Published:Updated:

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

ஒருங்கிணைப்பாளரின் உடல்மொழியில் மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

ஒருங்கிணைப்பாளரின் உடல்மொழியில் மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Published:Updated:
அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

அ.தி.மு.க பொதுக்குழுவில் எப்படியெல்லாம் விதிகளை மாற்றி எழுதி எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆக்கினார்கள் என்பது சமகால வரலாறு. நாளை கட்சிக்குள் எந்தச் சிக்கலும் வராமல் விதிகளை எப்படியெல்லாம் மாற்றி வைத்துக் கொள்ளலாம் என மற்றக் கட்சி(தலைமை)களுக்கு ஒரு யோசனை...

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

தி.மு.க:

விதி எண் 1: கருணாநிதி குடும்பத்து ரேஷன் கார்டில் இடம் பெற்றவருக்குத்தான் தலைவர் பதவிக்கான என்ட்ரி கார்டு. இவ்வுலகில் இக்கட்சி இருக்கும் காலம்வரை இந்த விதி நிரந்தர விதியாக ஆக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் இதை உணர்ந்து கழகப் பணியாற்ற வேண்டும்.

வயதானோருக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுச்செயலாளர் என்ற பதவி, சும்மானாச்சுக்கும் யாராவது ஒரு சீனியருக்குத் தரப்படும். முதல்வர் பதவியை மறந்தும்கூட வேறு யாரும் கனவில் நினைத்துப் பார்க்கக்கூடாது. ஆனால், சொந்தத் தொகுதியில் டானாக... குட்டி ராஜாவாக இருந்துகொள்ளலாம். கட்சித்தலைமை அதைப் பாராட்டி ஊக்குவிக்கும்.

எம்.எல்.ஏ-வாகவோ எம்.பி-யாகவோ ஆக விருப்பமுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். ஆனால், சீட் கிடைக்கும் என்பது விதி எண் 3-ன் படி உத்தரவாதமில்லை. ஒரு வேளை பதவிதான் வேண்டும் என்றால் சுமார் 5 மாதங்களாவது மாற்றுக் கட்சிக்குத் தாவி மீண்டும் வருபவராக இருக்க வேண்டும். அடிப்படை விதி 3-அ பிரிவுப்படி, அப்படி வருபவர்களுக்கு தீபாவளிப்பரிசு போல சீட் கிடைக்க 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

பா.ஜ.க:

தேசியக் கட்சி என்பதால் கட்சியின் விதிகள் எல்லாம் இந்தியா முழுமைக்குமே பொருந்தும். ஒரு செல்போனும் அதில் மிஸ்டு காலும் கொடுக்கத் தெரிந்தால் போதும்... நீங்கள் தேசிய உறுப்பினர் என்று அன்பாக அழைக்கப்படுவீர்கள்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒருவேளை மிஸ்டு கால் கொடுக்கத் தெரியவில்லை என்றாலோ, செல்போனே கையில் இல்லையென்றாலோ கவலை வேண்டாம். அடிப்படை விதி எண் 1-ன் படி ஏதாவது ஒரு வழக்கு உங்கள் மேல் இருக்க வேண்டும். தேடப்படும் குற்றவாளியாக இருந்து பின்பு குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவர் என்றால் கவுன்சிலர் உள்ளிட்ட பதவி வாய்ப்புகள் வரை கட்சியில் வழங்கப்படும்.

நீங்கள் எதிர்க்கட்சியினரின் தூரத்து உறவினர் என்றால் (எவ்வளவு தூரம் என்றாலும்) உடனடியாகச் சேர்க்கப்படு வீர்கள்.

தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலோ, நோட்டாவுக்குக் கீழ் வாக்குகள் பெற்றாலோ பிற மாநில கவர்னர், மத்திய அமைச்சர் வரை சிறப்புப் பதவிகள் உண்டு.

தேசியப் பொதுச் செயலாளர், மாநிலப் பொதுச்செயலாளர் பதவிகள் அனைத்தும் எப்போது வரும் எப்படி வரும் என யாருக்கும் தெரியாது.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

பா.ம.க:

இக்கட்சியின் அடிப்படை விதியே ‘விதிகள் ஒவ்வொரு வருடமும் கட்சித் தலைமையால் மீறப்படும்’ என்பதுதான்.

அடிப்படை விதி 1- அ பிரிவுப்படி, ஒருவேளை கூட்டணி பற்றி தலைமைக் கருத்துக்கு மாற்றாகச் சொன்னால், பூட்டிய திருமண மண்டபத்தில் கட்சித் தலைமையால் கடுமையாகக் கடிந்துகொள்ளப்படுவீர்கள்.

அடிப்படை விதி 2-ன் படி தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி வைக்கும் கட்சியைப் பற்றி விமர்சிக்காமல் பொறுமை காக்க வேண்டும். தேர்தல் முடிந்தபிறகு விதி எண் 2-உ பிரிவுப்படி கட்சித் தலைமையே தாறுமாறாக கூட்டணிக் கட்சியை விமர்சிப்பதால், தொண்டர்களும் விமர்சிக்கும் உரிமையைப் பெறுவதாக அர்த்தம். நேற்றுவரை ஒன்றாக உண்டு உறங்கிய கூட்டணிக் கட்சியினரைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்கவிடும் உரிமையைப் பெறுவீர்கள்.

அடிப்படை விதியில் மிக முக்கியமானது பிரிவு இ பிரிவில் முதல் பத்தியில் உள்ளதுதான். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டத்துக்கு மறந்தும்கூட தலைமைப் பதவியிலிருப்பவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. கூடுமானவரை அந்த விதிப்படி சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாலை மறியல், கடையடைப்புகளில் வலுக்கட்டாயமாக இறங்கி தங்கள் உணர்வைத் தொண்டர் களே பதிவு செய்யலாம்.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

தே.மு.தி.க:

கட்சியின் அடிப்படை விதியே அண்ணியாரையும் கேப்டனைப் போல மதித்து அவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தெரியாதவர்கள் நீக்கப்படுவீர்கள்.

கேப்டன் பெயரில் வரும் அறிக்கை கேப்டனால் எழுதப்படுபவை என்பதை நம்புபவராக இருப்பவர்கள் தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகக் கருதப் படுவார்கள். ‘அண்ணனைக் காட்டுங்கள்!' என்று பாசத்தைக் காட்டு பவர்கள் அடிப்படை விதிமீறல் செய்பவராகக் கருதப்பட்டு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள்.

மாவட்டச் செயலாளர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்பது தலைமைக்கே 2012 வரை முரசு சின்னக் கொடியை கார்களில் கட்டிக்கொண்டு வலம் வந்தவர்கள் யார் வேண்டுமென்றாலும் ‘நான் செங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர்’ என்றோ, ‘நான் விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர்' என்றோ லெட்டர் பேடில் எழுதி நிரூபித்துக் கொள்ளலாம்.

கட்சியின் உயர்மட்டக்குழு, பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் எல்லாமே சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் வீட்டிலேயே எளிமையாக நடந்துவிடுவதால், கட்சியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளிவரும் போது அதிர்ச்சி ஆகக் கூடாது.

சின்ன கேப்டன், லேடி கேப்டன், கேப்டனின் தளபதி என முறையே விஜய பிரபாகரன், பிரேமலதா மற்றும் சுதீஷை விதவிதமாகப் புகழ்ந்து கோயம்பேடு முதல் வானகரம் ரவுண்டானா வரை போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் வரைந்து கெத்து காட்டுபவர்களுக்குப் பதவிகள் கேப்டனின் முத்திரை தாங்கிய கடிதம் வழியாக வழங்கப்படும்.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

ம.நீ.ம:

‘கட்சியின் நிரந்தரத் தலைவர் உலக நாயகன் கமல்ஹாசனாரை விட்டுப் போக மாட்டோம்!' என பத்திரத்தில் கையெழுத்து போட்டவர்கள் மட்டுமே இனி மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

அடிப்படை விதி 2/2-ன் படி ஆன்லைனில் கமல்ஹாசனார் போடும் ட்வீட்டுகளைப் புரியவில்லை என்பவர்களை ட்ரோல் செய்பவர்கள், மய்யத்தின் இணையப் பிரிவில் அறிவிக்கப்படாத உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ‘பிரிவு'க்கும் செயலாளர்களாக நியமிக்கப்படும்போது, ‘பிரிவு' என்றால் பிரிந்து செல்வதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்பதை உறுப்பினர்கள் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும்.

அ.தி.மு.க மாடலில் ஸ்டாலின் முதல் சீமான் வரை!

நாம் தமிழர்:

அடிப்படை விதி எண் 1-ன் படி கட்சித் தலைமை மாறுபட்ட கருத்துகளை குந்தாங்கூறாகச் சொல்லி அசிங்கப்பட்டாலும், முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளரால்கூட ஒருங்கிணைக்க முடியாத தம்பிமார்களோடு சகவாசத்தை அறவே துண்டிப்பவர்களுக்கே பொறுப்புகள் கொடுத்துத் தலைமை அழகு பார்க்கும்.

நெய்தல் படைத் தளபதி போன்ற பதவிகள் கொடுக்கப்படும்போது, பொதுவெளியில் கேலி செய்யப்படுவீர்கள் என்பதையும், அதனால் ஏற்படும் மனக்காயங்களுக்கு கட்சி ஒத்தடம் கொடுக்காது என்பதையும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

விதி எண் 106-ன் படி மாற்றுக் கருத்துகள் ஒருங்கிணைப்பாளர் மீதே வந்தாலும் அதைப் பொதுவெளியிலோ அவருக்கு செல்போனிலோ தெரிவிக்கக் கூடாது. ஒருவேளை அப்படித் தெரிவித்து அதனால் ஏற்படும் மன உளைச்சல்களுக்கு கட்சி அடிப்படை விதி 111 படி கட்சித்தலைமை பொறுப் பேற்காது என்பதை உணர வேண்டும்.

ஒருங்கிணைப்பாளரின் உடல்மொழியில் மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அவராக மாற முயற்சி செய்தால் விதி எண் 7.5-ன் படி உறுப்பினர் நீக்கம் செய்யப்படுவீர்கள்.

முக்கியமாக யாரைப் பார்த்தாலும், அவர் என்ன சாதி என்று கேட்டு, தமிழரா இல்லையா என்ற ஆய்வக அறிக்கையை வழங்கும் சிறப்புத்தகுதி, நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு வந்துவிடும். இந்தச் சலுகை வேறெந்தக் கட்சியிலும் கிடைக்காது.