Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

சொன்னா கேளுங்க மம்மி. எதுக்கும் மாவட்ட ஆட்சியர் அங்கிள்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க, இன்னிக்கும் லீவான்னு

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 14.12.2021

அவள் விகடன் 7.12.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

சிறப்புப் பரிசு- தவா

``ஒழுங்கு மரியாதையா ஸ்கூலுக்கு போ...’’

``சொன்னா கேளுங்க மம்மி. எதுக்கும் மாவட்ட ஆட்சியர் அங்கிள்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க, இன்னிக்கும் லீவான்னு.’’

- பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்

****

பரிசு ரூ.250

“அழாதடி பாப்பா... அப்பா சம்பளம் வாங்கிட்டு வந்ததும் முதல் வேலையா நீ கேட்ட தக்காளி துவையல், தக்காளி சட்னி, தக்காளி சோறு எல்லாத்தையும் செஞ்சு தர்றேன்.”

- வே.வெண்ணிலா, அரூர்

******
பரிசு ரூ.250

“நான் அழறமாதிரி இருந்த படத்தை எதுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸா வச்சீங்க? ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்கம்மா!''

- பா.ஜோதிமணி, திருப்பூர்

******
பரிசு ரூ.250

“ஸ்கூலுக்கு போகும்போது செல்போனை கொண்டு போகக் கூடாது. அழாம கொடுத்துடுமா...’’

“நீ தானேம்மா... செல்போனும் பாடப்புத்தகம் போலத்தான்னு சொன்னே!’’

- கே.ஆர்.சாந்தி, மதுரை-1

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவள் விகடன் 7.12.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

சிறப்புப் பரிசு தவா

“நாங்க ரெகுலர் கஸ்டமராக்கும்.”

“அதுதான் சொல்றேன்... உங்க வீட்டம்மாவுக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும்.’’

- பி.ஜானகி, கோயம்புத்தூர்-36

*****

பரிசு ரூ.250

“தீபாவளிக்கு கடையில புடவை எடுத்துப்போட்டு பழக்கமாயிடுச்சு. அதனால ஆளே இல்லைனாலும் இப்பவெல்லாம் புடவையை பிரிச்சுப் போட்டு மடிச்சா தான் நிம்மதியா இருக்கு..!”

- ஷாந்தி, திருச்சி.

*****

பரிசு ரூ.250

“வானவில் கலர்ல சேலை இருக்கா?”

“இருக்கு சார்... ஆனா ஏழு சேலையா இருக்கு. பரவாயில்லையா?’’

- இரா.கலாராணி, சென்னை-42

*****

பரிசு ரூ.250

“ஒமிக்ரான் வைரஸ் டிசைன்ல எல்லாம் இன்னும் புடவை வரலீங்க.’’

- விஜயலக்ஷ்மி, மதுரை-9