ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 8.11.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை கார்த்திகை தீபத்துக்கு எடுத்து வைப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். பலகாரங்களையும் இப்படி கார்த்திகைக்குனு ஃபிரிட்ஜ்ல எடுத்து வெச்சிருக்கறது டூ மச்!” - ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

“தீபாவளி நேரத்துல எங்க வீட்டு ஃபிரிட்ஜை பயன்படுத்திக்கோன்னு பக்கத்துக்கு வீட்டம்மாகிட்டே சொன்னது தப்பா போச்சு... அவ வீட்டுல மிச்சம் மீதியான மொத்தத்தையும் வந்து அடுக்கிட்டா பாரு.” - எஸ்.ஜானகி, சென்னை-20

“இப்பத்தானே கடைக்காரர் ஃபிரிட்ஜை இறக்கிட்டுப் போறார்... அதுக்குள்ள ஃபிரிட்ஜ் முழுவதும் நிரம்பி வழியுதே... எப்படி?”

“இ.எம்.ஐ-யில வாங்காம கேஷா கொடுத்து ஃபிரிட்ஜை வாங்குறவங்களுக்கு தீபாவளிப் பலகாரங்கள் ஃப்ரீன்னு சொன்னாங்க... அதான் வாங்கிட்டேன்!” - ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46

“யூடியூப்ல பார்த்ததை எல்லாம் சமைக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா... இப்பப் பாரு ஃபிரிட்ஜே ரொம்பிக் கிடக்கு!”
- பா.ஜோதிமணி, திருப்பூர்

அவள் விகடன் 8.11.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“நம்மள மாதிரி துப்புரவுத் தொழிலாளர்கள் குறைகள் தீர்க்க போராட்டம் நடத்தணும்னு தலைவர் நேத்து மீட்டிங் போட்டு பேசினாரே... என்ன ஆச்சு?’’

“ஒண்ணும் ஆகலை... மீட்டிங்கில் சாப்பிட்டு போட்ட குப்பைகளைப் பெருக்கித் தள்ளவே எக்ஸ்ட்ரா வேலை பார்க்கற மாதிரி ஆச்சு.’’ - விஜயலக்ஷ்மி, மதுரை-9

“ ‘இங்கு குப்பைகளைக் கொட்டாதீர்கள்’னு போர்டு இல்லாதப்ப... ஒருத்தரும் குப்பையை கொட்டல... போர்டு வெச்சதும் பார்த்தியா எவ்வளவு குப்பை..?” - கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்

“ரோட்டைப் பெருக்கும்போது, லட்சுமி படம் போட்ட ஐயாயிரம் ரூபாய் நோட்டு ஒண்ணு கிடைச்சது!’’

“ஆமா... எனக்குக்கூட மோடி படம் போட்ட பத்தாயிரம் ரூபாய் நோட்டு கிடைச்சது... தேவையில்லாத குப்பைகளைக் கிளறுறத விட்டுட்டு வேலையைப் பாரு.’’ - பி.ஜோதிமணி, திருப்பூர்-4

“எதுக்கு குப்பையை எல்லாம் அள்ளிப்போடாம, ஒண்ணா சேர்த்து வைச்சிருக்கே..?”

“தூய்மை இந்தியா திட்டத்துக்காக குப்பையை அள்றதுக்கு அமைச்சர் வர்றாராம்..!” - எஸ்.சாந்தி, சென்னை-129

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 15.11.2022