Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

அவள் விகடன் 1.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“மம்மீஸ்... இரண்டு பேரும் கொஞ்சம் உங்கப் பேச்சை நிறுத்துறீங்களா... ஸ்கூல தாண்டி ரொம்ப தூரம் கூட்டிட்டு வந்துட்டீங்க!”

- எஸ்.சாந்தி, சென்னை-56

“ஏன் குழந்தையைத் திட்டறீங்க?”

‘`ஆன்லைன் க்ளாஸ் நீதானே அட்டென்ட் பண்ணினே... நேரடி க்ளாஸுக்கும் நீயே போய்ட்டு வான்னு அடம்பிடிக்கிறான்!”

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

“மாஸ்க் போடலையேன்னு என் மகன் ரொம்ப கவலைப்படறான்?”

“கொரோனா பயமா?”

“சேச்சே... டீச்சருக்கு தெரியாம ஸ்நாக்ஸ் எப்படி திங்கறதுனுதான்.”

- வித்யா வாசன், சென்னை-78

“தினமும் பையனை அவங்க அப்பாதானே கூட்டிட்டு வருவாரு... இன்னிக்கு நீங்க கூட்டிட்டு வர்றீங்களே...”

‘`அவர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ல இருக்கார். அவருக்கு சமையல் வேலை இன்னும் முடியல..!”

- ப.சுதாலட்சுமி, கம்பம்

ஜோக்ஸ்

அவள் விகடன் 1.3.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“சின்ன ஊசிதான் தம்பி, ஒண்ணும் பண்ணாது...’’

“ஒண்ணும் பண்ணாத ஊசியை எதுக்கு டாக்டர் வேஸ்டா போடறீங்க...’’

- பா.ஜோதிமணி, திருப்பூர்

“ஊசி போட தனியா வந்திருக்கியே...

உங்க அப்பா அம்மாவ கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானே...”

“அவங்களுக்கு ஊசின்னா பயம் டாக்டர்...’’

- ர.ரேவதி, விழுப்புரம்

``ஸ்கூல் போகப் பிடிக்கலையாம். அதனால, ஜுரம் வர்ற மாதிரி

ஊசி இருந்தா போடச் சொல்றான் டாக்டர்.’’

- சுபா தியாகு, சேலம்-9

‘‘ஊசி போட்டுட்டு பஞ்சு வைக்கிறதுக்குப் பதிலா பஞ்சு மேல ஊசி போட்டா வலிக்காம இருக்கும்ல டாக்டர்...’’

- அ.நூருல் ஹுதா, சென்னை-32

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 8.3.2022

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism