடங்கி வணக்கம் வைப்பதில் குங்ஃபு மாஸ்டர்களைவிட முன்னணியில் இருப்பது அ.தி.மு.க பாய்ஸ்தான். `வேம்புலியவே ஜெயிக்கிற அளவுக்கு ஆட்டம் உங்ககிட்ட இருக்கலாம். அதுக்காகல்லாம் டான்ஸிங் ரோஸை ஈஸியா ஜெயிச்சிர முடியாது’ன்னு சொல்றமாதிரி, காலைப் பார்த்துக் கும்பிட்டு யார் வேணா ஈசியா ஜெயிக்கலாம். ஆனா, அதுக்காகல்லாம் டயரைப் பார்த்து பெண்ட் பண்ற ஓ.பி.எஸ்ஸை ஈஸியா ஜெயிச்சிர முடியாது. ஆப்பனொன்டே ‘ஆ’ன்னு வாயப் பிளந்து ‘பணிவு பன்னீரு’ன்னு கத்தி என்கரேஜ் பண்ணுவாங்கன்னா பார்த்துக்கோன்னு ரங்கன் வாத்தியாரே வந்து சொல்லுவாரு.

சிரிம்பிக்

லாஃபிங் மவுத் மாரத்தான்

கிரவுண்டில் நின்னு என்னத்தையாவது உளறிட்டு எல்லோரையும் சிரிக்க வைக்கணும். கவனிக்க... சிரிக்க வைக்கணும்! அதான் கேம். நம்ம ஊரில் இந்த கேமுக்கு அனுப்புறதுக்காகவே தயாரான பீஸுன்னு அம்பது பேராவது இருக்காங்க. அதுல இந்தியாவின் சார்பா ஒலிம்பிக்குக்கு அனுப்பி வைக்கப்படுற ஒரே ஆளு நம்ம திண்டுக்கல் சீனிவாசன்தான். பல மறக்கமுடியாத காமெடிகளால் சிரிக்கவைத்த சீனியின் சமீபத்திய காமெடி, ‘நாங்க ஏன் தேர்தல் வாக்குறுதியில கொடுக்குறதா சொன்ன செல்போனை மக்களுக்குக் கொடுக்கலைன்னா, மக்கள் எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க!’ பிம்பிலிக்கா பிலாப்பி.

சிரிம்பிக்

அட்ராசிட்டி அந்தாக்‌ஷரி

ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போது திடீர்னு கர்ணகடூரமாய், ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் மனமே... அஹா... ஒஹோ... எஹே...’ என கவுண்டமணி ஒரு படத்தில் ஹைபிட்ச்சில் கொடூரமாய்ப் பாடுவதுபோல பாடி எல்லோரையும் டர்ரியலாக்க வேண்டும். எவ்வளவு நேரம் வீரர் (அ) வீராங்கனை பாட்டுப்பாடுகிறார் என்பதைவிட எவ்வளவு தூரம் சுருதி பிசகிப் பாடுகிறார் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும். இந்த ஆட்டத்தை ஒலிம்பிக்கில் சேர்த்தால் கெலீப்பது நம்ம அ.தி.மு.க பாக்ஸிங் பரம்பரை எக்ஸ் மினிஸ்டர் ஜெயக்குமார்தான். ‘அண்ணே... அண்ணே... சிப்பாய் அண்ணே... நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே!’

சிரிம்பிக்
சிரிம்பிக்

கோக்குமாக்கு புட்பால்

கிரவுண்டில் ஒரு அணிக்காக விளையாடிக்கொண்டிருக்கும்போதே வேறொரு அணிக்காக சேம் சைடு கோல் போட்டால் அவங்கதான் வின்னர். சுப்பிரமணியன் சுவாமிதான் ஆசியாவின் முன்னணி முன்கள வீரர். அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க இந்தியாவின் சார்பாக ஒரு வீராங்கனை களமிறங்கி கிரவுண்டில் பலரைக் கதற விடுகிறார். அவர்தான் குஷ்பு. ‘நான் எந்த நேரத்துல எந்த அணிக்காக விளையாடுவேன்னு எனக்கே தெரியாது. ஏன்னா நான் எப்போ எந்த அணிக்குத் தாவுவேன்னு எனக்கே தெரியாது’ எனச் சொல்லி ஒலிம்பிக்கில் பல மெடல்களை வாரிக் கொண்டு வருவார் குஷ்!

சிரிம்பிக்

பாடிபேக் ஆர்ச்சரி

வேற ஒண்ணும் இல்லைங்க... முதுகுல அதிகமா குத்து வாங்குறவங்களுக்குத்தான் மெடலாம். அப்படின்னா அ.ம.மு.க டி.டி.வி.தினகரன்தான் வின்னர். ‘என்னடா நடக்குது இங்கே... எங்கூட இருந்தவய்ங்க எங்கே?’ன்னு அவர் கேட்கும் நேரத்தில, ‘கொல கொலயா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா’ என சுத்துனவங்களே முதுகில் குத்திட்டு ஓடினால் இவருக்கு பாயின்ட்டு. தாமிரபரணி புஷ்கரணியில் கும்பலா தலைமுழுகி எழுந்திரிச்சப்போ ஒரு டஜன் பேர் முதுகில் குத்திட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க. சசிகலா இந்த கேமில் மகளிர் பிரிவில் களம் கண்டால், கோல்டு வின்னர் அவர்தான்!

சிரிம்பிக்

சோலோ ஸ்பீச் கேம்

தனக்குத்தானே மூச்சு விடாமல் பேசிக்கிட்டே இருக்கணும். இந்தியாவின் சார்பா மோடியை அனுப்பலாம். அவர்தான் எக்ஸ்பிரஷனாக கண்கள் பனிக்க, உதடுகள் தாடியைத் தாண்டியும் துடிக்கப் பேசுகிறார். கூடவே சீமானையும் அனுப்பலாம். இரண்டு பேரும் சேர்ந்து இரட்டையர்கள் பிரிவுல ஆடுனா அத்தனை மெடலும் நமக்குத்தான்!

சிரிம்பிக்

ஆங்ரி பேர்டு கேம்

எதிர் அணியோட ஜாலியா ஆடுற பிளேயர், தன் டீம்ல உள்ளவங்களை கன்னாபின்னான்னு திட்டி அவுட் ஆக்குனா அதான் ஆங்ரி பேர்டு கேம். இன்னிய தேதியில ராகுல் காந்திய விட்டா இந்த கேம்ல யாராலும் ஜெயிக்க முடியாது. மோடியைக்கூட அவர் தாடியை வெச்சு ஜாலியா கிண்டல் பண்ணி ட்வீட் போடுவார். ராகுலை விட்டா தமிழ்நாட்டிலிருந்து ஒரே சாய்ஸ் நம்ம துரைமுருகன்தான். கூட்டணியிலயே வேட்டு வைக்குற கெட்டிக்காரர். ‘நான் பார்டர்ல ஜெயிச்சதுக்கு சிலபேரு சொந்தக் கட்சியில சூனியம் வெச்சதுதான் காரணம்!’னு சொல்லிப் பதற வெச்சவர்.

சிரிம்பிக்

லைட்ஸ்-ஆப் கேம்

அடிக்கடி லைட்டை ஆப் பண்ணி யார் தலையிலாவது குட்டு வைத்து விட்டு ஓடிவிடுவதே கேம். இம்முறை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் அணில் பாலாஜியும் இரட்டையர்கள் பிரிவு ஆட்டத்தில் எல்லோரையும் தோற்கடிப்பார்கள். ‘விடியல் ஸ்டார் ஸ்டாலின்’, ‘அணில் போல துள்ளி ஓடும் அணில் பாலாஜி’ என ஊடகங்கள் இவர்களின் ஆட்டத்தைப் பார்த்து அசந்துபோய் தலைப்பு வைத்து எழுதும். அப்புறமென்ன ஸ்டாலின் தான் வாராரு... மெடல் ஜெயிக்கப் போறாரு!