Published:Updated:

கிலி பிராம்டர்!

கிலி பிராம்டர்!
பிரீமியம் ஸ்டோரி
கிலி பிராம்டர்!

ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் நான். அந்தப்பக்கம் அத்திப்பட்டி. அத்திப்பட்டின்னு ஒரு கடற்கரை கிராமம் இருந்துச்சு, உங்கள்ல யாருக்காச்சும் தெரியுமா?

கிலி பிராம்டர்!

ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் நான். அந்தப்பக்கம் அத்திப்பட்டி. அத்திப்பட்டின்னு ஒரு கடற்கரை கிராமம் இருந்துச்சு, உங்கள்ல யாருக்காச்சும் தெரியுமா?

Published:Updated:
கிலி பிராம்டர்!
பிரீமியம் ஸ்டோரி
கிலி பிராம்டர்!

டெலிபிராம்ப்டர் நின்னதும் அதை நம்ம மோடிஜி சமாளிச்சதும் சமீபத்திய தகராறு வரலாறு. ஒருவேளை அந்த இடத்துல நம்ம ஊர் பிரபலங்கள் இருந்திருந்தா எப்படியெல்லாம் மாத்தி சொதப்பியிருப்பாங்க தெரியுமா?

கிலி பிராம்டர்!

விஜய்:

“இண்டியன் எக்கானமி இஸ் பெஸ்ட் எக்கானமி. இந்தியால இருக்குற பல பிரச்னைகளுக்குக் காரணம் அமெரிக்கன் மல்ட்டி நேஷனல் கம்பெனிகதான். தன்னூத்து மாதிரி பல கிராமங்கள் அழிஞ்சுக்கிட்டு வர்றதுக்குக் காரணம் தண்ணீர் பிரச்னை. காண்டம்ல ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் யூஸ் பண்ற நாடுகளுக்கு, எங்க ஊரோட பொருளாதாரம் புரியாமப் போறது ஆச்சர்யமில்லை. நாம பசிச்ச பிறகு சாப்பிடுற ஒரு பீட்சா இன்னொருவருடையது. இதை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா எங்க நாட்டுல வந்து கம்பெனியப் போட்டு தண்ணிய உறியலாம். கோலா குடிச்சு கானா பாடிக் கலாய்க்கலாம்.”

கிலி பிராம்டர்!

அஜித்:

“ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் நான். அந்தப்பக்கம் அத்திப்பட்டி. அத்திப்பட்டின்னு ஒரு கடற்கரை கிராமம் இருந்துச்சு, உங்கள்ல யாருக்காச்சும் தெரியுமா? அது கதையல்ல, ஒரு கறுப்பு சரித்திரம். ரத்தம் உறையவைக்கும் சிவப்புக் காவியம். இங்கே உப்புக் காத்துல வர்ற ஈரத்துல எங்க அத்திப்பட்டியோட ரத்த வாசமும் கலந்திருக்கும். ஒரு கடற்கரை கிராமத்தையே இந்திய வரைபடத்துல இருந்து அழிச்சிடுச்சு அதிகார வர்க்கம். அதிகார வர்க்கத்தை என்கவுன்டர் பண்ணலாம்னு கையில் காப்பு மாட்டிட்டுக் கிளம்பினேன். ஆனா, லேட்டாத்தான் புரிஞ்சது, வலிமைங்கிறது உயிரைக் கொல்றதுல இல்லை, பாதுகாக்குறதுலதான் இருக்குன்னு. மத்தவங்க உயிரை எடுக்குற உரிமை யாருக்குமே கிடையாது. எனவே ரொம்ப நேரம் உங்க உயிரை எடுக்காம பேச்சை இத்தோடு நிறுத்திக்கிறேன்!”

கிலி பிராம்டர்!

கமல்:

“அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சதிராடும் இந்திய அரசின் பிரதிநிதியாக இம்மன்றத்தில் நிற்கும்போது வசந்த கால நதிகளிலே வைரமணி நினைவலைகள்! விஸ்வரூபத்திற்காக நியூயார்க் சென்றபோது என் மனதில் இந்தியத் திருநாட்டின் வரைபடமே ஓடியது. அங்கு எங்கெங்கு காணினும் சி.சி.டி.வி கேமராக்கள். உலகின் பிக்பாஸாக இந்தியா உங்களையெல்லாம் கவனிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என மனதில் வைராக்கியத்தோடு நினைத்துக்கொண்டேன். இன்று பிக்பாஸ் அல்டிமேட்டாக அது நிஜமாகி விட்டது! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. வேண்டுமென்றால் ஆப்ஸை டெலிட் செய்யலாம்.

கொரோனா இரண்டு அலைகளிலும் தாலாட்டுதே வானம் தள்ளாடுதே ஓடம் என வாழ்க்கை ஊசலாடினாலும் மீண்டு வந்து நிற்கிறோம். 150 கோடி ஊசிகளை புஜத்தில் போட்டு நிஜத்தில் நடைபயில்கிறோம். ஊசி கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி நவில்கிறேன். பூஸ்டர் போடத் துடிக்குது புஜம். ஜெயிப்பது நிஜம். மக்கள் நீதி மய்யத்துக்கு சென்டர் எதுவும் கிடையாது. ஏனென்றால், மய்யமே சென்டர்தான்!”

கிலி பிராம்டர்!

ஸ்டாலின்:

“ஆக, நான் கலைஞரின் மகனாக இந்த இடத்துல ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன். உலகத்துலேயே 500 தேர்தல் வாக்குறுதிகளை முதல் 3 மாசத்துல நிறைவேத்தின ஒரே கட்சி தி.மு.க. மாநில அரசுக்குத் திட்டக்குழு உருவாக்குனவன் நான். எல்லோரையும் வளர்ச்சிப்பாதையில கொண்டு செல்லணும்கிறதுக்காக நான் மாடா உழைக்கிறேன். மாற்று எரிசக்தியையும் மதிக்கணும்கிறதுக்காக சைக்கிள் மிதிக்கிறேன். சிறுகுறு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கத்தான் தேநீர்க்கடை செல்கிறேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக ஊழல் செஞ்ச அரசியல்வாதிங்களை தண்டிக்கவே தனி நீதிமன்றம் அமைக்கணும்னு வாக்குறுதி கொடுத்தவன் நான். இனி இந்தியப் பொருளாதாரம் மேம்பட இதுபோன்ற உலகப் பொருளாதார மன்றத்தை எங்கள் மாநிலத்திலும் உருவாக்கப்போகிறேன். நன்றி.”

கிலி பிராம்டர்!

சீமான்:

“இதென்ன உலகப் பொருளாதாரம். ஈழப் பொருளாதாரம் தெரியுமா? நீங்க எல்லோரும் ஒண்ணு விளங்கிக்கிடணும். பத்தாயிரம் டன் ஆஸ்திரேலிய அரிசிக்கப்பலை நேரில் பார்த்தவன். வன்னிக்காட்டுல ஆமை ஓடுகளைக் கவுத்தி வைத்து அதைக் கடாயாகப் பயன்படுத்தி ப்ரெட் ஆம்லெட் போட்டு சாப்பிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். மாவீரன் அண்ணன் கனவை தமிழ் நிலத்தில் நனவாக்க அதிகாரத்தை என் வசம் ஒப்படையுங்கள். இந்த நிலம் சிக்குணுச்சு நீ செத்தே என்று சொன்னதைலாம் மனசுல வெச்சுக்காதீங்க. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கத்தான் என்னிடம் டன் கணக்கில் திட்டங்கள் இருக்கு. புனுகுப்பூனை பிரட்டல்ல ஆரம்பிச்சு சித்தெறும்பு ரசம் வரை எல்லாமே வேற மாதிரி திட்டங்கள். திட்டங்களைச் செயலாக்கம் பண்ணத் தடையா இருக்குறவங்களைத் திருத்த எங்ககிட்ட பச்சைமட்டை வைத்தியமும் இருக்கு... புஹுஹுகா..!”

கிலி பிராம்டர்!

எடப்பாடி கே.பழனிசாமி:

“இந்தியப் பொருளாதாரத்தைப் போலவே தமிழகத்தில் எங்கள் ஆட்சியில்தான் பொருளாதாரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. இந்த விடியா தி.மு.க அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்துவருகிறது. இதை, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்பாத ஆணைக்கிணங்க நாங்கள் சுட்டிக்காட்டிய போதெல்லாம், ‘கொரோனாத் தொற்று அதிகரிக்கவில்லை’ என்று மழுப்பலான அறிக்கைகளை இந்த விடியா அரசு வெளியிட்டது. இந்த சந்தர்ப்பவாத அரசு, பழிவாங்கும் அரசாக மாறி பொய் வழக்குகளை எங்கள்மீது ஏவுகிறது. ராக்கெட் வேகத்தில் கொரோனாத் தொற்று பரவுகிறது. இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த இடையறாத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, எங்கள் ஆட்சியில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த் தொற்றால் சுமார் 500 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். தாமரை மலர்ந்தால் இரட்டை இலை துளிர்க்கும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism