Published:Updated:

முதல் ஒரு கோடி 9 ஆண்டுகளில்... அடுத்த ஒரு கோடி 4 ஆண்டுகளில்..!

கூட்டு வட்டி
பிரீமியம் ஸ்டோரி
கூட்டு வட்டி

கூட்டு வட்டி

முதல் ஒரு கோடி 9 ஆண்டுகளில்... அடுத்த ஒரு கோடி 4 ஆண்டுகளில்..!

கூட்டு வட்டி

Published:Updated:
கூட்டு வட்டி
பிரீமியம் ஸ்டோரி
கூட்டு வட்டி

பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் பொறுமை மற்றும் நம்பிக்கை (Patience & Conviction) எப்போதும் அவசியமாகும். நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் மாதம்தோறும் தொடர்ந்து இடைவிடாது முதலீடு செய்துவருவது மிகவும் சலிப்பான விஷயமாக நமக்குப் படலாம். ஆனால், அதுதான் ஒருவருக்கு, அவர் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ற விருதை அளிக்கிறது என்றால் மிகையில்லை. இதை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாமா?

முதல் ஒரு கோடி 9 ஆண்டுகளில்...
அடுத்த ஒரு கோடி 4 ஆண்டுகளில்..!

முதல் ஒரு கோடி ரூபாய்..!

பிரபு என்கிற இளைஞர் ஒருவர் மாதம் 50,000 ரூபாயை ஐந்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ரூ.10,000 எனப் பிரித்து, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இன்றைக்குப் பல இளைஞர்கள் மாதம் தோறும் ரூ.50,000 முதலீடு செய்துவருகிறார்கள்.

(அதே சமயம், மாதம் தோறும் ரூ.50,000 முதலீடு செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்கள் வசதிக்கேற்ப ரூ.5,000கூட முதலீடு செய்யலாம். எவ்வள வுக்கு அதிகம் முதலீடு செய்கிறோமோ, அவ்வள வுக்கு அதிகமான பணம் நமக்குப் பிற்பாடு கிடைக்கும்!)

முதல் ஒரு கோடி 9 ஆண்டுகளில்...
அடுத்த ஒரு கோடி 4 ஆண்டுகளில்..!

கூட்டு வட்டியின் மகிமை..

பிரபு, மொத்தம் 18 ஆண்டு கள் அதாவது, 216 மாதங் களுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார். இந்த ஃபண்டுகள் ஆண்டுக்கு சரா சரியாக சுமார் 14% வருமானம் (உண்மையான வருமானம் 14.93%) தரும் பட்சத்தில், முதலீட்டை ஆரம்பித்த ஒன்பது ஆண்டு களில் அவர் தனது முதல் ஒரு கோடி ரூபாயை சம்பாதிக்கிறார்.

பிரபு தனது இரண்டாவது ஒரு கோடியை அடுத்த நான்கு ஆண்டுகளில் அடைகிறார். அதாவது, முதலீட்டை ஆரம்பித்த 13-வது ஆண்டில் ரூ.2 கோடியைச் சேர்த்து விடுகிறார்.

அடுத்த ரூ.1 கோடியை அதாவது, மூன்றாவது கோடியை அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே அடைந்து விடுகிறார். அதாவது, முதலீட்டை ஆரம்பித்த 16-வது ஆண்டில் ரூ.3 கோடி சேர்த்துவிடுகிறார். அடுத்த ரூ.1 கோடியை இரு ஆண்டுகளில் அதாவது, ரூ.4 கோடியை, முதலீட்டை ஆரம்பித்த 18-வது ஆண்டில் அடைந்துவிடுகிறார் (பார்க்க அட்டவணை).

முதல் ஒரு கோடி 9 ஆண்டுகளில்...
அடுத்த ஒரு கோடி 4 ஆண்டுகளில்..!

இதைத்தான் கூட்டி வட்டியின் மகிமை (Power of Compounding) என்கிறோம். நீண்ட காலத்தில் அதிசயக்கத்தக்க வளர்ச்சியைத் தருவதால், இதை உலகின் எட்டாவது அதிசயம் என்கிறார் ஐன்ஸ்டீன். இந்த முறையில் கோடீஸ்வரர் ஆனவர்தான் பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட். எஸ்.ஐ.பி மூலம் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்துவரும் வேளையில், அந்த முதலீடானது பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் நாம் சேர்த்து வைத்துள்ள தொகுப்பு நிதி (Corpus) பெருகும். இப்படிப் பணம் பெருகுவதால்தான், குறுகிய காலத்தில் அடுத்தடுத்த கோடிகளைச் சம்பாதிக்க முடிகிறது.

பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தை நீங்களும் புரிந்துகொண்டு பின்பற்றினால், நீங்கள் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism