Published:Updated:

சரிவில் பிட்காயின்... எப்போது மீண்டுவரும்..?

பிட்காயின்
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின்

பிட்காயின்

சரிவில் பிட்காயின்... எப்போது மீண்டுவரும்..?

பிட்காயின்

Published:Updated:
பிட்காயின்
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின்

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. முன்னணி கிரிப்டோகரன்சி யாக உள்ள பிட்காயின் மதிப்பு கடந்த திங்கள் அன்று 18 மாதங்களில் இல்லாத அளவில் 17% அளவுக்குச் சரிந்து 22,000 டாலராகக் குறைந்தது. பிட்காயின் மட்டுமல்ல, எத்ரியம் உள்ளிட்ட பிற கிரிப்டோ கரன்சிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்தச் சரிவுக்கு என்ன காரணம், சரிவு தொடருமா என ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் துணை நிறுவனர் அர்ஜுன் விஜய்யிடம் கேட்டோம்.

‘‘கிரிப்டோகரன்சிகளின் வர்த்தகமானது நான்கு ஆண்டு சுழற்சிக்கு உள்ளாகி வருகிறது. பங்குச் சந்தைகளில் காணப்படும் சுழற்சி போலத்தான் இதுவும். 2017-ல் பிட்காயின் உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, 2018-ல் சரிய ஆரம்பித்தது. மீண்டும் 2021-ல் உச்சத்தைத் தொட்டது. தற்போது சரிய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சரிவைச் சந்திக்கும் பிட்காயின், அதன்பிறகு, புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

தற்போது கிரிப்டோகரன்சிகள் மட்டுமல்ல, அனைத்து விதமான ரிஸ்க் உள்ள சந்தைகளுமே சரிவில்தான் இருக்கின்றன. சர்வதேச பங்குச் சந்தைகள் அனைத்தும் இறக்கத்தின் போக்கில் உள்ளன. காரணம், வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதனால் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் ரிஸ்க் உள்ள முதலீடுகளிலிருந்து மக்கள் பணத்தை வெளியே எடுத்துவருகிறார்கள். எனவேதான், பங்கு மற்றும் கிரிப்டோ சந்தை சரிவில் உள்ளது.

சில கிரிப்டோகரன்சிகள் திவாலாவதால், மொத்த கிரிப்டோ சந்தையிலும் அச்சம் உண்டாகிறது. முன்பு லுனார் கிரிப்டோ திவாலானது. தற்போது செல்ஷியஸ் திவாலாகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

ஃபண்டமென்டல் காரணிகள் வலுவாக உள்ள கிரிப்டோகரன்சிகள் இந்த நெருக்கடி யைச் சமாளித்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டும்’’ என்று சொன்னார் அர்ஜுன் விஜய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism