அவள் விகடன் 7.6.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“ஃபேஸ்புக்குல உனக்கு மட்டும் எப்படி மூவாயிரம் லைக்ஸ் வந்திருக்கு?”
“நீ போட்ட அதே கம்பங்கூழுக்கு ‘கம்பங்கீர்’னு பேரு வச்சேன். அம்புட்டுதேன்!”
- என்.கோமதி, நெல்லை-7
“சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்கனு போனியே...
என்ன ஆச்சு?''
“பாட்டி வேஷம் போடுறீங்களானு கேட்டாங்க... வேணாம்னு வந்துட்டேன்!''
- விஜயலக்ஷ்மி, மதுரை-9
“ரோட்ட கிராஸ் பண்ண உதவி பண்றேன்னு சொன்னவன் திருடன்னு எப்படி கண்டுபிடிச்ச?”
“கையைப் பிடிச்சு கூட்டிட்டு போகாம... என் காதைப் பிடிச்சு கூட்டிட்டுப் போனான்!”
- எம்.கலையரசி, சேலம்.
“நேற்றுதான் ஜோசியரு கைரேகையைப் பார்த்துட்டு `தீர்க்காயுசா இருப்பேன்'னு வாழ்த்திட்டுப் போனாரு.”
“அதுக்கென்ன இப்போ?”
“பயோமெட்ரிக் டப்பாவுல என்னுடைய கைரேகை சரியா தெரியலைன்னு ரேஷன் கடைக்காரன் பொருளே தர மாட்டேன்னு சொல்லிட்டான்!”
- ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவள் விகடன் 7.6.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“என்ன சண்டை?”
“இவன் மதியம் சாப்பாட்டுக்கு நீங்க கொடுத்த சாம்பாரை `ரசம்’னு சொன்னான்!”
“இல்லம்மா... இவதான் ரசமில்ல... `உப்பு தண்ணி’ன்னு சொன்னா!’’
- நெ.அகிலா, சங்கராபுரம்
“எதுக்கு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க..?”
``எனக்கு நீ வெச்சிருந்த ‘தக்காளி’ சாதத்தை அவன் சாப்பிட்டுட்டு ‘பிரியாணி’யை எனக்கு வச்சிருக்காம்மா..!’’
- ர.ரேவதி, விழுப்புரம்
“வீட்டை ஏன் இப்படி குப்பை மேடாக்கி வெச்சிருக்கிங்க... இன்னும் அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணியிருக் கணும்.”
“இதெல்லாம் கோபத்துல அப்பா மேல நீங்க தூக்கி எறிஞ்சதுதான். நீங்களே சுத்தம் பண்ணுங்க.”
- எம்.வெண்ணிலா, மதுரை-1
“என்கிட்டே வாலாட்டிக்கிட்டே இருக்காம்மா...”
“போன வாரம்தானே ஒட்ட நறுக்கினேன். அதுக்குள்ளே முளைச்சிடுச்சா?”
- எஸ்.ராஜலெட்சுமி, மானாமதுரை

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 14.6.2022