Published:Updated:

மைனர் குழந்தை பெயரில் பி.பி.எஃப்... காப்பாளருக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

மைனர் குழந்தை பெயரில் பி.பி.எஃப்... காப்பாளருக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கே.அறிவழகன், நாகர்கோவில்.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டில் (பி.பி.எஃப்) மைனர் ஒருவருக்கு காப்பாளராக இருப்பவர், அவர் கணக்கில் செய்யும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற முடியுமா?

கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்.

“ஒரு மைனர் பெயரில் பி.பி.எஃப் கணக்கைப் பெற்றோரில் தந்தை அல்லது தாய் அல்லது காப்பாளர் ஒருவர்தான் ஆரம்பிக்க முடியும். காப்பாளர் இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியம். மைனர் மற்றும் தந்தை / தாய் / காப்பாளர் பெயரில் செய்யப்படும் பி.பி.எஃப் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். இங்கே நிபந்தனைக்கு உட்பட்டு என்பதில், ஒரு காப்பாளருக்கு பி.எஃப் மூலம் ரூ.60,000 வரிச் சலுகை கிடைக்கிறது. 80சி பிரிவின்கீழ் அவர் வேறு எந்த வரிச் சலுகையும் பெறவில்லை எனில், பி.பி.எஃப் முதலீடு மூலம் ரூ.90,000 மட்டும்தான் வரிச் சலுகை பெற முடியும்.”

மைனர் குழந்தை பெயரில் பி.பி.எஃப்... காப்பாளருக்கு வரிச் சலுகை உண்டா?

கலைச் செல்வி, மணப்பாறை

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளுக்கே நல்ல வட்டி கொடுக்கிறார்கள். அவசர கால நிதியை லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் வைப்பதற்குப் பதில் இந்த வங்கிகளில் போட்டு வைக்கலாம் என்கிறான் என் நண்பன். இது உண்மையா, எவ்வளவு வட்டி கிடைக்கும்? இதற்கு ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“இன்றைக்கு வட்டி விகிதம் மிகவும் குறைந்து உள்ளதால், லிக்விட் ஃபண்டில் வரும் வருமானமும் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் சராசரியாக 3.25% வருமானம் கிடைத்துள்ளது. இதேவேளையில், பல ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளின் சேமிப்புக் கணக் கானது ரூ.1 லட்சத்துக்குள் எனில், 3.5 - 4% வருமானம் தந்துள்ளன. ரூ.1 லட்சத்துக்குமேல் எனில், 6% - 7% வரை வருமானம் தந்துள்ளன. ஆகையால் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கில் பணத்தைப் போட்டு வைத்திருப்பது சிறந்த தாகும். ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க பெரிய நிபந்தனைகள் ஏதுமில்லை. வழக்கமான வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பது போல்தான்.”

கோபால் கிருஷ்ண ராஜு, சுரேஷ் பார்த்தசாரதி, எம்.கண்ணன், நிவாஸ் நரசிம்மன்
கோபால் கிருஷ்ண ராஜு, சுரேஷ் பார்த்தசாரதி, எம்.கண்ணன், நிவாஸ் நரசிம்மன்

வி.ராஜசேகரன், தஞ்சாவூர்.

திருமணத்துக்காக நிதித் திட்டமிடல் செய்து 15 ஆண்டுகளாக முதலீடு செய்து வருகிறேன். திருமணம் நடக்கும் சமயத்தில் பங்குச் சந்தையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது?

எம்.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com

“ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு ரிஸ்குக்கு உட்பட்டதுதான் என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. பொது வாக, 15 வருடங்கள் முதலீடு செய்தபின், திருமணத் தேவைக்குப் பணம் எடுக்கும் போது, சந்தை சரிந்தாலும், வருமானம் லாபகரமாக இருப்பதற்கான வாய்ப்பு களே மிக அதிகம் என்று தைரியமாகச் சொல்லலாம்.

