Published:Updated:

இது மஞ்ச சட்டைக்கு கிடைத்த வெற்றி!

மருத்துவர் ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் ராமதாஸ்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை உடைக்க பல முயற்சிகளைப் புறவாசல் வழியாகச் செய்கிறார்கள். ஆனால், வருத்தப்படாத வாலிப சொந்தங்களால் அந்தச் சங்கம் நிலைத்து நிற்கிறது.

இது மஞ்ச சட்டைக்கு கிடைத்த வெற்றி!

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை உடைக்க பல முயற்சிகளைப் புறவாசல் வழியாகச் செய்கிறார்கள். ஆனால், வருத்தப்படாத வாலிப சொந்தங்களால் அந்தச் சங்கம் நிலைத்து நிற்கிறது.

Published:Updated:
மருத்துவர் ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவர் ராமதாஸ்

தமிழ்நாட்டோட மூத்த அரசியல்வாதிகள்ல ஒருத்தரான மருத்துவர் ராமதாஸ், இப்ப தொடர்ந்து திரைப்படங்கள் பார்த்து, அதப்பத்தி ரெண்டு மூணு வரிய ட்விட்டர்ல எழுதிட்டு வர்றார். `திரௌபதி’, `கோடியில் ஒருவன்’ மட்டுமல்ல, இப்ப வந்த சிவகார்த்திகேயனின் `டான்' திரைப்படம் வரைக்கும் இந்தப் பட்டியல் நீளுது.

``புளூ சட்டை மாறனுக்குப் போட்டியா மஞ்சள் சட்டை மருத்துவர்னு தினுசா மாறிட்டு வர்ராறோ ராமதாஸ்?’’ன்னு நெட்டிசன்கள் கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒருவேளை இந்தப் படங்கள் எல்லாம் ராமதாஸ் பாத்தார்னா என்ன விமர்சனம் எழுதுவார்னு ஒரு லிஸ்ட்ட போட்டோம். அத நீங்களே வாசிங்க...

போக்கிரி

பிரபு தேவா இயக்கிய ‘போக்கிரி’ திரைப்படம் பார்த்தேன். கதாநாயகன் விஜய்க்கு `தமிழ்' என்று பெயர் வைத்துத் தமிழ் மொழிப்பற்றைக் காட்டியதோடு நில்லாமல், முக்கனிகளில் முதன்மையான கனியான மாம்பழத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில், `மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி' என்ற பாடலையும் படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார் இயக்குநர். அலிபாய் ரசிகர்கள், அண்டர்கவரில் இருக்கும் போலீஸ்காரர்கள், சேலத்துக்காரர்கள் மட்டுமன்றி மாம்பழத்தின் மகிமையையும், மஞ்சள் நிறத்தின் நற்குணத்தையும் உலகறியச் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் போக்கிரி.

கிரீடம்

தம்பி அஜித் குமார் நடிப்பில் வெளியான கிரீடம் திரைப்படத்தை இன்று என் குடும்பத்துடன் பார்த்தேன். அப்பாவின் கனவை நிறைவேற்ற, மாற்றம் முன்னேற்றம் என ஓயாது ஓவியா ஆர்மியைப் போல உழைக்கும் மகனாக அஜித் நடித்திருக்கிறார்.

மருத்துவப் படிப்பில் சேர இரவில் கண்விழித்துப் படிக்கும் மகனுக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுப்பது, மகனை மத்திய அமைச்சராக்குவதோடு, மதிய சாப்பாட்டையும் டிபன் கேரியரில் கட்டிக்கொடுப்பது, கடைசியில் மாநிலங்களவை செல்லும் மகனுக்கு வீட்டு வாசலில் வந்து டாட்டா காட்டி வழியனுப்புவது என மகனுடனான தந்தையின் உறவை, மாம்பிஞ்சின் மென்மையுடன் சொல்லிச் செல்கிறது `கிரீடம்' திரைப்படம்.

இது மஞ்ச சட்டைக்கு கிடைத்த வெற்றி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருங்காலத் தமிழக முதல்வர் தம்பி அன்புமணியே பார்த்துப் பொறாமைப்பட்ட மக்கள் ஆதரவு பெற்ற ஓவியா நடிப்பில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சிவகார்த்திகேயனின் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தைப் பாட்டாளிகளுடன் கூட்டாளியாக அமர்ந்து பார்த்தேன். போஸ்பாண்டியும் கோடியும் வெற்றிகரமாக நடத்திவரும் சங்கத்திற்கு, `மஞ்சள்/நீல கலரு ரிப்பன்' கட்டி வரும் லதா பாண்டியாலும் அப்பெண்ணின் தந்தை சிவனாண்டியாலும் பிரச்னை வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை உடைக்க பல முயற்சிகளைப் புறவாசல் வழியாகச் செய்கிறார்கள். ஆனால், வருத்தப்படாத வாலிப சொந்தங்களால் அந்தச் சங்கம் நிலைத்து நிற்கிறது. சங்கங்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். தம்பி போஸ் பாண்டியின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரும், தம்பி கோடி தொடங்கிய எப்போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரும், வன்னியர் சங்கத்தினர் மட்டுமன்றி, அனைத்து சங்கத்தினரும் தங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து சங்க மாநாடுகளில் திரையிட்டுப் பார்த்துக் கற்க வேண்டிய பாடம் இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

முதல்வன்

கடுமையான கட்சிப் பணிகளுக்கிடையில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ திரைப்படத்தைப் பார்க்க நேரம் வாய்த்தது. ஒரு ஊடகவியலாளருக்கும் ஒரு முதல்வருக்கும் இடையேயான மோதலால், அந்த ஊடகவியலாளர் முதல்வர் இருக்கையில் அமர்கிறார். சமூகக் கருத்துகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம்.

என்னிடமும் இதேபோல ஒரு கதை உள்ளது. தர்மபுரியில் `தமிழ்நாடு' என்ற பெயரில் ஒரு கல்லூரி இயங்கிவருகிறது. சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்க, ஒருநாள் அக்கல்லூரியின் முதல்வர், தைலாபுரத்தில் உள்ள இளம் மருத்துவரான அன்புமணி என்பவரை அணுகுகிறார். அப்போது, இருவருக்கும் இடையே மோதல் வர, அந்த இளம் மருத்துவர் தமிழ்நாடு கல்லூரியின் முதல்வர் இருக்கையில் அமர்கிறார். அதாவது, தமிழ்நாட்டிற்கு அன்புமணி முதல்வர் ஆகிறார். இதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். இந்தப் படம் வெளியானால் 300 நாள்கள் ஓடுவதுடன் ஆஸ்கர் விருது பெறுவதும் உறுதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism