Published:Updated:

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் அவசியம்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் அவசியம்..?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கோகுல்பிரசாத், கோயம்புத்தூர்.

என் வயது 31. மனைவி (வயது 27) மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர். சுயதொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் கிடைக்கிறது. நான் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்து ரூ.2 கோடி பணம் சேர்க்க விரும்பு கிறேன். இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் டைரக்ட் பிளான் முறையில் மாதம்தோறும் மொத்தம் ரூ.15,000 எஸ்.ஐ.பி முறையில் பிரித்து முதலீடு செய்கிறேன். டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸிஸ் ஃபுளுசிப் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் டிவிடெண்ட் யீல்டு ஈக்விட்டி ஃபண்ட் டைரக்ட் ரூ.2,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் சில்வர் இ.டி.எஃப் ரூ.1,000, பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் ரூ.2,500, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் ரூ.2,500 ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன்.

என்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சரியான முதலீடுகள்தானா, என் இலக்கை அடைய எனது மாத முதலீட்டில் எவ்வளவு அதிகரிக்க வேண்டும், நான் தற்போது வைத்திருக்கும் திட்டங்களை மாற்ற வேண்டுமா அல்லது புதிய திட்டத்தில் புதிய முதலீட்டைத் தொடங்க வேண்டுமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“மாதம் ரூ.15,000 முதலீடு செய்வதன் மூலம், ரூ.2 கோடி சேர்ப்பதற்கு சுமார் 23 வருடங்கள் ஆகும் (வருடாந்தர வளர்ச்சி 12% என்ற அனுமானத்தில்). அதே சமயத்தில், நீங்கள் உங்கள் முதலீட்டை ஆண்டுக்கு 10% அதிகரிப்பதன் மூலம், இதே இலக்கை, அதே வளர்ச்சி அனுமானத்துடன் நீங்கள் 18 வருடங்களில் அடைய முடியும்.

உங்களது ஃபண்ட் தேர்வில் பெரிய குறைபாடுகள் இல்லை. இருப்பினும் டிஜிட்டல் இந்தியா, வெள்ளி போன்ற முதலீடுகளை இத்தகைய நீண்ட கால முதலீட்டுத் தொகுப்பி லிருந்து விலக்கி வைத்தல் நலம். அந்தத் தொகைகளை மிரே அஸெட் ஃபண்டிலும் பராக் பரிக் ஃபண்டிலும் கூடுதலாக முதலீடு செய்யலாம்.”

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் அவசியம்..?

மணிகண்டன், தஞ்சாவூர்.

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஏன் ஜாமீன் கேட்கிறார்கள், பணத்தை எடுக்க வேண்டு மானால் எந்த மாதிரியான ஜாமீன் கொடுக்க வேண்டியிருக்கும்?

ஏ.சிற்றரசு, பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்

“புதிதாக சிட் ஃபண்டில் சேரும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கவே செய்கிறது. சிட் ஃபண்டில் பணம் எடுப்பவர் சீட்டுக் காலம் முடியும் வரை தொடர்ந்து தவணைத் தொகையைச் செலுத்தி வர வேண்டும். அவர் அவ்வாறு தவணைத் தொகையைத் தொடர்ந்து செலுத்துவார் என்பதை உறுதி செய்துகொள்வதற்காகத்தான் ஜாமீன் பெறப்படுகிறது. சீட்டு எடுத்தவருக்குக் கொடுக்கப்படும் பணம் அந்த குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட பணம்தான்.

சீட்டு எடுத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் தவணைத் தொகையைச் செலுத்தி வந்தால்தான், சீட்டு எடுப்பவர்களுக்குரிய நேரத்தில் பணத்தை அளிக்க முடியும்.

சீட்டு எடுப்பவர் எடுத்த பின்னர் கட்ட வேண்டிய தொகையையும், தவணை களின் எண்ணிக்கையையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ற வாறு ஜாமீன் அளவு நிர்ணயிக் கப்படும்.

இதற்கு முறையான வருமானம் உள்ள நபர்களை ஜாமீன்தாரராகக் கையெழுத் திடச் சொல்லலாம். அல்லது தக்க மதிப்புள்ள அசையாச் சொத்துகளைப் பிணையமாகத் தரச் சொல்லலாம்.

