லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 11.10.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“இவ்வளவு புடவை வாங்கியிருக்கியே... எனக்கு ஒரே ஒரு துண்டாவது வாங்கணும்னு தோணலையா உனக்கு.‌..”

“அதான் ‘பில்’லே துண்டு நீளத்துக்கு இருக்கே... அதுவே போதும்னு நினைச்சுட்டேன்!”

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

“என்னது புதுசா வந்த டிசைன்லே ஒரு சேலை எடுக்குறேன்னு சொல்லிட்டு இவ்வளவு சேலை வாங்கியிருக்கே?’’

“நான் என்னங்க பண்ணறது... புதுசா நாற்பது டிசைன் வந்திடுச்சு...’’

- பி.பொன்காவியா, மதுரை-16

“லிஸ்ட்ல 400 ரூபா கூடுதலா சேர்த்திருக்காங்களே, ஏன்?”

“அது கடை ஓனர் நடிச்ச படத்தைப் பார்க்கக் கொடுத்த கட்டாய டிக்கெட் கட்டணமாம்!”

- ஷாந்தி, திருச்சி-16

‘‘கடவுள் எந்த ரூபத்துலேயும் வருவாருங்கறது சரின்னு நினைக்கிறேன். பில்லை பாரு... ஆஞ்சநேயர் வாலு ரூபத்துல வந்திருக்கு.”

- ஜானகி பரந்தாமன், கோவை-36

அவள் விகடன் 11.10.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம்.

வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“அதோ தெரியுதே பங்களா... அது

ஒரு காலத்துல சுந்தர சோழர் அரண்மனை மாதிரி இருந்தது.”

“ இப்போ..‌‌‌‌?”

“ ‘சுந்தர்.சி’யோட ‘அரண்மனை’ மாதிரி ஆயிடுச்சு...”

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

***

“அது அரசியல்வாதியோட வீடாகத்தான் இருக்கும்னு எப்படி சொல்ற?”

“ஐ.டி ரெய்டுக்கு பயந்து வீட்டைச் சுற்றி குழி வெட்டி வெச்சிருக்காரே!”

- செ.செளமியா, அரூர்

***

“அரண்மனை மாதிரி வீடுன்னு தரகர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன். அரண்மனையைச் சுற்றி அகழி இருக்கற மாதிரி வீட்டை சுற்றி சாக்கடை தோண்டி இருக்காங்க!’’

- விஜயலக்ஷ்மி, மதுரை-9

“வீட்டைச் சுத்தி என்ன குழி?”

****

“வீடு கட்ட மணல் கிடைக்கல, அதனால வாசல்லயே குழி தோண்டி மணலை எடுத்துக்கிட்டோம்..!”

- ஜெயசந்தியா, திருச்சி

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு

இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 18.10.2022