பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சும்மா கிடக்கும் பணம்... வங்கி சேமிப்புக் கணக்கு Vs லிக்விட் ஃபண்ட்... ஏற்றது எது?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

நமக்கு உடனடியாகத் தேவை இல்லாத பணம் மற்றும் அவசரத் தேவைக்கு எப்போதாவது தேவைப்படும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்திருப் போம். எப்போது வேண்டு மானாலும் இந்தப் பணத்தை எடுத்து செலவு செய்யலாம்; அசலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மிகவும் பாதுகாப் பாக இருக்கும்; கூடவே சிறிது வருமானமும் கிடைக்கும்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

நல்ல முதலீட்டுத் திட்டம்...

இதே வசதிகளுடன் அதே நேரத்தில் வங்கி சேமிப்புக் கணக்கைவிட சிறிது அதிக வட்டி மற்றும் நீண்ட காலத்தில் வருமான வரி அனுகூலத்துடன் ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம் இருப் பதை பலரும் அறிந்திருக்க வில்லை. அந்தத் திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடன் ஃபண்ட் வகைகளில் ஒன்றான லிக்விட் ஃபண்ட் ஆகும்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப் படுத்தும் செபி அமைப்பின் வரையறைப்படி, முதலீட் டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதி, இந்த ஃபண்டில் 91 நாள்கள் வரை முதிர்வு கொண்ட கடன் (Debt) மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

லிக்விட் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், அதிக தரக் குறியீடு கொண்ட கமர்ஷியல் பேப்பர்கள், அரசு கருவூல ரசீதுகள், சர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. பல கார்ப்பரேட் நிறுவனங் கள், பெரும் பணக்காரர்கள், சிறு முதலீட்டாளர்கள் எனப் பலரும் தங்களின் குறுகிய கால தேவைக்கான பணத்தை லிக்விட் ஃபண்டுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்து வருகிறார்கள்.

2022 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் இயங்கி வரும் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் லிக்விட் ஃபண்டுகளைக் கொண்டு உள்ளன. மொத்தம் 17,52,790 லிக்விட் ஃபண்ட் கணக்குகள் உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் லிக்விட் ஃபண்ட் மூலம் ரூ.3,33,450 கோடி முதலீடு செய்யப்பட்டிருக் கிறது. அந்த மாதத்தில் மட்டும் வெளியே எடுக்கப்பட்ட தொகை ரூ.2,83,354 கோடி யாகும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ரூ.4,21,077 கோடி லிக்விட் ஃபண்டை நிர்வகித்து வருகிறது.

லிக்விட் ஃபண்ட் திட்டம் ஒரு ஓப்பன் எண்டெட் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால், இன்று மதியம் 3 மணிக்குள் பணத்தை எடுக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் நாளை காலை 11 மணிக்குள் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.

ஆன்லைன் கணக்கு இருக்கும்பட்சத்தில், லிக்விட் ஃபண்டிலிருந்து வங்கிக் கணக்குக்கு மொத்த தொகையையும் மாற்றும் வசதி இருக்கிறது. பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மொபைல் செயலி (App) மூலம் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப் படுத்தியிருக்கின்றன.

சும்மா கிடக்கும் பணம்... வங்கி சேமிப்புக் கணக்கு Vs லிக்விட் ஃபண்ட்... ஏற்றது எது?

எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்..?

இந்த லிக்விட் ஃபண்டுகள் மூலம் வங்கிச் சேமிப்பு கணக்கு போல் நிலையான வருமானத்தை எதிர் பார்க்க முடியாது. ஆனால், தற்போதைய நிலையில் வங்கி சேமிப்புக் கணக்கைவிட 0.5 - 1 சதவிகிதம் அதிக வருமானம் கொடுப்பதாக இந்த லிக்விட் ஃபண்ட் முதலீடு இருக்கிறது. அதாவது, வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் ஆண்டுக்கு 2.75% - 4 சதவிகிதம் வட்டி கிடைக்கும் நிலையில், லிக்விட் ஃபண்ட் மூலம் ஓராண்டில் சுமார் 4.5 - 5% வருமானம் கிடைக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஃபண்ட் மற்றும் நிர்வகிக்கும் தொகை ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்யும்போது செலவு விகிதம் குறைவாக இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் லிக்விட் ஃபண்டில் பணத்தை வைத்திருக்கும் பட்சத்தில் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும். இதுவே வங்கி சேமிப்புக் கணக்கு மூலமான வட்டி வருமானத்துக்கு அது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (5%, 20%, 30%) வருகிறாரோ, அதற்கு பணவீக்க விகித சரிக் கட்டல் எதுவும் இல்லாமல் வரி கட்ட வேண்டி வரும்.

குறுகிய காலத்துக்கு பணத்தை முதலீடு செய்து வைக்க நினைப்பவர்களுக்கும், அவசரத் தேவைக்கு அவசர கால நிதியை உருவாக்க நினைப்பவர்களுக்கும் வங்கி சேமிப்புக் கணக்கைவிட லிக்விட் ஃபண்ட் லாபகரமாக இருக்கும்.