Published:Updated:

பட்டாவில் சர்வே எண் தவறு... எப்படி சரி செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பட்டாவில் சர்வே எண் தவறு... எப்படி சரி செய்ய வேண்டும்?

கேள்வி - பதில்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

ராதிகா, காரைக்குடி.

நான் கடந்த பத்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றில் மாதம் ரூ.2,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். நான் முதலீட்டை ஆரம்பிக்கும்போது நாமினியை நியமிக்கவில்லை. இப்போது நாமினியை நியமிக்க முடியுமா? அதற்கான வழிமுறை என்ன? விளக்கிச் சொல்லவும்.

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

“நீங்கள் இப்போதும் நாமினியை நியமிக்க முடியும். நீங்கள் எந்த ஃபண்டில் முதலீடு செய்துள்ளீர்களோ, அந்த பண்ட் நிறுவனத்தின் இணையதளத்திலோ, அந்த ஃபண்ட் நிறுவனத்திலோ , ஆர்.டி.எ (RTA) நிறுவனத்திலோ நாமினேஷன் செய்வதற்குரிய படிவத்தைப் பெற்று அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அவர்களிடம் தந்தால் போதும். அதன் பிறகு, நாமினேஷன் பதிவு செய்யப்படும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மூன்று பேர் வரை நாமினியாக நியமிக்கலாம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீட்டுத் தொகை செல்ல வேண்டும் என்ற விவரத்தையும் நாமினேஷன் படிவத்தில் நிரப்பலாம்.”

சாம்தாஸ், முகநூல் மூலம்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பாலிசியில் ஆண்டளிப்பு (Annuity) என்றால் என்ன?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“ஆண்டளிப்பு என்பது ஒருவகையான பென்ஷன் பாலிசி ஆகும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று (Immediate annuity) முதலீடு செய்த அடுத்த மாதம்/வருடம் பென்ஷன் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தில் ஒரே தவணையாக மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். மற்றொன்று காலம் தாழ்த்தி (Deferred Annuity), வருடா வருடம் முதலீடு செய்து பின்னர் பென்ஷன் வாங்கிக்கொள்வது. இந்த ஆண்டளிப்பு (Annuity) என்பது பாலிசியின் முதலீட்டினால் வரும் வருமானத்தை வாங்கிக்கொள்வது. இதை மாதம் / காலாண்டு/அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளலாம்.”

பட்டாவில் சர்வே எண் தவறு... எப்படி சரி செய்ய வேண்டும்?

தேன்மொழி, கூடுவாஞ்சேரி.

எனக்கு சென்னை புறநகரில் 1,200 சதுர அடி மனை உள்ளது. இந்த மனைக்குரிய பட்டாவில் சர்வே எண் தவறாக உள்ளது. இதைச் சரிசெய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

டி.ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக், சென்னை.

“சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில், உரிய மூலப்பத்திரங்களையும், மற்ற ஆவணங் களையும் சமர்ப்பித்து திருத்தம் கோரி மனு தரலாம். தாசில்தார் அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மாற்றம் செய்து சரியான பட்டா தருவார்கள்.”

பட்டாவில் சர்வே எண் தவறு... எப்படி சரி செய்ய வேண்டும்?

கணேஷ்குமார், இ-மெயில் மூலம்.

எனக்கு ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் இருக்கிறது. இதற்கான வட்டி 8%. இதற்கான மாதத் தவணை ரூ.20,000. என் குடும்பச் செலவுக்குப் போக சேமிப்புத் தொகை ரூ.40,000 இருக்கிறது. இதைக் கொண்டு கடனை வேகமாக அடைக்கலாமா அல்லது எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்யலாமா?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், https://www.moneyavenues.in/

“ஒருவருக்கு வாழ்க்கையில் சேமிப்பும் முதலீடும் எந்த அளவு முக்கியமோ, அந்த அளவுக்குக் கடன் இல்லாமல் இருப்பதும் முக்கியம். அந்த அடிப்படையில் உங்களின் மாதாந்தர சேமிப்பை இரண்டு வகையில் செயல்படுத்தலாம். சேமிப்பின் ஒரு பகுதியைக் கடன் அடைக்க பயன்படுத்தலாம். கடன் மெள்ள மெள்ள அடைக்கப்படும்போது கடனில்லா வாழ்வால் ஒரு சந்தோஷம் ஏற்படும். இன்னொரு பகுதியை மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறை மூலம் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வரலாம். அப்படிச் செய்யும்போது உங்களுக்கு நீண்ட கால முதலீட்டு லாபமும் கிடைக்கும். உங்களின் தனிப்பட்ட நிதிநிலையைக் கருத்தில் கொண்டு இந்த இரு விஷயங்களை செயல்படுத்தலாம். எனவே, 20,000 ரூபாயை சம அளவில் பிரித்து, கடன் அடைத்தல் மற்றும் முதலீடு என்று நீங்கள் செய்துவந்தால், சிறப்பான விளைவுகள் உங்களுக்கு ஏற்படும்.’’

பாலமுருகன், இ-மெயில் மூலம்.

என் வயது 26. நான் துபாயில் வேலை பார்க்கிறேன். பிஜிம் (PGIM) இந்தியா மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், நிப்பான் பார்மா ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் தலா ரூ.2,500 முதலீடு செய்து வருகிறேன். நீண்ட காலத்துக்கு இந்த ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரலாமா?

என்.ஜெயகுமார், சி.எஃப்.ஏ, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சேலம்.

“நீங்கள் நீண்ட காலம் எனக் குறிப்பிட்டதால், 10 ஆண்டு களுக்கு மேல் என்று எடுத்துக் கொண்டு, உங்கள் கேள்விக்கான பதிலை சொல்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுத்த இரண்டு ஃபண்டு களில் பிஜிம் இந்தியா மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் நீண்டகால அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் தொடர லாம். ஆனால், நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் என்பது ஒரு செக்டார் ஃபண்ட். இதற்குப் பதிலாக ஒரு நல்ல ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டை நீங்கள் தேர்வு செய்யலாம். (உதா, குவாண்ட் அப்சொல்யுட் ஃபண்ட்) அல்லது ஒரு நல்ல ஃபிளக்ஸிகேப் ஃபண்டைத்(உதாரணம் பராக் பரிக் ஃபிளெக் ஸிகேப் ஃபண்ட்) தேர்வு செய்து, அதில் உங்கள் முதலீட்டைத் தொடரலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism