Published:Updated:

ஒரு கதை சொல்றீங்களா சார்?

ஒரு கதை சொல்றீங்களா சார்?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கதை சொல்றீங்களா சார்?

ஓவியங்கள்: நீலன்

ஒரு கதை சொல்றீங்களா சார்?

ஓவியங்கள்: நீலன்

Published:Updated:
ஒரு கதை சொல்றீங்களா சார்?
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கதை சொல்றீங்களா சார்?
தமிழ் சினிமா பிஸி ஹீரோக்களின் கால்ஷீட் வாங்குறது ரொம்ப கஷ்டம். பொறி வெச்சுப் பிடிக்கிறதுபோல இப்படிக் கதை சொன்னீங்கன்னா ஹீரோக்கள் கமிட் ஆக சோப்பு விளம்பரக் கிருமி ஒழிப்புபோல 99.9% சான்ஸ் இருக்கு...
ஒரு கதை சொல்றீங்களா சார்?

கமல்

“நான் உங்க டை-ஹார்டு ஃபேன் சார். நீங்களே டைரக்ட் பண்ணிக்கிட்டாலும் ஓகேதான் சார்... படத்துல நீங்க இந்தச் சமூகத்தை மாத்த வர்ற ரிட்டயர்டு புரொபசர் சார். மூத்தவர்னு டைட்டில் வெச்சுக்கலாம் அல்லது நம்பர் 1 நம்மவர்னே வெச்சுக்கலாம். சுட்டித்தனம் பண்ணுற இன்றைய தலைமுறை இளைஞர்களை நல்வழிப்படுத்த காந்திய வழியையும், நேதாஜி வழியையும் கலந்து மய்யமா ஒரு வழியைக் கண்டுபிடிச்சு தண்டிக்குறீங்க. கால்ஷீட்னு பிக்பாஸ் ஷூட்டிங்குக்கு நடுவே ஒண்ணு ரெண்டு நாள் கொடுத்தாப் போதும். படத்தை முடிச்சிடலாம் சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

ரஜினி

“சௌந்தர்யா மேடம்தான் கதை சொல்லச் சொன்னாங்க. படத்தோட ஓப்பனிங்லயே மாஸா ஒரு பாட்டு இருக்கு. ‘எல்லாப்புகழும் பாபா ஒருவனுக்கே!’ன்னு அனிருத் மியூசிக்ல ஏ.ஆர்.ரஹ்மான் மாஸா பாடுறாரு... பிரிஞ்சிருக்குற ஒரு பெரிய குடும்பத்தையே ஒண்ணு சேர்க்குற ஒரு கேரக்டர். உங்க பாட்டி வடிவுக்கரசி அதுக்கு முட்டுக்கட்டையா இருக்காங்க. அவங்களோட சதியை முறியடிச்சு மும்பைக்கே போயி குடும்பத்தை ஒண்ணு சேர்க்குறீங்க. இந்த லட்சியத்துக்கு நடுவுல மும்பையோட அண்டர்கிரவுண்ட் டான் மாவூத்துக்கு மாவுக்கட்டு போடுறீங்க. அப்புறம் உங்களை ஒன்சைடா லவ் பண்ணுற அத்தை மீனாவோட பொண்ணு நயன்தாராவையும் இன்னொரு அத்தை குஷ்புவோட பொண்ணு சமந்தாவையும் மன்னிக்கச் சொல்லிட்டு இமயமலை போயிடுறீங்க. ‘சிங்கப் பாதையா... பூப்பாதையா?’ன்னு பாட்டு போட்டு எண்டு கார்டு போடுறோம்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

விஜய்

“படத்துல மாஸ் இருக்காது. மாஸுக்குள்ளதான் படமே இருக்கும் சார். நாலு டான்ஸ் பாட்டு இருக்கு. அதுல ரெண்டு குத்துப்பாட்டு. ஃபைட்லாம் வெறித்தனமா இருக்கும். ஒரு ஃபைட் சீன்ல பாட்டுப் பாடிட்டே சண்டை போடுறீங்க. சட்டையைக் கழட்டிட்டு க்ளைமாக்ஸ்ல சண்டை போடுறீங்க. பன்ச் ஒவ்வொண்ணும் வெறித்தனமா வெச்சு க்ளைமாக்ஸ்ல வில்லன்களை ஜெயிச்சு ஒரு டான்ஸ் போடுறீங்க பாருங்க... தியேட்டரே சேர்ந்து ஆடும் சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