சீட்டில் பணம் பெறுவது என்பது கடன் பெறுவதற்கு ஒப்பான ஒரு செயலாகவே கருதப்படுகிறது. எனவே, கடன் தருவதில் உள்ளது போன்ற நடைமுறைகள் அனைத்தும் சீட்டுப்பணம் அளிக்கப்படும் போதும் பின்பற்றப்படும். சீட்டு குரூப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நலனையும் பணத்தையும் பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.’’

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் அவசியம்..?

கோபி, விழுப்புரம்.

நான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளின் யூனிட்டுகளை 2022 மே மாதம் விற்று ரூ.4 லட்சம் நீண்ட கால மூலதன ஆதாயம் ஈட்டி உள்ளேன். இந்தலாபத்துக்கு நான் எப்படி வரி கட்ட வேண்டும், எப்போது வரி கட்ட வேண்டும் எனக் குழப்பமாக உள்ளது. சற்று விளக்கிச் சொல்ல முடியுமா?

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்.

“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, நீண்ட கால மூலதனத்தில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அந்த வகையில், உங்களுக்கு பங்குகள் அல்லது ஈக்விட்டி ஃபண்ட் மூலமான வேறு எந்த நீண்ட கால மூலதன ஆதாயம் இல்லை எனில், ரூ.4 லட்சம் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் ரூ.1 லட்சத்துக்கு வரி இல்லை. மீதமுள்ள ரூ.3 லட்சத்துக்கு 10% வரி (கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை 4% சேர்க்காமல்) வரி கட்ட வேண்டும். சுமார் ரூ.30,000 நீங்கள் வரியாகக் கட்ட வேண்டும்.

இந்த வரியை 2022-23-ம் நிதி ஆண்டுக்குள் கட்ட வேண்டும். அதாவது, 2023 மார்ச் 31-க்குள் கட்ட வேண்டும். அப்படிக் கட்டாமல் 2023 ஜூலை 31 வரி கணக்குத் தாக்கலின்போது கட்டினால் அதற்கான வட்டி மாதத்துக்கு 1% கூடுதலாகக் கட்ட வேண்டும்.”

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் அவசியம்..?

புவனேஸ்வரி, காரைக்கால்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனப் பங்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். அந்தப் பங்கில் நான் முதலீடு செய்தால் லாபம் ஈட்ட முடியுமா? நான் இப்படி முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கிறதா?

எல்.அர்ஜுன், செபி பதிவு. பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

“ஒரு நிறுவனப் பங்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள் எனில், அதை ஒரு காரணியாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதை மட்டுமே நம்பி அந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யக் கூடாது.

உதாரணமாக, 2021 மார்ச் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs Holding Pattern) அதானி என்டர் பிரைசஸ் (Adanient) என்ற பங்கில் 20.5% பங்கு மூலதனத்தை (Share Holding) வைத்திருந்தார்கள். அப்போது அந்தப் பங்கு 900 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதற்கடுத்து ஒவ்வொரு மூன்று மாதமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவர்கள் வைத்திருந்த பங்கைக் குறைத்துக்கொண்டே வந்தார்கள் தற்போது 15.83% பங்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், இப்போது அந்தப் பங்கின் விலை 900 ரூபாயில் இருந்து ரூ.3,300 வரை உயர்ந்துள்ளது. அவர்கள் விற்கிறார்கள் என்று பங்கின் விலை குறையவில்லை. மாறாக உயர்ந்துகொண்டே வந்துள்ளது. இப்படிச் சொல்வதால், அந்தப் பங்கை வாங்கலாம் என்று நான் சொல்ல வரவில்லை. இதை ஓர் உதாரணத்துக்காகவே எடுத்துச் சொன்னேன். ஆகவே, ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்பு அந்த நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமா என்று பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல், கடந்த மூன்று வருடங்களாக அவர்களுடைய நிர்வாகம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்.

அந்தப் பங்கு நிறுவனத்தின் லாப விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறதா என்று பார்த்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் சிறப்பான லாபத்தை ஈட்ட முடியும்.”