Published:Updated:

மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி... கூடுதல் லாபம் பார்க்க எது பெஸ்ட்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி... கூடுதல் லாபம் பார்க்க எது பெஸ்ட்?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

பா.கணேசன், விருதுநகர்.

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டைவிட மொத்த முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியுமா..?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் என்.ஏ.வி குறைவாக இருக்கும்போது மொத்த முதலீட்டை மேற்கொண்டுவிட்டு என்.ஏ.வி மதிப்பு அதிகரித்த பிறகு விற்றால் நல்ல லாபம் பார்க்க முடியும். ஆனால், எது குறைவான என்.ஏ.வி என்பதை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது. மொத்த முதலீட்டை மேற்கொண்ட பிறகு சந்தை தொடர்ந்து இறங்கிவிட்டால், மீண்டு வர நீண்ட காலம் பிடிக்கும். அதே நேரத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொண்டு வரும்போது, இடையில் சந்தை மிகவும் சரிந்தால் அப்போது மொத்த முதலீட்டை மேற்கொண்டால் நீண்ட காலத்தில் அதிக லாபம் பெற முடியும்.

உண்மையைச் சொல்லப்போனால், ஒருவர் அவரின் வசதிக்கேற்ப எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீட்டை கலந்து மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். கையில் மொத்தத் தொகை இருக்கிறது; சந்தை உச்சத்தில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது இறங்கக் கூடும். அப்படி இறங்கினால் அதிக நஷ்டமாகி விடுமே எனப் பலர் பயப்படுவார்கள். இப்படி பயப்படுகிறவர்கள், லிக்விட் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்துவிட்டு, அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வேறு ஒரு ஈக்விட்டி ஃபண்டுக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (STP) மூலம் முதலீட்டை மாதம் அல்லது வாரம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை மாற்ற முடியும். இதன் மூலம் லிக்விட் ஃபண்ட் மூலம் கிடைக்கும் சிறிய லாபத்தை ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றி, ரூபி காஸ்ட் ஆவரேஜ் என்கிற வகையில் சராசரியாக அதிக யூனிட்டுகளை ஈக்விட்டி ஃபண்டில் பெறமுடியும்.”

மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி...  
கூடுதல் லாபம் பார்க்க எது பெஸ்ட்?

ராஜாமுத்து, இலஞ்சி.

என் வயது 50. நான் 65 வயதில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன். தற்போது என்னால் மாதம் ரூ.30,000 அதாவது, ஆண்டுக்கு ரூ.3.6 லட்சம் முதலீடு செய்ய முடியும். நான் எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும், என் 65 வயதில் எவ்வளவு தொகுப்பு நிதி சேர்ந்திருக்கும், அதன்மூலம் மாதம்தோறும் எவ்வளவு தொகை எனக்குக் கிடைக்கும்?

ஆர்.கலைவாணி, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நங்கநல்லூர், சென்னை.

“நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் 15 வருடங்கள் என்பது நீண்ட கால முதலீடாகக் கருத்தில் கொள்ளப்படும். எனவே, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், நீண்ட கால முதலீடு பயனளிப்பதாக இருக்கும். உங்களது கணக்குப்படி, 30,000 X 12 = 3.6 லட்சம். 3,60,000 X 15 = 54 லட்சம்

54 லட்சத்தை 15 வருடங்களில் முதலீடு செய்து அதற்கு 12% வருமானம் என எடுத்துக்கொண்டால், முதிர்வுத் தொகையாக 1,42,77,942 (முதலீடு ரூ.54,00,000, லாபம் ரூ.88,77,942 = 1,42,77,942) கிடைக்கும். இதை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்து 8% வருமானம் கணக்கிட்டு மாதம் ரூ.94572 எடுத்துக்கொள்ள லாம். பேலன்ஸ்டு திட்டங்கள் 10% வருமானம் தரும் பட்சத்தில் உங்கள் தொகுப்பு இன்னும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.”

நிர்மல் குமார், கன்னியாகுமரி.

ஹெல்த் பாலிசியில் கிரேஸ் பீரியட் ஏதாவது இருக்கிறதா?

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“பாலிசி முடிந்த நாளிலிருந்து பாலிசியைப் புதுப்பிக்க காப்பீட்டு நிறுவனங்கள் தரும் கால அவகாசமே கிரேஸ் பீரியட் ஆகும். பொதுவாக, கிரேஸ் பீரியட் 30 நாள் வரை வழங்கப் படுகிறது, சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிரேஸ் பிரீயட் 3 மாதம், 6 மாதம் மற்றும் 1 வருடம் வரை சில நிபந்தனைகளுடன் புதுப்பித்துத் தருகின்றன. இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம்.

ஆனால், பாலிசி முடிந்து கிரேஸ் பீரியடில் புதுப்பிக்கும் போது பல நிபந்தைகளுடனே பாலிசி புதுப்பிக்கப்படுகிறது. கிரேஸ் பீரியட் காலத்தில் எந்த விதமான நோய்களாலோ, விபத்துகளாலோ பாதிக்கப்படவில்லை என்ற உத்தரவாதம் எழுத்து மூலமாகத் தர வேண்டும். அப்படி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவற்றின் தன்மைக்கேற்றாற்போல 2, 3, 4 வருடம் காத்திருப்புக் காலம் (Waiting Period) மற்றும் வாழ்நாள் முழுவதும் (Permenent Exclusion) அந்தக் குறிப்பிட்ட பாதிப்புக்கு க்ளெய்ம் செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

கிரேஸ் பீரியட் காலத்தில் பாலிசியின் எந்தப் பயனையும் பெற முடியாது. வயதுக்கு தகுந்தாற்போல மருத்துவப் பரிசோதனை (Medical Checkup) செய்யும்படி சொல்வதற்கு வாய்ப்புண்டு. அதே நேரத்தில், கிரேஸ் பீரியட் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில் பாலிசி புதுப்பிக்கப்பட்டால் பாலிசி தொடங்கிய காலத்திலிருந்து கிடைக்கக்கூடிய தொடர் பலன்களை சில காப்பீடு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளாகத் தருகின்றன.

பாலிசியின் அனைத்துப் பலன்களையும் பெறும் சலுகைகளானது (Normal Policy continuity Benefit) தொடரும். பாலிசி எடுப்பதற்கு முன் இருந்த நோய்களுக்கான காத்திருப்புக் கால தொடர் சலுகை (Continuity Benefit for Pre-Existing Disease) அப்படியே தொடரும். கூடுதல் நோ க்ளெய்ம் போனஸ் தொடர்ந்து அதிகரிப்பதற்கான சலுகை அளிக்கப்படும்.”

ஆர்.வெங்கடேஷ், ஆர்.கலைவாணி, வெங்கடேசன் பிரம்மநாயகம், டி.ஜீவா, சி.பாரதிதாசன்
ஆர்.வெங்கடேஷ், ஆர்.கலைவாணி, வெங்கடேசன் பிரம்மநாயகம், டி.ஜீவா, சி.பாரதிதாசன்

நரேன், ஶ்ரீபெரும்புதூர்.

சொத்துப் பத்திரம் முக்கியமா, பட்டா முக்கியமா - எது செல்லுபடி ஆகும்?

டி.ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக், சென்னை.

“சொத்துப் பத்திரம்தான் மூலம் ஆகும். பத்திரம் மூலமே எந்த சொத்தையும் பராதீனம் செய்ய இயலும். பட்டா என்பது பத்திரத்தின் அடிப்படையில் ரெவின்யூ இலாகாவால் வழங்கப்படும் ஆவணம். பட்டா இல்லாமலும் பத்திரம் இருக்கும். பட்டாவில் பல வகைப்பாடுகள் உண்டு.”

தமிழ் செல்வி, இ-மெயில் மூலம்

நான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்துக்கு எவ்வளவு கிடைக்கும்? அடுத்த ஆண்டு என் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதால், இதைக் கேட்கிறேன்.

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

“உங்கள் மகள் திருமணத்துக்கு இன்னும் ஒராண்டுதான் இருக்கிறது என்பதால், உங்களுக்கு கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்தான் சரியாக இருக்கும். இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம் கிடைக்கும். ஒரு வருடம் கழித்து சுமார் ரூ.1,05,000 கிடைக்க வாய்ப்புள்ளது.”

தொகுப்பு: சி.சரவணன்“லிக்விட் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்துவிட்டு, அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வேறு ஒரு ஈக்விட்டி ஃபண்டுக்கு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (STP) மூலம் முதலீட்டை மாதம் அல்லது வாரம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை மாற்ற முடியும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism