Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

அவள் விகடன் 13.9.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

``என்ன ஏட்டய்யா... `ஓடாதே .. நில்லு'ன்னு சொல்லிட்டே ஓடுறீங்க..?''

``பழக்கதோஷம்பா... திருடனை பிடிக்கிறப்ப

சொல்லி பழக்கமாகிடுச்சு..!''

- என்.உஷாதேவி, மதுரை-9

``சூப்பர் சார், மாரத்தான் போட்டியில யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு வந்து, குறிப்பிட்ட தொலைவைக் கடந்துட்டீங்களே...''

``மாரத்தானா... நான் திருடனைத்தானே துரத்திக்கிட்டு வந்தேன்!''

- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்.

``சீக்கிரமா ஓடுங்க ஏட்டயா... உங்களைத் தாண்டி நாங்க ஓடினா எங்களை, நீங்க துரத்த மாதிரி ஆயிடும்.''

- கே.பி.ஜெயந்தி, மதுரை-1

ஜோக்ஸ்

அவள் விகடன் 13.9.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“சாமான் ரொம்ப கம்மியா இருக்கு. பில் மட்டும் இவ்வளவு நீளமா இருக்கே...”

“வருமானம் குறைவா இருக்குன்னு ஸ்டோர்ஸ் முதலாளி இடையிடையே விளம்பரங்கள் போட்டு தனி வருமானம் பார்க்கிறாராம்!”

- ஜி.ரிஹானா பர்வீன், வேலூர்-13

“வாங்கியது அஞ்சு பொருள்கள்தானே... அதுக்கு இவ்வளவு நீளமான பில்லா?”

“அஞ்சு பொருளுக்கான விலைதான். ஆனால், ஏசி வரி, சேர் வரி, உட்கார்ந்த வரி, பேசிய வரி, பொருளை தடவிப் பார்த்த வரி, வேணாம்னு திருப்பி வெச்ச வரி, தும்மியதுக்கு வரி, டவுட் கேட்டதுக்கு வரி, சிரிச்சதுக்கு வரினு அது பாட்டுக்கு போகுது!”

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

``என்னது, பில்லு இவ்வளவு நீளமா இருக்கு..?’’

“பில்லை கொஞ்சம் பார்த்துப் போடுங்க... போன தடவை குறைச்சுப் போட்டுட்டீங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிருக்காங்க!''

- ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி

‘`புதுசா பில் போடுறவருக்கு சரியான டிரெய்னிங் இல்லைன்னு

சொல்றியே ஏன்?’’

‘`நூறு சாக்லேட் கொண்ட ஒரு டப்பாவை பர்சேஸ் பண்ணினேன்... இவரு ஒவ்வொரு சாக்லேட்டையும் தனித்தனியா பில்லுல போட்டிருக்கார்!’’

- எம்.கலையரசி, சேலம்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு

இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 20.9.2022