Published:Updated:

பாலிடிக்ஸ் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை
பிரீமியம் ஸ்டோரி
பாலிடிக்ஸ் பரம்பரை

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

பாலிடிக்ஸ் பரம்பரை

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

Published:Updated:
பாலிடிக்ஸ் பரம்பரை
பிரீமியம் ஸ்டோரி
பாலிடிக்ஸ் பரம்பரை

வாங்க மக்கா வாங்க... சார்பட்டா பரம்பரையும் இடியாப்ப பரம்பரையும்தானே இப்ப டிரெண்ட்டு?

நடுவுல இன்னிய தேதியில இங்கே பல பரம்பரைங்க சைலன்டா குத்த வெச்சு உட்கார்ந்திருக்கு. வாங்க, பேரு வெச்சுக் களத்துல இறக்கி வுடலாம். ரோசமான ஆங்கில குத்துச்சண்டைய பார்க்க ரெடி ஆகிட்டீங்களா? மொத்தக் கட்டுரையையும் ‘சார்பட்டா பரம்பரை’ பழைய ஜோக் தங்கதுரை (டைகர் கார்டன் தங்கம்) வாய்ஸ்ல படிக்கவும்...

திராவிட டாடி பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

`நாங்கெல்லாம் திராவிட ஸ்டாக் பரம்பரை... ரங்கன் வாத்தியாரே எங்க ஆளுதான். ஆமா தானேப்பா... எடுத்துச் சொல்லுப்பா!’ன்னு களத்துல நிக்கிறாரு ஒன்றிய அரசுடன் ரோசமான திராவிடச் சண்டை போடும் ஸ்டாலின். கூடவே, ‘அப்பா, உனக்கு அப்புறம் நான்தானேப்பா!’ன்னு கையில கிளவுஸோட நிக்குறாரு உதய்ண்ணா. பின்னாடியே குட்டி கிளவுஸோட இன்பாண்ணா... ‘வாட் எ பிட்டி... பரம்பரை...க்ளான்லாம் உங்களுக்குத்தான்யா செமையா மேட்ச் ஆவுது. டாடி பரம்பரைன்னுகூட பேர் வைக்கலாம், ஐ ஃபீல் இட் மேன்!’னு டாடி ஒரு பிட்டைப் போடுறாரு!

உள்குத்து பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

இரட்டை இலைங்கிற ஒரே பரம்பரையில நின்னுக்கிட்டே நான்தான் இந்தப் பரம்பரையின் கடைசி வாரிசுன்னு சார்பட்டா பரம்பரைக்கே டப்பு கொடுக்குறாங்க... ‘வடசென்னை வேங்கை... ஊதுங்கடா சங்கை!’ன்னு முழக்கமிடும் இரட்டை இலை பரம்பரையின் இரட்டை வாரிசுகளா தங்களைத் தாங்களே அறிவிச்சுக்கிட்ட அப்பா ராவ் - சுப்பா ராவ். ‘விடுவோமா நாங்க... தரப்போறோம் வீங்க!’ன்னு குறுக்கே புகுந்துட்டாங்க மன்னார்குடி பரம்பரையின் கடைசி வாரிசு சசிகலா. ‘பக்கத்து இரட்டை இலைக்கு மட்டும் பாயசமா... எனக்கு இருக்கு ஆயாசமா’ன்னு இப்ப இரட்டை இலை பரம்பரைக்கும் சொந்தம் கொண்டாட வந்துட்டாங்கோ சின்னம்மா. பாக்ஸிங் வரலாற்றுலேயே ஒரே ரிங்குக்குள்ள மூணு பேரு மாத்தி மாத்தி பஞ்ச் வெச்சுக்கினு ஆடியன்ஸையே பதற வுடுறாங்கோ... ஆங்... மஜா பா... மஜா பா!

ஈட்டிங் டைகர் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

உலகம்பூரா மிச்சமிருக்குற புலிப்புள்ளிங்கோவ ஆட்டம் காண வெச்சிருக்காரு நம்ம சீமாண்ணா. ‘இடியாப்பத்துக்கே பரம்பரை இருக்கும்போது கறி இட்லிக்கு இருக்கக் கூடாதா ஒறவுகளே?’ன்னு கேட்குற அவரோட ஆதங்கத்துக்கு மதிப்பளிச்சி, கறி இட்லி பரம்பரையின் முதல் வாரிசா அவரை நியமிக்குறோம். புலிங்களையே ஆட்டம் காணவைக்குற ஒண்டிப்புலி வீரப்பரம்பரையோட காரணப் பெயரா ‘ஈட்டிங் டைகர்’னு அவரைத் தம்பிமாருங்கோ அன்போடு இனி அழைக்கலாம். ஈட்டிங் டைகர் களமிறங்கிருச்சு... ஊத்துடா சால்னாவை!