15 வருட இடைவெளியில் ரோலிங் ரிட்டர்ன் (Rolling Return) முறையில் சந்தையின் லாபத்தைப் பார்த்தால், அது எப்போதும் லாபம் தந்து வருவதை உங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இதுபோல சந்தை சரிவதற்கு வாய்ப்புள்ள தருணங்களில் பணம் எடுக்கும் அசௌகர்யங்களைத் தவிர்க்க, திருமணம் அல்லது பணத் தேவைக்கு ஓரிரு வருடங்கள் முன்னதாகவே சந்தை நிலவரத்தைப் பார்த்து, ஈக்விட்டி முதலீட்டிலிருந்து கடன் சந்தை சார்ந்த கடன் ஃபண்டுகள் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குத் தவணை முறையில் மாற்றிக்கொண்டுவிடுவது சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கூடிய வரை தவிர்க்க உதவிகரமாக இருக்கும். கடந்த 10, 15 ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகிதத் துக்கும் மேலாக லாபம் தந்த பல ஃபண்டுகள் உள்ளன.”

சுரேஷ் கிருஷ்ணா, சிவகாசி.

என் வயது 32. எனக்கு ஏற்ற சிறந்த தனிநபர் மருத்துவக் காப்பீட்டைப் பரிந்துரை செய்யவும்.

நிவாஸ் நரசிம்மன், காப்பீட்டு ஆலோசகர்.

“ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் யங் ஸ்டார் (young star) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்தத் திட்டம் இளைஞர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக குறைந்த காத்திருப்புக் காலம் உள்ளது. 36 வயதுக்கு முன்பு சேர்ந்த நபர்களுக்கு 40 வயதுக்குமேல் ஒவ்வோர் ஆண்டும் பிரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் மருத்துவமனையில் சேர்ந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1,000 வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு சிகிச்சைக்கு ஏழு நாள்களும் ஒரு வருடத்தில் 14 நாள்களும் பெறலாம். இந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அறையின் வாடகைக்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது.”

செந்தில்வேல், இ-மெயில் மூலம்.

நீண்டகால முதலீட்டுக்கு இ.கே.ஐ எனர்ஜி சர்வீசஸ் நிறுவனப் பங்கை வாங்கலாமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“கார்பன், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையின்கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட மேம்பாடு, கார்பன் சொத்து மேலாண்மை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று இ.கே.ஐ எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (EKIESL) ஆகும். இந்த நிறுவனமானது காலநிலை மாற்றம், கார்பன் சந்தைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த சேவையை அளித்து வருகிறது.

2021 ஜூன் முதல் டிசம்பர் 2021 வரையிலான காலத்தில் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. டிசம்பரில் எஃ.ப்.ஐ.ஐ மற்றும் டி.ஐ.ஐ முதலீடு சிறிது வெளியேறி இருக்கிறது. இந்தத் துறையிலுள்ள இதர நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பங்கின் மதிப்பீடு அதிகமாக உள்ளது. பங்கு மூலதனம் மூலமான வருமானம் 75 சதவிகிதமாக உள்ளது.

2022 ஜனவரி மத்தியில் இந்தப் பங்கின் விலை ரூ.12,000 வரைக் கும் அதிகரித்தது. இதன் பிறகு பங்கின் விலை இறங்கி காணப் படுகிறது. ரூ.7,500 வரைக்கும் விலை இறங்கியது. இப்போது குறைவான முதலீட்டை மேற்கொண்டுவிட்டு, பங்கின் விலைப்போக்கை அனுசரித்து அதன் பிறகு, முதலீட்டை மேற்கொள்வது நல்லது. இந்த நிறுவனத்தின் நிலையான பிசினஸ் மாடல் மற்றும் நிலை யான லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண் டால் நீண்ட கால முதலீடு லாபகரமான ஒன்றாக இருக்கும் எனலாம்.”