Published:Updated:

சுயதொழில் செய்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? முதலீட்டு ஆலோசனை...

Q & A கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

பால்சுயம்பு, உவரி

சுயதொழில் செய்பவர்கள் எப்படி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது?

ஶ்ரீனிவாசன், பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், Moneycare Investement

“சம்பளம் பெறும் ஊழியருக்கு மாத வருமானம் கிடைக்கும். அதே வேளையில், சுயதொழில் செய் வோருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் வருமானம் வருவது கடினம். அவ்வப்போது அவர் சீரற்ற முறையில் வருமானத்தைப் பெறுகிறார். எனவே, சம்பளம் வாங்கும் நபர் போல, முதலீடு செய்ய அவர்கள் முறையாகத் திட்டமிட முடியவில்லை. இது மாதிரியான சூழலில் இதற்கு ஒரு தீர்வை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கொடுக்கிறது. ஆகவே, சுயதொழில் செய்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகையை மிகக் குறுகிய காலக் கடன் திட்டங்களில் முதலீடு செய்து, அங்கிருந்து எஸ்.டி.பி (Systematic Transfer Plan) முறையின் மூலம் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு களுக்கு அவ்வப்போது முறையாக மாற்றிக்கொள்ளலாம். நம் வாழ்க்கை யில் பல்வேறு இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உதவுகிற மாதிரி, சுயதொழில் செய்பவர்கள் எஸ்.டி.பி முறை மூலம் பலன் அடைய முடியும்.’’

நரேன், இ-மெயில் மூலம்

என் வயது 32. நானும் என் மனைவியும் இணைந்து மாதம்தோறும் ரூ.40,000 முதலீடு செய்ய முடியும். எங்கள் ஓய்வுக் காலம் மற்றும் எங்களின் இரண்டு வயது மகனின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்வது எங்கள் நோக்கம். நாணயம் விகடனைத் தொடர்ந்து படித்ததன் மூலம் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யத் திட்ட மிட்டுள்ளேன். என் தேர்வு சரியா, எதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“உங்கள் இரண்டு இலக்குகளும் நீண்டகாலமாக இருப்பதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது. அதே வேளையில், நீங்கள் அஸெட் அலொ கேஷன் முறையைப் பின்பற்றி முதலீடு செய்யுங்கள். அதாவது, இப்போது உங்களிடம் ரூ.40,000 உபரியாக இருந்தால், ரூ.24,000 பங்குச் சந்தையிலும் ரூ.4,000 தங்கத்திலும் மீதமுள்ளவை கடன் சார்ந்த பத்திரத்தில் முதலீடு செய்யவும்.”

ஶ்ரீனிவாசன், சுரேஷ் பார்த்தசாரதி, ஆர்.சரவணன், சி.குமார்,  எம்.கண்ணன்
ஶ்ரீனிவாசன், சுரேஷ் பார்த்தசாரதி, ஆர்.சரவணன், சி.குமார், எம்.கண்ணன்

ரமேஷ் குமார், சென்னை.

எனக்கு தனியார் வங்கியில் சம்பளக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கியிலிருந்து கிரெடிட் கார்ட்டை அண்மையில் கூரியரில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த கார்டு எனக்கு தேவை யில்லை. இதை நான் சரண்டர் செய்வது எப்படி?

ஆர்.சரவணன், வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர், Lawyerchennai.com

“நீங்கள் கேட்காமலேயே அனுப்பி வைக்கப்பட்ட கடன் அட்டை (கிரெடிட் கார்டு) உங்களை செலவழிக்கத் தூண்டும் ஒரு வியாபாரத் தந்திரம். உங்களுக்குத் தேவையாக இருந்தால், அதை வைத்துக்கொள்ளலாம். அது தேவையற்றதாக இருப்பின், அதை நான்கு துண்டுகளாக வெட்டி, அத்துடன் உங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் உங்கள் பெயர் முகவரியுடன், ஒரு கடிதம் எழுதி, உங்களுக்கு இது தேவையற்றது எனக் குறிப்பிட்டு, அதை உடனடி யாக ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். அவை இரண்டை யும் பதிவு தபால் அல்லது கூரியரில் அந்த அட்டை வந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்ட முகவரிக்கு உடனடி யாக அனுப்ப வேண்டும். மேலும், இதை உடனடியாக அந்த வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த அட்டை வந்த தபாலில் இருக்கும் இ-மெயிலுக்கு இதே விஷயத்தை எழுதி அனுப்பினால், உங்களுக்கு ஆண்டுச் சந்தா அல்லது வேறு ஏதேனும் கட்டணம் இருந்தால், அதை இதன் மூலம் தவிர்க்கலாம்.”

அகிலன், மதுரை

எனக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறாள். அவளின் எதிர் காலத்துக்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எண்டோவ் மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி, செல்வமகள் சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய முதலீடுகளில் எது என் மகளின் கல்வி மற்றும் திருமணச் செலவு களை ஈடுகட்டுவதாக இருக்கும்?

சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்

“சேமிப்பு நோக்கத்தில் நாம் வாங்கும் எண்டோவ் மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருவ தில்லை. மேலும், குழந்தை களின் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பாது காப்பான திட்டம். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அஞ்சலகத்தில் கணக்கு ஆரம்பிக்கலாம். தற்போது ஆண்டுக்கு 7.6% வட்டி கணக்கிடப்படுகிறது. இது காலாண்டுக்கு ஒருமுறை மாறுதலுக்கு உட்பட்டது. பெண்ணின் 21 வயதில் கணக்கை முடித்து பணம் பெற்றுக்கொள்ளலாம். இது ஒரு ரிஸ்க் குறைவான முதலீடு.

நீங்கள் நீண்டகால நோக்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், மியூச்சவல் ஃபண்ட் திட்டம் பொருத்த மானது. நன்கு செயல்படும் டைவர்சிஃபைடு திட்டங் களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகாலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற வழி உண்டு. இது பங்குச் சந்தை சார்ந்த திட்டம் என்பதால், சந்தையின் ஏற்ற இறக்கங் களுக்கு உட்பட்டது. ஆனால், நீண்டகால அளவில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு, நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப ஒன்றிரண்டு திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய ஆரம்பிக்கவும்.”

ஏ.சரவணன், இ-மெயில் மூலம்

என் வயது 25. ஆரம்பச் சம்பளமே மாதம் ரூ.60,000 என்பதால், வருமான வரியைச் சேமிக்க இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். இதை நான் அதன் லாக்இன் பிரீயட் மூன்று ஆண்டுகள் கழித்து நீண்ட கால முதலீடாக வைத்துக் கொள்ளலாமா, இந்த முதலீட்டின் மூலம் நான் வேறு என்ன வகையில் லாபம் அடைய முடியும்?

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

“இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டில் செய்த முதலீட்டை மூன்று வருட லாக்இன் காலத்துக்குப் பிறகு உடனே எடுக்க வேண்டும் என்றில்லை. தங்களது வருமானம் அன்றாட செலவு களுக்கு போதுமானதாக இருப்பதால், இ.எல்.எஸ்.எஸ் வரிச் சேமிப்பு ஃபண்டில் செய்த முதலீட்டை நீண்ட கால முதலீடாகக் கருத்தில கொண்டு தொடர்ந்து வரவும்.

இ.எல்.எஸ்.எஸ் வரிச் சேமிப்பு ஃபண்டின் சராசரி ஆண்டு வருமான விகிதம் முறையே 1, 3, 5, 10 வருடங்களுக்கு 6%, 9%, 14%, 13 சதவிகிதமாக உள்ளது. இது ஈக்விட்டி ஃபண்ட் என்பதால், ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அதே சமயம், மற்ற முதலீடு களைவிட கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. எனவே, இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டைத் தொடரலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு