Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 1.2.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“ஆபரேஷன் முடிஞ்சு பேஷன்ட் கண் முழிச்சதுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்றீங்களா டாக்டர்?”

“பேஷன்ட் வயிற்றுல இருக்குற என் மொபைலுக்கு யாரும் கால் பண்ணிடக்கூடாதுன்னு பிரார்த்தனை பண்றேங்க!”

- எஸ்.ரீனு, சென்னை-126

“என்னது எல்லோரும் டாக்டரை இரண்டு தடவை திட்டிட்டு போறாங்க?”

“எல்லோரும் ரெண்டு ேடாஸ் போடுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல...’’

- பி.ராஜேஸ்வரி, மதுரை-16

“டாக்டர் கொரோனாவால நீங்க முன்னுக்கு வந்திருக்கலாம், அதுக்காக கொரோனாவுக்குக் கோயில் கட்ட நன்கொடை கேட்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்!”

- வித்யா வாசன், சென்னை-78

“அட்மிஷன்ல இருக்கிற கொரோனா நோயாளியைப் பார்க்க `மாஸ்க்’ இல்லாம உள்ளே விட மாட்டேங்கறாங்க. உங்க `மாஸ்க்’கைக் கழற்றி கொடுத்தீங்கன்னா... உள்ளே போயிட்டு வந்து பத்து நிமிஷத்துல திருப்பி தந்துடறோம்.’’

- ச.மதுஷன்மதி, கும்பகோணம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்

அவள் விகடன் 1.2.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“விடுடா, முக்கியமான மீட்டிங் இருக்கு!’’

“ஆன்லைன் கிளாஸ் வர்றப்போ, மீட்டிங் வைக்க வேணாம்னு உங்க எம்டிகிட்ட சொல்லிவைக்க மாட்டியாப்பா?’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்.

``அப்பா யூடியூப் பார்த்தது போதும்... வந்து சமைங்க சீக்கிரமா... அம்மா வெயிட்டிங்...''

அ.நூருல் ஹுதா, சென்னை-32

“வொர்க் ஃப்ரம் ஹோம்னா உனக்கு சமையல்கட்டுலதானப்பா வேலை... கம்ப்யூட்டர்ல என்னப்பா பண்ற?!”

- ஷாந்தி, திருச்சி.

ஊழியர்: ``சார்... வீட்ல என் பையன் கொடுக்கிற டார்ச்சர் தாங்க முடியல...”

மானேஜர்: ``நீங்கதானே வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றேன்னு எனக்கு டார்ச்சர் கொடுத்தீங்க.”

- ப.சுதா லட்சுமி, கம்பம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

ஜோக்ஸ்

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 8.2.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism