ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 22.11.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்!

“ஏம்பா இவ்வளவு குறைவா வாடகை பணம் கேட்கிறீயே... உனக்கு எப்படி கட்டுபடி ஆகுது?”

“சும்மா வளவளன்னு பேசாம சட்டுன்னு ஏறுங்க... ஆட்டோக்காரர் வர்றதுக்குள்ள வண்டியை எடுக்கணும்.”

- பி.மணியம்மாள், தூத்துக்குடி

“எதுக்கு தம்பி மீட்டருக்கு மேல ஐம்பது ரூபாய் அதிகமா கேட்குற..?”

“தண்ணியில போகும்போது மிதந்து போச்சே... அதுக்கான போட்டிங் சார்ஜ் சார்..!”

- வெ.ராஜம்மாள், தர்மபுரி

“ஏம்ப்பா... நூறு ரூபாய் கொடுத்து மீதி சில்லறை கேட்டா, ‘சில்லறை இல்லை... வேணும்னா மீதி சில்லறைக்கு இன்னும் கொஞ்சம் தூரம் கொண்டு போய் விடுறேன்னு’ சொல்றீயே... உனக்கே

இது நல்லா இருக்கா!?”

- என்.உஷாதேவி, மதுரை-9

ஜோக்ஸ்!

“இது நம்ம தலைவரோட மால்னு எப்படி கண்டுபிடிச்சே?”

‘`ஏரியை ஆக்கிரமிச்சு வேற யாரால கட்ட முடியும்?!’’

- ஆர்.சுகன்யா, சென்னை-117

“எவ்ளோ பெரிய கடை... உள்ளே போய் நாலு பட்டாபட்டி நிக்கர் வாங்கி வரலாமா..?”

“ஏலே... இங்க நாலு பட்டாபட்டி நிக்கர்‌ வாங்கணும்னா கொட்டாம்பட்டியில இருக்கிற கொய்யா தோப்பை அடமானம் போடணும்... பேசாம வா..!”

- ரா.மாலினி, திருக்கோவிலூர்

``அண்ணே... நாம தலையிலே துண்டும், வேஷ்டியும் கட்டிக்கிட்டுப் போனா உள்ளே விடுவாங்களா..?”

“அட அங்க பாரு... அரைக்கால்

டவுசர் போட்டுக்கிட்டு

போறவங்களையே ஒண்ணும் சொல்லல... வா உள்ளே போலாம்!”

- பி.பானுமதி, சேலம்-30

ஜோக்ஸ்!

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 29.11.2022