Published:Updated:

62 பேரை பலி வாங்கிய குவாட்டா மாலா எரிமலை வெடிப்புக்கு என்ன காரணம்?

62 பேரை பலி வாங்கிய குவாட்டா மாலா எரிமலை வெடிப்புக்கு என்ன காரணம்?

இந்த நிகழ்வு குறித்து கூறும் அறிவியலாளர்கள், எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் Fuego எரிமலை அமைந்திருப்பது "ரிங் ஆப் பயர்" என்று அழைக்கப்படும் காஸ்மிக் கதிர்கள் மிகுந்த இடம்.

62 பேரை பலி வாங்கிய குவாட்டா மாலா எரிமலை வெடிப்புக்கு என்ன காரணம்?

இந்த நிகழ்வு குறித்து கூறும் அறிவியலாளர்கள், எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் Fuego எரிமலை அமைந்திருப்பது "ரிங் ஆப் பயர்" என்று அழைக்கப்படும் காஸ்மிக் கதிர்கள் மிகுந்த இடம்.

Published:Updated:
62 பேரை பலி வாங்கிய குவாட்டா மாலா எரிமலை வெடிப்புக்கு என்ன காரணம்?

கட்டுக்கடங்காமல் சீறிக்கொண்டிருக்கும் எரிமலை வெடித்துச் சிதறிய கோரச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தேறியுள்ளது. மத்திய அமெரிக்காவின் குவாட்டா மாலாவில் Fuego என்று அழைக்கப்படும் இந்த எரிமலை வெடித்துச் சிதறுவது இந்த வருடத்தில் இது இரண்டாவது முறையாகும். 15 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாடான குவாட்டமாலாவில், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை இந்த எரிமலை வெடிப்பு சம்பவம் நிகழ்த்தியுள்ளது.

இதுவரை 62க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த இயற்கைப் பேரழிவில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எரிமலையிலிருந்து வெளிவரும் சாம்பல் புகை 10 கி.மீ உயரத்துக்கு எழும்பி சாலையெங்கும் நிரம்பிக் காணப்படுவதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. பல கிராமங்களைப் பாதுகாப்பு பணியினர் நெருங்க முடியாததால் இன்னும் பலர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இது குறித்து கூறும் ஒரு பாதுகாப்பு பணி வீரர், ``சிலரின் அழுகுரல்கள் எங்களை எட்டினாலும் கூட, சாலை முழுவதும் நிரம்பிக் கிடக்கும் லாவா தடையாக இருப்பதால், விரைந்து சென்று உதவ முடியா நிலையில் இருக்கிறோம்." என்கிறார்.

இதுவரை 3100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். 1.7 மில்லியன் மக்கள் இந்த எரிமலை வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவாட்டாமாலாவின் எரிமலையில் வெடிப்பு வெறும் லாவா வெளியேறும் நிகழ்வாக மட்டுமல்லாமல் pyroclastic flow என்று அழைக்கப்படும் மிக மோசமான எரிமலை வெடிப்பை நிகழ்த்தியுள்ளது. பலவகையான சாம்பல், பாறைகள், எரிமலை வாயுக்கள் நிறைந்த கலவைகள் அதிவேகமாக அதாவது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில், 100 டிகிரி (1300 டிகிரி பாரன்ஹீட்) வெப்பத்தோடு வெடித்துச் சிதறி வெளியேறுவதால் எரிமலை தீக்குழம்பாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் தப்பி ஓடக் கூட இயலாத வகையில் குவாட்டா மாலா மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து கூறும் அறிவியலாளர்கள், எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் Fuego எரிமலை அமைந்திருப்பது "ரிங் ஆப் பயர்" என்று அழைக்கப்படும் காஸ்மிக் கதிர்கள் மிகுந்த இடம். இந்தக் கோரமான எரிமலை வெடிப்புக்கு இதுவே காரணமாகும். டெக்ட்டானிக் தட்டுகள் என்று அழைக்கப்படும் நில அடுக்கு தட்டுகள் இந்தப் பகுதியில் ஒன்றையொன்று மோதிகோள்வதால் ஏற்படும் அதிர்வுகள் தொடர்ந்து காஸ்மிக் கதிர்களை வெளியிடுகின்றன. இதனால் தான் இந்த ரிங் ஆப் பயர் என்று சொல்லப்படும் இடத்தில் உலகின் மூன்றில் ஒரு பங்கு எரிமலைகள் அமைந்துள்ளன. 

இதுபோன்ற எரிமலை வெடிப்பு இயல்பான ஒன்றாக இருப்பினும் அதிகரித்து வரும் எரிமலை சம்பவங்களுக்கான காரணங்களாக புவி, நிலவு, சூரியன் இவற்றுக்கு இடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.. இதன் விளைவாகப் புவியின் சுற்றுவட்ட வேகத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. இவை நில அடுக்கு தட்டுகளில் உருவாக்கும் நில அதிர்வுகளே இத்தகைய இயற்கை சீற்றங்களை அனிச்சையாக உருவாக்குகின்றன. இதோடு மாறிவரும் காலநிலை மாற்றங்களும், வெப்பநிலை உயர்வும் எரிமலை வெடிப்புக்கான முக்கிய காரணமாக 2009-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சுட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு எரிமலையின் வேகம் பெரும்பாலும் குறைந்துவிட்டது. இதன்பிறகு பெரிதான ஆபத்து இல்லை என்று குவாட்டமாலாவின் தேசிய நிலநடுக்கவியல் துறைத் தலைவர் எட்டி சான்சென்ஸ் கூறியுள்ளார். ஆனாலும் சாலையெங்கும் நிரம்பி வழியும் ஆபத்து மிகுந்த சாம்பல் நீர்நிலைகளில் கலந்து விடும் ஆபத்து சுற்றுச்சூழல் ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பல நாட்டுத் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் இரங்கலைத் தெரிவித்ததோடு உணவு, மருத்துவம் என்று தங்களின் உதவிக்கரத்தையும் நீட்டியுள்ளனர்.

மீண்டு வரவேண்டும் குவாட்டா மாலா.