`அவள் விகடன்' சமூக வலைதளப் பக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

*``பில்லோ புஸ் புஸ்னு ஜோரா இருக்கே... எங்க வாங்கினாங்கனு உங்க மம்மிகிட்ட கேட்டு சொல்லுடா பப்லு.'' - மஹஜூதா, சேலம்
* ‘‘என்ன ரக்ஷன் மேத்ஸ் ஹவர்ல ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருக்கே.?’’
‘‘சாரி மிஸ்... வீடியோ பிரேக் ஆகி வந்ததால ‘பிரேக் ஹவர்’னு நெனைச்சிட்டேன்!’’ - எஸ்.சுடர்விழி, புத்தூர்
* “ஆன்லைன் வகுப்பு ஓடிக்கிட்டு இருக்கு. கவனிக்காம உட்கார்ந்து இருக்க?”
‘‘சாரி மிஸ்... என்னால அவ்வளவு வேகமா ஓட முடியலை!” - ஜானகி பரந்தாமன்,கோவை 36.
* ``செப்டம்பர் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களே, நீங்கள் தயாரா?’’
‘‘நாங்க தயார்தான். பெஞ்சுக்கு ஒருத்தர், பக்கத்துல பெட், நினைச்சப்ப ஜூஸ், ஸ்நாக்ஸ் எல்லாத்தையும் தர்றதுக்கு நீங்க தயாரா மிஸ்!’’ - லக்ஷ்மி வாசன், சென்னை 33
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
“இது என்னடி மாஸ்க்கிலே டிசைன் போட்டிருக்கே..?”
“ஆமாண்டி... நான் யாரையும் பார்த்து சிரிக்கறது இல்லைன்னு ஒரே ரிப்போர்ட். அதான் இப்படி வரைஞ்சுகிட்டேன்.” - ஆர்.நேஹா யாழினி, சேலம் 30.
“ஏன் மாஸ்க்ல மூக்குக்கு ஓட்டை போட்டிருக்க?”
“எனக்குதான் மூக்கு மேல கோபம் வருமே... கோபத்துல மாஸ்க் எரிஞ்சிடக் கூடாதுனுதான்!” - ஷாந்தி, திருச்சி 16.
‘‘அந்த ரேவதி அலப்பறை தாங்க முடியல...’’
``ஏன்?’’
‘‘மேட்சிங் மாஸ்க் போட்டு வர்றவங்களுக்கு மட்டும்தான் நவராத்திரி தாம்பூலம் தருவாளாம்.’’ @srividhyaprasath
``என்னடி ஏதோ வித்தியாசமா மாஸ்க் போட்டு இருக்க?''
``இதுதான் புது மாடல் நோஸ்கட் மாஸ்க்!'' - இரா.கலாராணி, சென்னை 42.