Published:Updated:

ஊறுகாய் ஏற்றுமதி... என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ஊறுகாய் ஏற்றுமதி... என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

இசக்கி முத்து, தென்காசி.

என் அம்மா நன்றாக ஊறுகாய் தயாரிப்பார்கள். வீட்டிலே தயார் செய்து தற்போது எங்கள் பகுதியில் விற்கிறார்கள். இவற்றுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறது என நண்பர் ஒருவர் சொன்னார். நான் இவற்றை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்? இதை ஏற்றுமதி செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

அசோகன் ஆர்.ராஜா, முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல், ஃபியோ (FIEO).

“இந்தியா, நறுமண வாசனை (Spices) விளை பொருள்களின் உலகின் முக்கியமான உற்பத்தி கேந்திரமாக உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் நமது ஊறுகாய் வகைகளுக்கு நல்ல வரவேற்பும் தேவையும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டின் ஊறுகாய் வகைகள் ஏற்றுமதி 2009-ம் ஆண்டில் 15.76 மில்லியன் டாலரிலிருந்து 2019-ம் ஆண்டில் 110.1 மில்லியன் டாலர் அளவுக்கு பன்மடங்கு வளர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டைவிட 2020-ம் ஆண்டில் நமது ஏற்றுமதி 10.4% வளர்ச்சியுடன் 137.1 மில்லியன் டாலராகவும், உலக ஏற்றுமதிச் சந்தை மதிப்பில் 19.5% பங்கையும் பெற்றுள்ளது. ஏறக்குறைய 50 நாடுகளுக்கு மேல் நாம் ஊறுகாயை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

ஊறுகாயைத் தயாரிக்கும்போது உயர்ந்த தரம் மற்றும் கவர்ச்சியான பேக்கிங்கை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நிறம், சுவை, மனம் நீண்ட காலத்துக்கு மாறாமல் இருக்குமாறு உங்களின் தயாரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். உணவுப் பொருள்களின் இறக்குமதி விதிமுறை கள் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். குறிப்பிட்ட நாடுகளின் சுங்க விதிமுறைகள் மற்றும் உங்களின் இறக்குமதியாளர்களின் ஆலோசனை இதில் பெருமளவில் உதவிகரமாக இருக்கும்.

முதலில், சிறிய அளவில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி குடிசைத் தொழிலாகப் பதிவு செய்துகொள்வது அரசின் பல்வேறு சலுகை களையும் உதவிகளையும், சந்தைப்படுத்தும் வாய்ப்பை பெற பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தயாரிக்கும் பொருளை பிராண்டிங் செய்வது மிக மிக முக்கியம். நம்பகமான விநியோகஸ்தர்கள் / இறக்குமதியாளர்களைத் தேர்வு செய்து வணிக நடவடிக்கைகளைத் தொடங்குங்கள்.

உலகின் அனைத்து நாடுகளிலும் பாரம்பர்ய முறையில் வீடு அல்லது சிறு உற்பத்திக்கூடங் களில் குடும்ப அங்கத்தினர்களின் கைவண்ணத் தில் தயாராகும் ஊறுகாயை விரும்புகிறார்கள். பூஞ்சை மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் சுங்கச் சோதனையின்போது இருப்பதாகத் தெரியவந்தால், ஏற்றுமதி பாதிப்படையும். எனவே, ஜாக்கிரதை.’’

ஊறுகாய் ஏற்றுமதி... என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

டி.ஹரிகிருஷ்ணன், இ-மெயில் மூலம்.

நான் பணி ஓய்வு பெற்ற நபர். நான் எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் மொத்த முதலீடும், எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், எஸ்.பி.ஐ டெக்னாலஜி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், சுந்தரம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் சுந்தரம் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்து வருகிறேன். இதில் ஏதாவது, மாற்றம் செய்ய வேண்டுமா? தவிர, அடுத்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ரூ.15,000-த்தை முதலீடு செய்ய விரும்புகிறேன். எனவே, மூன்று புதிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களைப் (அவை அதிக ரிஸ்க் கொண்டதாக இருந்தாலும் பரவாயில்லை) பரிந்துரைக்கவும்.

