அவள் விகடன் 21.6.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“அம்மா, லிப்ஸ்டிக்னு நினைச்சு என் கிரையானை எடுத்து பூசிக்கிற...”
“எனக்கும் தெரியும். லிப்ஸ்டிக் தீர்ந்து போச்சு. யார்கிட்டேயும் சொல்லாதே.”
- லக்ஷ்மி வாசன், சென்னை-33.
“இந்த மேக்அப்பில் நான் நல்லா இருக்கேனா?”
“நீ ஏம்மா மேக்அப் போடுற? அக்காவை தானே பொண்ணு பார்க்க வர்றாங்க...”
“அடியேய்... நான் அக்காதான்டி!”
- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி.
“மறுபடியும் மாஸ்க் அணியறது கட்டாயம்னு அறிவிச்சா லிப்ஸ்டிக் செலவாவது மிச்சமாகும்.”
- எம்.குமுதவேணி, புதுச்சேரி-7
“இன்னிக்கு நீ மாஸ்க் போடாம ஆபீஸுக்குப் போகப் போறியா மம்மி?!”
- பி.மது மம்தா, தஞ்சாவூர்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
அவள் விகடன் 21.6.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
“நீ கேட்கற கூலி, இந்த டிராவல் பேக்கைவிட அதிகம்பா...''
“அப்ப உள்ளேயிருக்கற பொருளையெல்லாம் நீங்க தூக்கிக்கங்க. பேக்கை மட்டும் எங்கிட்ட கொடுங்க.
நீங்க கொடுக்கறதை வாங்கிக்கிறேன்.”
- ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்-36
“என்னப்பா எக்ஸ்ட்ரா ஒரு லக்கேஜ் பேக்கைத் தூக்கிட்டு வந்ததுக்கு ஐந்நூறு ரூபா கேக்குற?”
“வீல் வச்சிருக்கிற பேக்கை தள்ளிட்டு வரக்கூட உங்களுக்கு தெரியலையே அதுக்குதான்!”
- இரா.அமிர்தவர்ஷினி, புதுச்சேரி-1

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு
இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 28.6.2022