நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘பட்ஜெட்டும் நீங்களும்’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தின. இந்த நிகழ்வில் பேசிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘மத்திய அரசு பங்கு விலக்கலை மேற்கொள்ளும்போது, அதைக் கொண்டு தொழில் துறையை மேம்படுத்தினால், நாட்டுக்கு நல்லது. காப்பீடு போன்ற துறைசார்ந்த நிறுவனங்களில் அரசின் பங்கு மூலதனம் 100 சதவிகிதமாக இருப்பது நல்லது” என்றார்.

கு.ஞானசம்பந்தன் பேசும்போது, “என் தந்தை எங்களுக்கு சேமிப்பு, செலவு ஆகியவற்றுக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆடம்பரம், கஞ்சத்தனம், சிக்கனம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை நாங்கள் மறக்க முடியாதபடிக்கு எடுத்துச் சொன்னார்’’ என்றார்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் கே.எஸ்.ராவ் பேசும்போது, “மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவு அதிகரிக்கப்பட்டிருப்பதால், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி காணும்” என்றார். முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் எஸ். குருராஜ் பேசும்போது, ‘‘பி.எஃப்க்கு போடப் பட்டிருக்கும் வட்டி மீதான வரி தனிநபர்களைப் பெரிதாகப் பாதிக்காது. வட்டிக்கு வரி போட்டாலும் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் கவர்ச்சி கரமான வருமானத்தைதான் கொடுக்கும்’’ என்றார்.

வீடியோ பார்க்க : https://bit.ly/2LtLaUb