Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 2.8.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``வீட்டுல செய்து கொண்டுவந்த சுண்டல் மிச்சமாயிருச்சு தம்பி. உன் சுண்டலோடு சேர்த்து அதை வித்துக்கொடுத்தா, உனக்கு கமிஷன் கொடுத்துடறோம்.’’

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.

“முறுக்கு விலையைக் கூடுதலா சொல்றியே...”

``இது... ஜி.எஸ்.டி ‘அரிசி’ முறுக்குங்க!''

- கா.கண்ணகி, திருநெல்வேலி-11

“வழக்கம்போல தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்தானே?”

“அதெல்லாம் அந்த காலம் சார். இப்பவெல்லாம் சீஸ் சுண்டல், சிக்கன் சுண்டல்னு புதுப்புது ஐயிட்டம்தான் வைரலா போயிட்டிருக்கு.’’

- ஜானகி பரந்தாமன், கோவை-36

“தம்பி... சுண்டல் சூடா இருக்கா?”

“தெரியாது சார். நான் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகுது.”

- ஆர்.கீதா, ஆலுவா, கேரளா.

*****

அவள் விகடன் 2.8.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``நீங்க சீட் பெல்ட் போடாட்டியும் பரவாயில்லை. உங்க நாய்க்கு கழுத்து பெல்ட்டை போட்டு உள்ளே வைங்கம்மா!''

- எஸ்.ஜானகி, சென்னை-20

“மேடம், உங்க நாயைக் கொஞ்சம் கடனா தர முடியுமா... சிக்னல்ல ஒருத்தன் நிக்காம ஓடுறான்... விரட்டிப் பிடிக்கணும்!''

- எஸ்.சாந்தி, சென்னை-129

“லைசென்ஸ் இருக்கா?”

“நாயோட கழுத்துல இருக்கு. கிட்டவந்து பாருங்க சார்!”

“மேடம், நான் கேட்டது, உங்க டிரைவிங் லைசென்ஸை?!”

- ஷாந்தி, திருச்சி-16

“மேடம், உங்க நாய் ஏன் விடாம குரைச்சிக்கிட்டே வருது?”

“ஹாரன் ரிப்பேரா இருக்கு சார். அதுக்கு மாற்று ஏற்பாடா இப்படி பயிற்சி கொடுத்திருக்கேன்!”

- சத்யா சோமசுந்தரம், சென்னை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 9.8.2022