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“பணி ஓய்வு பெற்றவர் என்ற முறையில், அதிக ரிஸ்க் உள்ள ஈக்விட்டி ஃபண்டுகளை நீங்கள் தேர்வு செய்வது சற்று அபாயகரமானது. உங்களது அன்றாடத் தேவை மற்றும் அவசரத் தேவைகளுக்குப் போதிய பணம் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர், ரிஸ்க் எடுக்கவும். இதுவரை நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளும் லார்ஜ்கேப் ஃபண்டும் சற்று ரிஸ்க் குறைவானவை.

டெக்னாலஜி ஃபண்டிலிருந்து நீங்கள் வெளியேறிவிட லாம். புதிய ஃபண்டுகளாக ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நெக்ஸ்ட் ஃபிப்டி ஃபண்ட், பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் மற்றும் கோட்டக் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.”

அசோகன் ஆர்.ராஜா, ஶ்ரீகாந்த் மீனாட்சி, எஸ்.வெங்கட்ராமன்
அசோகன் ஆர்.ராஜா, ஶ்ரீகாந்த் மீனாட்சி, எஸ்.வெங்கட்ராமன்

ஆர்.ஶ்ரீகாந்தன், கொளத்தூர், சென்னை- 600 050

அதிக விண்ணப்பங்கள் வரும் ஐ.பி.ஓ-களில் (உதாரணம்: எல்.ஐ.சி போன்றவை) முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற ரீதியில் முதல் நாள் வரும் விண்ணப்பங்களை வைத்தே விண்ணப்பிப் வர்களுக்குத் தந்துவிடுவார்கள் என்பது உண்மையா? இது மற்ற நாள்களில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு செய்யும் துரோகமல்லவா? இல்லையெனில், எந்த அடிப்படையில் இறுதி செய்கிறார்கள்?

எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர், 6sigmawealth.com

“ஒவ்வொரு ஐ.பி.ஓ-விலும் அது தொடங்கும் தேதியும், முடியும் தேதியும், லாட் சைஸும் முன்னாலேயே அறிவிக்கப் படும். முடிவு தேதிக்குப் பிறகே பங்கு ஒதுக்கீடு முடிவு செய்யப் படும். முதல் நாளிலேயே விண்ணப்பிக்கும் நபருக்கு எந்தத் தனிச் சலுகையும் கிடையாது.

லாட் சைஸ் அடிப்படையில் ஐ.பி.ஓ மொத்த பங்குகள் ‘லாட்’ களாக மாற்றப்படும். கடைசி தேதிக்குப் பிறகு, மொத்த விண்ணப்பங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பங்கு ஒதுக் கீடு விகிதம் முடிவு செய்யப் படும். இந்த விகிதத்தின்படி, குலுக்கல் சீட்டு முறையில் யார் யாருக்கு பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது முடிவாகும்.

சமீபத்தில் வெளிவந்த அதானி வில்மர் ஐ.பி.ஓ-வின் பங்கு ஒதுக்கீட்டை ஓர் உதாரணமாகக் காட்டலாம். இதில், சிறுமுதலீட் டாளர்களுக்கு ஒதுக்கிய பங்குகள் 4,85,79,786. லாட் சைஸ் 65. மொத்த லாட்டுகள் 4,85,79,786 / 65 = 7,47,381 லாட் + 21 பங்குகள். மொத்த விண்ணப்பதாரர்கள் 18,96,100. பங்கு ஒதுக்கீடு சதவிகிதம் 7,47,381 / 18,96,100 = 39.42%. முடிவு செய்யப்பட்ட பங்கு ஒதுக்கீடு விகிதம். 137 விண்ணப்பதாரரில், 54 பேருக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. 54/137 = 39.42%. எனவே, செபி வகித்திருக்கும் வரைமுறைப்படி தான் பங்கு ஒதுக்கீடு நடக்கும். இதில் துரோகம் என்கிற பேச்சுக்கே இடமில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism