எழுத்தாளர்களுக்கான மிக உயரிய கௌரவமாகக் கருதப்படுவது புக்கர் பரிசு. அத்தகைய பெருமைமிகு புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் எழுத்தாளர் என்ற பெருமையை கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து இந்த விருதுக்காக நூற்றுக்கணக்கான நாவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பரிந்துரைப் பட்டியலுக்குச் சென்று, விருதுக்கும் தேர்வானது கீதாஞ்சலி ஸ்ரீயின் படைப்பு.
மே 26-ம் தேதி வியாழன் அன்று நடைபெற்ற சர்வதேச புக்கர் பரிசு விழாவில், கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. இவர் எழுதிய ரெட் சமாதி (Ret Samadhi) என்ற இந்தி நாவலின் மொழிபெயர்ப்பை, தேசி ராக்வெல் என்பவர் `தாம்ப் ஆஃப் சாண்ட்' (Tomb of Sand) என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருந்தார். இந்தப் புத்தகமே புக்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, புக்கர் விருதுக்குத் தேர்வான முதல் இந்தி மொழி புத்தகமும் இதுதான் என்ற பெருமையை ரெட் சமாதி பெற்றுள்ளது. இந்தப் புத்தகம் சுதந்திரத்துக்கு முன்பாக நடந்த பிரிவினைக்குப் பின், கணவரை இழந்த வயதான பெண்ணுக்கு ஏற்படும் அனுபவங்களைப் பற்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த புக்கர் பரிசை, லண்டனில் உள்ள 5 நீதிபதிகள் கொண்ட தேர்வுக்குழுவானது தேர்வு செய்யும். விருதுக்குப் பரிந்துரைத்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி புத்தகமும் இதுதான். சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் பெண் இந்தி எழுத்தாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச புக்கர் பரிசை வென்ற கீதாஞ்சல ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.