``போர் எத்தனை மணிக்கு முடியும் பிரபோ..?’’

``ஏன் கேட்கிறாய் மகாராணி..?’’

``ஃபேஸ்புக்கில் `RIP' போடத்தான்..’’

- பர்வீன் யூனுஸ்

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை ஆட்சிக்கு வந்தபிறகு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முன்பாகவே வாக்குறுதி கொடுத்து உங்களை பயம்காட்ட விரும்பவில்லை!’’

- அஜித்

“இந்த வருஷம் பட்டாசுல எத்தனை வகை புதுசா வந்திருக்குங்க?”

“எதுக்கு சார் கேட்கறீங்க... பெரிய ஆர்டர் ஏதாவது எங்களுக்குக் கொடுக்கப் போறீங்களா?”

“ஊஹும். பத்திரிகைக்கு தீபாவளி ஜோக்ஸ் எழுதத்தான் கேட்டேன்!”

- மலர்சூர்யா

``எண்பது பேரோட கூட்டு முயற்சின்னு, உங்க டைரக்டர் புதுப்படத்துக்கு விளம்பரம் கொடுத்திருக்காரே... எண்பது தயாரிப்பாளர்களா?’’

``ஒவ்வொரு படத்திலும் ஒரு சீன்னு எண்பது படத்தில காப்பி அடிச்சதுங்க!’’

- ஜி.ஆர்.ராஜேந்திரன்

``மன்னா, நமது வாளுக்கு வேலை வந்துவிட்டது!’’

``ஐயய்யோ, மறுபடியும் போரா?!’’

``சாணை பிடிப்பவர் வந்திருக்கிறார். பதறாமல் வாளைக் கொடுங்கள்!’’

- திருப்பூர் சாரதி

``மன்னர் குதிரையை மாற்றுகிறாரே... ஏன்?’’

``போர் என்றதும் குதிரை பதுங்கு குழிக்குச் செல்லாமல் போர்க்களத்துக்குப் போயிடுச்சாம்!’’

- எஸ்.முகம்மது யூசுப்

`` `இந்த மனைப்பிரிவில் 100% மழை நீர் சேகரிப்பு உள்ளது'னு விளம்பரம் செஞ்சிருக்கீங்களே, உண்மையா?!’’

``பின்னே, மழை நீர் சேரும் இடத்தில்தானே மனைப்பிரிவே இருக்கு!’’

- கி.ரவிக்குமார்

தயாரிப்பாளர்: ஓடிடியில் வெளியான நம்ம படத்தை, தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு எந்த மாதிரி புரொமோ ரெடி பண்ணி வெச்சிருக்கீங்க?

இயக்குநர்: ஓடிடியில்கூட ஓடாத திரைப்படம்னுதான்.

- பெ.பாலசுப்ரமணி

``நான் பினாமிகளின் பேரில் சொத்து சேர்த்து வைத்திருப்பதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!’’

``தலைவருக்கு என்ன ஆச்சு?’’

``சில பினாமிங்க ஓவரா லந்து பண்ணுறாங்களாம்!’’

- அஜித்

``என்னது, நகர்வலம் போன மன்னரை அடையாளம் தெரியாமல் தாக்கிவிட்டார்களா?!’’

``அடையாளம் தெரியாததால்தான் தாக்கியதோடு விட்டார்கள்!’’

- திருப்பூர் சாரதி

``தலைவர் வீட்டில் நடந்த ரெய்டில் 50 லட்சம் ரூபாய் சிக்கியதுக்கு தலைவர் நன்றி சொன்னாராமே?’’

``ஆமாம், எங்கே வெச்சோம்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தாராம்!’’

- கி.ரவிக்குமார்

``என்னய்யா, ஆன்லைன் மீட்டிங்ல ஒரு அம்மா குச்சியைக்காட்டி மிரட்டுது?!’’

``லிங்க்கை மாத்தி உங்க பையனோட ஆன்லைன் கிளாஸ் லிங்க்ல போயிருக்கீங்க தலைவரே!’’