Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 16.8.2022 (சென்ற) இதழில்கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“இதென்ன... எல்லாம் ஒத்த செருப்புகளா இருக்கே?”

“டோக்கன் வாங்காம, ஓசியில செருப்பை விட வேணாம்னு சொன்னேல்ல. இப்ப பாரு, ஒரு செருப்பை மட்டும் இங்கே போட்டிருக்காங்க. பணத்தைக் கொடுத்தாதான் இன்னொண்ணைத் தருவாங்களாம்.”

- சி.சாந்தி, ஸ்ரீபெரும்புதூர்

“புதுசெருப்பு காணாம போயிடுமேனு அரதபழசானதைப் போட்டுக்கிட்டு வந்தா,

அதையும் காணோமே!’’

“ஓல்டு ஈஸ் கோல்டுங்கறத தப்பா புரிஞ்சிகிட்டிருப்பாங்களோ?!’’

- அ.யாழினிபர்வதம், சென்னை-78

“ஏன்டீ ரொம்ப வருத்தப்படறே?”

“உள்ளே 100 ரூபாய் மொய் எழுதினது பத்தாதுனு வெளியில 900 ரூபாய் `மொய்’ எழுத வெச்சுட்டாங்களே!”

- க.விண்ணரசி, திருவாரூர்

“என்னோட செருப்பை இங்கேதானே விட்டேன்?!”

“பக்கத்துல பெரிய

மீட்டிங் நடக்குதில்ல... தேவைப்பட்டிருக்கும்.’’

- ராஜி குருஸ்வாமி, சென்னை-88

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 16.8.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“பேபி... கொஞ்சம் வேகமா முன்னால தனியா நடந்து போ. உன்னோட சேர்த்துப் பார்க்கறவங்க, என்னை ஆன்ட்டினு நினைச்சுடப் போறாங்க!”

- நெ.அகிலா, சங்கராபுரம்.

“டேய்... அட்டைய கொஞ்சம் மடக்கு. இவங்க ஃபிளைட்ல இருந்து இறங்கி வந்தவங்க இல்லை. செல்ஃபி எடுக்கறதுக்காக ரெண்டு மணி நேரமா இப்படித்தான் அங்கயும் இங்கயுமா போயி வந்துட்டு இருக்காங்க.’’

- விஜிரவி, ஈரோடு.

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு

இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 23.8.2022