Published:Updated:

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

நம்ம வூட்டுப் புள்ளீங்க எல்லாம் எவ்ளோ பயங்கர பொறுப்ஸுங்கிறதை ஆன்லைன் கிளாஸ்தான் காமிச்சுக் கொடுத்திருக்கு

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

நம்ம வூட்டுப் புள்ளீங்க எல்லாம் எவ்ளோ பயங்கர பொறுப்ஸுங்கிறதை ஆன்லைன் கிளாஸ்தான் காமிச்சுக் கொடுத்திருக்கு

Published:Updated:
அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

சேரை சுத்தி சாக்லெட்ல ஆரம்பிச்சு வீல் சிப்ஸ் வரைக்கும் நாலைஞ்சு ஸ்நாக்ஸ் டப்பா. காதுல பட்டும்படாம ஹெட்போனு. ஆன்லைன் வகுப்புகளை இப்படித்தான் செமத்தியா என்ஜாய் பண்ணிட்டிருக்குங்க பொடிசுங்க. அம்மாக்களும் ஆசிரியர்களும்தான் டி.வி பொட்டிக்குள்ள தலையை விட்ட வடிவேலு மாதிரி இருக்காங்க. கொ.மு.வுல பள்ளிக்கூடத்துக்குக் கிளம்ப காலையில ஆறு மணிக்கெல்லாம் சிரமப்பட்டுக் கண்ணு தொறந்த சின்னஞ்சிறுசுங்க, இப்போ எட்டரை மணி கிளாஸுக்கு எட்டு இருவத்தஞ்சுக்கு பாதிக் கண்ணைத் தொறந்து `லேப் டாப்பை லாகின் பண்ணும்மா'ன்னு ஆர்டர் போடுதுங்க. எப்ப எழுந்து, எப்ப குளிச்சுன்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள, `ஆன்லைன் கிளாஸுக்கு பல்லு வெளக்குனா போதும்'னு நமக்கே அதிரடியா பதிலடி கொடுக்குதுங்க. உன் தூங்குமூஞ்சியைப் பார்த்து, நீ குளிக்கலைங்கிறதை மிஸ் கண்டுபிடிச்சுருவாங்க'ன்னா, `பவுடரை என் முகத்துல கொஞ்சம் தூவி விடு மம்மீ'ன்னு நமக்கே விபூதி அடிக்குதுங்க.

நம்ம வூட்டுப் புள்ளீங்க எல்லாம் எவ்ளோ பயங்கர பொறுப்ஸுங்கிறதை ஆன்லைன் கிளாஸ்தான் காமிச்சுக் கொடுத்திருக்கு. லிஸ்ட்டைச் சொல்றேன். ஒவ்வொண்ணுத்துக்கும் மூக்குத்தி அம்மன் நயன்தாரா கணக்கா `ஆங்'னு சொன்னீங்கன்னா நீங்களும் என் இனம்தான்!

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

`ம்மா... அர்ஜென்டா டூ பாத்ரூம் போகணும்'

`போ...'

`பச்... அது எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நேரம் என் கிளாஸை அட்டெண்ட் பண்ணு.'

`என்னது?'

‘பாத்ரூம் போற கேப்புல கிளாஸ்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணும்ல?'

`அம்மா, ஓடி வா ஓடி வா. யோகா கிளாஸ் ஆரம்பிச்சிடுச்சு.'

`அதுக்கு, நான் எதுக்கு?'

`லேப்டாப் முன்னாடி தலைகீழா நிக்கணும். என் காலை கொஞ்சம் மேல தூக்கு...'

`ம்மா, கிளாஸ் வொர்க்கை நான் எழுதிடுறேன். ஹோம் வொர்க்கை மட்டும் நீ எழுதிடுவியாம்.'

`ஹோம் வொர்க் நிறைய இருக்குதோ'

`கிளாஸ் வொர்க்கை போட்டோ எடுத்து மிஸ்ஸுக்கு மெயில் பண்ணணும். அதான்.'

`உனக்கும் இந்தி தெரியாது, எனக்கும் இந்தி தெரியாது'

`ஆமா, தங்கம்'

`அப்போ ஹெட் செட்ல உனக்கு ஒரு காது, எனக்கு ஒரு காது வெச்சுக்கிட்டு கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாமா?'

`ஏன்டா, லேப்டாப் முன்னாடி குதிச்சிட்டிருக்கே. கீழ் வீட்டுக்காரங்க கத்தப்போறாங்க'

`என் பையனுக்கு பி.டி. கிளாஸ் ஆரம்பிக்கப் போகுது. வார்ம் அப் பண்ணிட்டிருக்கான்னு சொல்லு.'

`இன்னிக்கு ஆன்லைன் கிளாஸை ஸ்லீவ்லெஸ் டிரஸ், தொப்பி, கூலிங்கிளாஸ் போட்டுட்டுதான் அட்டெண்ட் பண்ணணும்?'

`வொய்?'

`எங்க ஸ்கூல்ல இன்னிக்கு விர்ச்சுவல் டூர் கூட்டிட்டுப் போறாங்க.'

எல்லாத்துக்கும் உச்சக்கட்டமா டீச்சர்ஸ் - மம்மி குரூப்ல ஒரு வரிக்கு ரெண்டு மேம் போட்ட படுபவ்ய மெசேஜ் ஒண்ணு. `மேம். என் பொண்ணுக்கு லைட்டா இருமல் மேம். அவளுக்கு பதிலா என்னை கிளாஸ் அட்டெண்ட் பண்ணச் சொல்றா மேம்... செய்யலாமா மேம்?’

அப்புராணி அம்மாக்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்குதுங்க..?

இதெல்லாம்கூட பரவாயில்லங்க. ஆன்லைன் கிளாஸ் டெஸ்ட்டையெல்லாம் வேற லெவல்ல அட்டெண்ட் பண்ணுதுங்க. `ம்மா..... கீ போர்ட்ல `A' எங்க இருக்கு `B' எங்க இருக்குன்னு எனக்குத் தெரியலை. ஆபீஸுக்கு பர்மிஷன் போட்டுட்டு நீயே என் டெஸ்ட்டை எழுதிடேன்', `இந்தக் கணக்கை சால்வ் பண்ண முடியலை. சீக்கிரமா மம்மீஸ் குருப்புல ஆன்சர் கேட்டுச் சொல்லு', `பாகிஸ்தான் தலைநகரம் எதுன்னு கூகுள்ல செக் பண்ணிச் சொல்லேன்', `மிக்ஸியை ஆஃப் பண்ணிட்டு போட்டோ சின்தஸிஸ்ஸுக்கு ஸ்பெல்லிங் சொல்லும்மா...'

டீச்சர்ஸ் நிலைமை இதைவிடப் பாவம். பொடிசுகளை ம்யூட்ல போடுறதுக்குள்ள `மீஸ்... மீஸ்... குட்மார்னிங் மீஸ்'னு அட் அ டைம் கீச் கீச்னு நாப்பது, அம்பது பிஞ்சுக்குரல்கள். ஹெட் செட்டை அட்ஜஸ்ட் பண்ற மாதிரி அதைக் காதை விட்டு நகர்த்துற டீச்சர்ஸெல்லாம், `நான் ரொம்பப் பாவம் மை சன்' ரகம். ஒரு கிளாஸுக்கு ஆறு பிள்ளைகளை மட்டும் பிரசன்ட்ரா போட்டா, அதுல ஒண்ணு டீச்சரையே ம்யூட்ல போட்டு விட்டுடுது. ம்யூட்டை எடுக்கத் தெரியாத அப்பாவி டீச்சர்ஸ் ஐ.டி டிபார்ட்மென்ட்டை உதவிக்குக் கூப்பிட்டு பிரச்னையை சரி செஞ்சுட்டு வர்றதுக்குள்ள கிளாஸ் ஓவர் ஓவர்!

சில பள்ளிக்கூடங்கள்ல ஆன்லைன் கிளாஸுக்கு ரெண்டு டீச்சர்ஸ் வர்றாங்க. தெரியாத்தனமா ஆளுக்கொரு லிங்க்கை கிரியேட் பண்ணிட்டு லேப் டாப்பை விட்டு நகர்ற கேப்புல, டீச்சர் இல்லாத ஆன்லைன் கிளாஸ் ரூம்ல எக்கச்சக்க பொடிமாஸ் நுழைஞ்சிடுதுங்க. அப்புறமென்ன, டீச்சர் இல்லாத வகுப்பறையில என்னல்லாம் நடக்குமோ அத்தனை குறும்பும் ஆன்லைன் கிளாஸ்லேயும் நடக்குது. இன்னொரு லிங்க்ல `இன்னிக்கு நிறைய பிள்ளைங்க லீவு போல'ன்னு அப்புராணியா கிளாஸ் எடுத்திட்டிருக்காங்க டீச்சர்ஸ்.

அட்ராசிட்டி@ஆன்லைன் கிளாஸ்!

உங்க வீட்டுப் பொடிசுங்க லேப் டாப்புக்குள்ள தலையை விட்டுக்கிட்டு, அப்பப்போ உங்களைத் திருட்டுப்பார்வை பார்த்துக்கிட்டு கெக்க பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருந்தா மேடம்/சார் எக்ஸ்ட்ரா லிங்க்குல ஃபிரெண்ட்ஸோட சாட்டிங்ல இருக்காங்கன்னு அர்த்தம். பார்த்து சூதானமா இருந்துக்கோங்க மம்மீஸ்.

ஆன்லைன் கிளாஸ்லேயும் பாடங்களை நடத்தி முடிச்சதும் ஆளுக்கொரு பத்தி வாசிக்க வைக்கிறாங்க. விருப்பமிருக்கிற பொடிசுங்க `கை உயர்த்துற' சிம்பலைத் தட்டிவிடும். `பேக் பெஞ்ச்' குட்டீஸ் நொறுக்குத்தீனி டப்பாவோட வாய்க்கும் கைக்கும் சண்டைபோட ஆரம்பிச்சிடுதுங்க. 'ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கிட்டே கிளாஸ் கவனிக்கிறேம்மா ப்ளீஸ்'னு கன்னத்தை எச்சி பண்ணுச்சுங்கன்னா, பாடத்தை வாசிக்காம டீச்சருக்கு டேக்கா கொடுக்குதுங்கன்னு அர்த்தம்!

கொரோனாவுக்கு முன்னாடி ஓடிப்போயி மிஸ்ஸோட ஹேண்ட் பேகை வாங்கி காக்கா புடிச்ச வாண்டுங்க, ஆன்லைன் கிளாஸ்ல `மீஸ் மீஸ், உங்க வீடு ரொம்ப க்யூட்டா இருக்கு'ன்னு நியூ நார்மல் காக்கா பிடிக்குதுங்க. டெக்கி வாண்டுங்க, `காட்ஸில்லா வெர்சஸ் காங்' பேக்கிரவுண்ட் வெச்சா உங்களுக்கு சூப்பரா இருக்கும் மிஸ்'னு கலாய் ஐடியா கொடுக்குதுங்க!

எக்ஸ்க்யூஸ் மீ... யாருக்காவது ப்ரைமரி ஸ்கூல் எப்போ தொறக்கும்னு தெரியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism