Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 19.7.2022 (சென்ற) இதழில் இந்தப் படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“சீக்கிரம் பூ கொடு பாட்டி...ஷூட்டிங்குக்கு நேரமாச்சு!”

“வேடிக்கை பாக்க போறதுக்கே இவ்வளவு அவசரமா?!”

- பி.திலகவதி, தஞ்சாவூர்

``அந்த பூக்காரம்மா ரொம்ப மரியாதை யானவங்கன்னு எப்படி சொல்றே..?’’

``அவங்க ‘வாடா’ மல்லியைக்கூட ‘வாங்க’ மல்லின்னுதான் சொல்வாங்க..!”

- ஜே.கமலம், திருநெல்வேலி-11

“உங்க கம்பெனியில எல்லாத்துக்கும் ‘பில்’ கொடுத்து ‘கிளைம்’ பண்ணிக்கலாம் தான்... அதுக்காக ஒரு முழம் பூ வாங்கிகிட்டு அதுக்கு `பில்’ கேட்டா எப்படிம்மா?”

- கார்த்திகா மூர்த்தி, கும்பகோணம்

``பூ... கிலோமீட்டர் என்ன விலைம்மா?’’

‘‘புதுசா வண்டி வாங்கியிருக்கியா கண்ணு!’’

- ‘சோலை’ சுகுணா, நாமக்கல்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 19.7.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“பக்கத்துல நின்னு ஒரு செல்ஃபி கூட எடுக்க முடியாத அளவுக்கு இவ்ளோ உயரமா வெட்டி வெச்சுருங்காங்க... என்னடி பார்க் இது?”

“ஜுராஸிக் பார்க்!”

- எஸ்.சாந்தி, சென்னை-129

“எதுக்கு இந்தப் பார்க்கில் புல் வெட்டும் ஆளைத் தேடறே?''

“காடு மாதிரி முடியை வளர்த்துக்கிட்டு ஸ்கூலுக்கு வர்ற பசங்களுக்கு, இவரை விட்டு கலைநயத்தோட வெட்டலாம்னுதான்!’’

- பி.ஜோதிமணி, திருப்பூர்

“எங்க வீட்டுக்காரர் பக்கத்துல இருக்கற ‘பார்க்’-குக்கு வான்னு மெசேஜ் அனுப்பினார். இங்கே வந்தா ஆளையே காணோமே!”

“டாஸ்மாக் ‘பார்’-க்கு வான்னு அவர் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை தவறுதலா உனக்கு அனுப்பி யிருக்க போறாரு... நல்லா படிச்சு பாரு!?”

- கார்த்திகா மூர்த்தி, கும்பகோணம்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 26.7.2022