சூர்யா

“ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடி நியாயம் வாங்கித் தர்ற காம்ரேட் ரோல் உங்களுக்கு. எமோஷனலான கோர்ட் சீன் ஒண்ணு இருக்கு சார். நடுவுல சாண்ட்விச் மாதிரி ஒரு பொண்ணும் பையனும் எப்படில்லாம் இந்த சிஸ்டத்தால பாதிக்கப்படுறாங்கனு ரத்தமும் சதையுமா காட்டுறோம் சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

அஜித்

“நாலு பைக் சேஸ் சார். அதுல ரெண்டு பைக் சீன் ரேஸ் ட்ராக்ல... அம்மா பாசம், தம்பி பாசம்லாம் பேசியாச்சு. அதனால இதுல அக்கா பாசம் பேசுறோம். அக்கா தூங்கி நாலு நாளாச்சுன்னு அழுறீங்க. உங்க ஃபேன்ஸ் அழுவாங்களோ இல்லையோ ரெவ்யூ பண்றவங்க அழுவாங்க. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றின்னு விளம்பரப்படுத்தலாம்... பிஜிஎம்லாம் கிதார் யூஸ் பண்ணாம ‘ரப்பப்பப்பா’ன்னு வாயால மியூசிக் போடுறோம்... சும்மா தெறிக்க விடலாம் சார்... படத்தோட டைட்டிலே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி ‘வல்லமை’ தான் சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

விக்ரம்

“சார், படத்துல உங்களுக்கு 15 கெட்-அப். ஹீரோ, வில்லன், சைடு வில்லன், வில்லனோட தங்கச்சி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, காமெடியன்னு எல்லா கெட்டப்பும் நீங்களே போட்டுக்கங்க சார்! உங்க பையன் கெட்-அப்ல மட்டும் உங்க பையனையே நடிக்க வெச்சிடலாம். கதைலாம் ஷூட்டிங்ல நீங்களே நடிக்கிறப்போ புரிஞ்சுக்குவீங்க சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

சிம்பு

“என்ன சார் சிரிக்கிறீங்க? பரவாயில்லை சார்... ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி சார். நான் காத்திருக்கேன் சார்... அழாதீங்க சார்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

விஜய்சேதுபதி

“நீங்க படத்துல நடிக்கவே வேணாம் சார்... உங்க பிளாக் அண்டு ஒயிட் போட்டோ மட்டும் கொடுங்க. ஒரு சீன்ல ஹீரோ வீட்டுல ப்ரேம் பண்ணி மாட்டியிருந்தா போதும். அதை வெச்சே கெஸ்ட் ரோல்னு மாவாட்டி தோசை சுட்ருவோம்! இல்லை ஒரு சீன்லயாவது நடிச்சே ஆகணும்னு நினைச்சீங்கன்னா படத்துல ஃப்ளாஷ்பேக்ல வர்ற போஸ்ட்மேன் ரோல்ல, ‘சார் போஸ்ட்!’னு ஸ்டைலா சொல்லிட்டுப் போயிடுங்க. மக்கள் செல்வனின் யதார்த்த நடிப்பில்னு நாங்க ஃபில் பண்ணிக்கிறோம்!”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

தனுஷ்

“இந்தப் படத்துல உங்களுக்கு ஜோடி ஒரு லூஸுத்தனமான ஹீரோயின் சார்... நீங்க ரெண்டு டஜன் ரௌடிகளை அடி வெளுக்குறீங்க சார்... கோடு வேர்டு அக்செப்டட்டா...என்னது, கதையே சொல்ல வேணாமா?”

ஒரு கதை சொல்றீங்களா சார்?

சிவகார்த்திகேயன்

“படத்துல எதுக்குமே லாயக்கில்லாத ஹீரோவா சுத்திட்டு இருப்பீங்க. ஆனா, காதலுக்காக மௌண்ட் ரோட்டுல ஆயிரம் வாட்ஸ் பல்பை எரியவிட்டு புரொபோஸ் பண்ணுவீங்க. நீங்க மாரத்தான் ஓடிப் பழகுனதே ஹீரோயினை விடாம துரத்தி லவ் பண்ணத்தான்னு ஒரு புது மேட்டர் புடிச்சிருக்கோம். ஹீரோயினோட நடை உடை ஜடை எல்லாத்தையும் கிண்டல் பண்ணி பாட்டுப் பாடுறீங்க சார். ஆனா, நீங்க சூப்பர் பவர் மனிதர்னு உங்களுக்குத் தெரிஞ்சதும் ஹீரோயினைத் துரத்துறதை விட்டுட்டு வில்லனைத் துரத்துறீங்க... ஹீரோயின் உங்களைத் துரத்துறாங்க..!”