Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

அவள் விகடன் 30.8.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``ஏம்மா, உன் புருஷன் காணாமப் போய் நாலு நாளாச்சு; இப்பதான் கம்ப்ளைன்ட் கொடுக்க தோணுச்சா உனக்கு?’’

``இன்னிக்குத்தான் வாஷிங்மெஷின் ரிப்பேரானது

தெரிஞ்சது ஏட்டையா...”

விஜிரவி, ஈரோடு-11

“ஜெயில்ல இருக்கிற புருஷனை பார்க்க வந்துட்டு,

‘அவன் கூட ரெண்டு நாள் தங்கிட்டு போறேன்’னு சொல்றது, கொஞ்சம்கூட நல்லாயில்லை!”

செந்தில்குமார்.எம், சென்னை-78

“புருஷனை காணோம்னு சொல்றீயே... கண்டுபிடிக்க போட்டோ வைச்சிருக்கியா!

“அதோ, நோட்டீஸ் போர்டுல திருடர்கள் போட்டோ ஒட்டி வைச்சிருக்கீங்களே... அதுல முதல் வரிசையில மூணாவது ஆளுங்க!”

- எஸ்.சத்யா சோமசுந்தரம், சென்னை-129

``உங்க வீட்டுக்காரரை எப்போதிருந்து காணோம்...’’

‘`இந்த மாதிரி நாலு மூட்டை துணி துவைச்சார்...அஞ்சாவது மூட்டையை

எடுத்து வரதுக்குள்ளே ஆள் காணாம போயிட்டார் ஸார்...’’

- எம்.கலையரசி, சேலம்-7

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவள் விகடன் 30.8.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்தவுடன் குஷி ஆயிட்டியே...

என்ன சேதி?’’

``இன்டர்வியூவுக்கு வரச்சொல்லி எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் இருந்து அழைப்பு வந்திருக்குடி!”

- ஜி.ரிஹானா பர்வீன், வேலூர்-13

“மொபைல்ல என்ன பார்க்கிறே முனியம்மா?”

“இதுல பாட்டி வைத்தியமெல்லாம் நிறைய போட்டு,

என் பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க!

- எச்.சீதாலக்ஷ்மி, ஆலுவா, கேரளா

“வெத்தலை இருந்தா கொஞ்சம் குடேன்!

“இப்பதான் ஆன்லைன் ஆர்டர் போட்டிருக்கேன்... பத்து நிமிஷத்துல வந்திடும்!”

- பா.ஜோதிமணி, திருப்பூர்

“என்னடி ரொம்ப சந்தோஷமா இருக்குற..?’’

``பின்னே... கொட்டை பாக்கை வெத்தலை உரல்ல எப்படி இடிக்கறதுன்னு யூடியூபுல வீடியோ போட்டேன். பத்தாயிரம் பேரு சப்ஸ்கிரைப் பண்ணியிருக்காங்கள்ல...’’

- ஐஸ்வர்யா ரவீந்திரன், காந்திநகர், குஜராத்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு

இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 6.9.2022