Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 15.2.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“ஊரடங்கை ரத்து செஞ்சிட்டாங்க... இனி நம்மோட ‘மாமூல்’ வாழ்க்கைதான் அதிகமாக பாதிக்கும்.’’

- வே.வெண்ணிலா, அரூர்.

“ஏன் டல்லா இருக்கே?’’

“சரியா சப்பாத்திகூட சுடத் தெரியலே, போலீஸ்ல அப்படி என்னதான் டிரெய்னிங் எடுத்தியோன்னு வீட்ல திட்றாங்க!’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்.

``மேடம்... அங்கே கலவரம் நடந்துகிட்டிருக்கு... அமைதியா இருக்கீங்களே...’’

``கூட்டத்துல யாரு செல்போன்ல படம் பிடிக்கிறான்னு பாரு... அதை வாங்கி பார்த்து எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.’’

- சி.சாந்தி, ஸ்ரீபெரும்புத்தூர்.

“லாக் அப், லாக் டெளன்... இது இரண்டிலேயும் நம்ம வாழ்க்கை ஓடிடும் போல இருக்கே...”

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 15.2.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“அந்த வில்லி நடிகை... சேனலுக்கு என்ன பேட்டி கொடுக்குறாங்க?”

“வெறுங்கையில் முழம் போடுவது எப்படினு!”

- ப.உமா மகேஸ்வரி, நெய்வேலி.

“இது மெகா சீரியல் ஷூட்டிங் இல்லைன்னு எப்படி கண்டுபிடிச்சே?”

“அம்மா நடிகை சிரிக்கிற மாதிரி எல்லாம் சீன் இருக்குதே.”

- எம்.கலையரசி, சேலம்.

‘‘எதுக்கு அந்த நடிகை ரொம்ப டென்ஷனா இருக்காங்க?’’

``நடிகையோட விவகாரத்து செய்திக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் கம்மியாதான் வந்திருக்கு. அதனால சம்பளத்தைக் குறைச்சுக்கன்னு தயாரிப்பாளர் சொல்லிட்டாராம்.’’

- எஸ்.குமாரி, நாமக்கல்.

“அங்கே என்ன பட ஷூட்டிங்கா?”

“அட... இன்ஸ்டாகிராம்ல போடறதுக்காகப் பக்கத்து வீட்டம்மா செய்யற அலப்பறை அது!”

- ஷாந்தி, திருச்சி.

ஜோக்ஸ்