Published:Updated:

ஓய்வுக்கால முதலீடு... எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

வ.நாகப்பன்,  எஸ்.குருராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், எஸ்.குருராஜ்

முதலீடு

ஓய்வுக்கால முதலீடு... எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

முதலீடு

Published:Updated:
வ.நாகப்பன்,  எஸ்.குருராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன், எஸ்.குருராஜ்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய ‘ஓய்வுக் காலத்துக்கான சரியான திட்டமிடல்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் முதலில் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கல்விப் பிரிவு மண்டல மேலாளர் எஸ்.குருராஜ், “ஓய்வுக்கால முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. இன்றைக்கு அரசு ஊழியர்களுக்குக்கூட பென்ஷன் இல்லை. எனவே, அனைவரும் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். முதல் சம்பளத்திலிருந்தே சேமிக்க வேண்டும்” என்றார்.

வ.நாகப்பன்,  எஸ்.குருராஜ்
வ.நாகப்பன், எஸ்.குருராஜ்

அடுத்து குழு விவாதம் நடந்தது. இதற்கு நடுவராக ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் க.சுமாமிநாதன் செயல்பட்டார். அவர் ஓய்வுக் கால திட்டமிடல் மற்றும் முதலீடுகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் எஸ்.குருராஜ் பதில் அளித்தனர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வ.நாகப்பன், “பணவீக்க விகிதம் 10%, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வருமானம் 6% என்றால் உண்மையான வருமானம் மைனஸ் 4%. இந்த நிலையில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஓய்வுக்காலத்துக்காக இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பித்து விடுவது நல்லது. அப்போதுதான் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து நீண்ட கால முதலீடாக பங்குச் சந்தை மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிதானமாக முதலீடு செய்து வர முடியும்’’ என்றார்.

டைரக்ட் பிளான், ரெகுலர் பிளான் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த க.சுவாமிநாதன், “ஏஜென்டுகள் மூலம் முதலீடு செய்வது ரெகுலர் பிளான். முதலீட்டாளர் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வது டைரக்ட் பிளான். ரெகுலர் பிளானை விட டைரக்ட் பிளானில் செலவு விகிதம் சிறிது குறைவாக இருக்கும். முதலீடு செய்யும் ஃபண்ட் பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் அதிக நேரம் இருக்கிறது என்பவர்கள் டைரக்ட் பிளானில் தாரளமாக முதலீடு செய்யலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க https://bit.ly/3xA2jBl

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism