அவள் விகடன் 24.5.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“பாட்டி... பின்பக்கத்துல ஒரு பொண்ணு உன்னை வீடியோ எடுக்குது.”
“அவ இன்ஸ்டாகிராம் ஐடி வாங்கு... லைக்கைப் போடுவோம்!”
- ஷாந்தி, திருச்சி
“நாலு பேர் இருக்கிற இடத்தில் என்னை பாட்டின்னு கூப்பிட்டு மானத்தை வாங்காதே...ஆன்ட்டீன்னு கூப்பிடுன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்!”
- க.விண்ணரசி, திருவாரூர்
******

“ஊருக்கு நடுவுல கிரவுண்ட் இருக்குன்னு சொல்லி ரியல் எஸ்டேட்காரன் இப்படி ஏமாத்திட்டானே?!”
- என்.சாந்தினி, மதுரை-9
“பத்தாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி, இப்படி பைனாகுலர்ல பார்க்கறதுக்கு, பத்து பைசா செலவில்லாம வீட்டு டிவியில குளோசப்ல பார்த்திருக்கலாம் போலயே..!”
- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு
இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 31.5.2022