Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

அம்மா ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டவங்கதான் இனிமேல் சீரியல் பார்க்கணுமாம்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 28.12.2021

***

அவள் விகடன் 21.12.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
ஜோக்ஸ்

சிறப்புப் பரிசு - தவா

``டிவில ஒரு சீரியல்... மொபைல்ல ஒரு சீரியலா... வெளங்கிடும் போ!’’ - மஹஜூதா, சேலம்.

****
பரிசு ரூ.250

“இப்படி பக்கத்துல உட்கார்ந்து டிவி பார்த்தீங்கன்னா கண்ணு கெட்டுப்போயிடும்!”

“கண்ணு கெட்டுப்போனதால தான் பக்கத்துல உட்கார்ந்து பார்க்க வேண்டியிருக்கு!” - @இர.செல்வநிகிலா

*****
பரிசு ரூ.250

“அம்மா ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டவங்கதான் இனிமேல் சீரியல் பார்க்கணுமாம்.’’ - என்.சாந்தினி, மதுரை.

பரிசு ரூ.250

“அம்மா... கோலங்கள் சீரியல் பார்த்துக்கிட்டே சமையல் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். பாரு, சாம்பார்ல உப்புக்கு பதிலா கோலப்பொடியை போட்டுத் தொலைச்சிருக்கே…” - ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அவள் விகடன் 21.12.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

* “பாடம் முடிஞ்சிருச்சு மாணவிகளே...

ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.”

“சார்... ஒமிக்ரான் வைரஸுக்கு லீவு உண்டா?”

- அ.நூருல் ஹுதா, சென்னை-32

* ``நான் மேத்ஸ் டீச்சர்தான்... அதுக்காக மூணாவது அலை வந்தா அதோட உயரம் எவ்வளவு இருக்கும்னு கேட்கறது நல்லாயில்ல.’’

- கி.லலிதா பாலுசங்கர், வேலூர்-7

* ``நான் பாடம் நடத்துவதில் எது புரியலைன்னாலும் தாராளமா கேளுங்க...”

``நீங்க இப்ப நடத்துவது என்ன சப்ஜெக்ட் சார்?”

- பி.இலக்கியா, மதுரை-16

* ``சார் உங்ககிட்ட போன் இருந்தா கொடுங்களேன்...’’

``எதுக்குமா?’’

``கிளாஸ் டைம்ல கேம் விளையாடியே பழகிடுச்சுங்க சார்.’’

- த.கவிதா, பெருந்துறை