தற்காலிகப் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

ரொம்ப வருஷமா ரிங்குக்குள்ள கெலீக்காம வெளியே நின்னு விசிலடிச்சே கெலீச்ச மாம்பழப் பரம்பரையின் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் ரெண்டு பேருமே இப்ப, ‘சீச்சீ... இந்த மாங்கா புளிக்கும்!’னு ஒட்டுமொத்தப் போட்டியிலேருந்தும் ஒதுங்கி ஓரஞ்சாரமா நிக்கிறாங்கோ.

‘எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தா நாங்க ஈஸியா கெலீச்சிருப்போம்..!’னு வாய் கூசாமக் கூவுறாங்கோ. தணிகை - ராமன் மாதிரி எந்த நேரம் வேணும்னாலும் சேம்சைடு கோல் போட்டு எதிர்த்தரப்பு பரம்பரைக்கு கிரீன் கொடி ஆட்டுற இவங்க தற்காலிகப் பரம்பரைங்கோ!

பொட்டலப் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

`ஏய் படித்துறை... என்ன அம்பது ரூபா தர்றே?’ன்னு நாக்கை மடிச்சி நாக்-அவுட் பஞ்ச் வைக்கும் விருத்தாசல பரம்பரையின் பிரேமலதாவைப் பார்த்து மெட்ராஸ் மாகாண பாக்ஸிங் பரம்பரைங்க அத்தினி பேரும் அல்லுவுட்டுப் போய்ருக்காங்க. ‘ஏம்மா... பாக்ஸிங்ல ஆம்பளைங்க மட்டும்தான் அலவ்டு. ரிங்க விட்டு போம்மா அந்தாண்ட..!’ன்னு சொன்ன ரங்கன் வாத்தியாருக்கும் துரைக்கண்ணு வாத்தியாருக்கும் மூஞ்சியில செம பஞ்ச் வெச்சு பயமுறுத்தியே களத்துல நிக்கிறாங்க பிரேமலதா.

‘ஆத்தி... அண்ணனைவிட அண்ணி செம ஃபைட்டருப்பா!’ன்னு விருத்தாசல வகையறாக்கள் உசுப்பேத்திவிட, அண்ணி ரோஷமான குத்துச்சண்டை போடுவாங்கன்னு பார்த்தா மூணு எதிரி பரம்பரையோட ‘மூணு இட்லி, கூடவே கெட்டிச்சட்னி’ டீல் போட்டு ‘பொட்டலப் பரம்பரை’ ஆகிட்டாங்க!

நூடூல்ஸ் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

`நான் இல்லாம ஆட்டமா..? சும்மா வருவாளா சுகுமாரி... சோக்காக்கீதுபா சோமாறி..!’ன்னு சோ மாதிரி மெட்ராஸ் பாஷை பேசி களத்துல தன்னந்தனியா நிக்கிறாரு களத்தூர் கண்ணம்மா மவன்... வியாசர்பாடி வீரன்... ஜப்பானில் கல்யாணராமன்... புன்னகை மன்னன்... எங்கள் அண்ணன்... ஜானி பரம்பரையின் ஒரே வாரிசு... டெக்னிக்கல் ஃபைட்டர் கமல். ஆமா... ஒரு காலத்துல செமையா கெலீச்சவரு. பத்து ஜதை பதினோரு ஜதைலாம் இல்லை... இருபது ஜதைனாலும் களத்துல அசராம நின்னு போட்டுப் பொளப்பாரு. ஊரு கண்ணு பட்டுடுச்சுபா.. இப்போ இருந்த பரம்பரை ஆட்கள்லாம் ஒவ்வொருத்தரா எஸ்கேப் ஆனாலும், இடியாப்பத்தைவிட சிக்கலாப் பேசி அதுக்கு நூடுல்ஸ் பரம்பரைன்னு பேர் வெச்சு நூல்விட்டுத் திரியுறாரு!

பஞ்சர் பரம்பரை

பாலிடிக்ஸ் பரம்பரை

புச்சா ஒரு செம பீஸு வாண்டடா வந்திருக்கே... முன்னாள் போலீஸாம். கர்நாடக சிங்கமாம். ‘சிங்கம்னா ஜூவுல இருக்க வேண்டியதானே... இங்கே வந்து ஜூவக்கொடுத்தா’ன்னு கேட்குறீங்களா..? பேரு அண்ணாமலையாம். ‘அடடா அடடா அண்ணாமல... அண்ணாந்து பார்த்தா ஒண்ணுமில்ல’ங்குற மாதிரி இதுக்கு முன்னாடி அரவக்குறிச்சிப் போட்டில தோத்தாலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலமா சென்னைக்கு வந்திருக்காரு. ‘யார் ரிங்ல நாக்-அவுட் ஆவுறாங்களோ அவங்களுக்கு மட்டும்தான் கப்பு’ன்னு புது ரூல் இந்தப் பரம்பரைக்கு மட்டும் உண்டு. தமிழ்நாடே சேர்ந்து நாக்-அவுட் பண்ணிப் பஞ்சர் ஆகிக்கிடக்குது இந்தப் பாவப் பரம்பரை!