தேவா

முறைசார்ந்த பணியில் இருப்பவர்களின் ஓய்வுக்கால அல்லது எதிர்கால வாழ்க்கைக்கான நிதி தேவைகளுக்காக இ.பி.எஃப் என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் மாத வருமானத்திலிருந்து கணிசமான தொகையைப் பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால சேமிப்பு நிதியாகச் சேமிக்கப்படுகிறது.

அதேபோல், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் புரிபவர்கள் அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் எதிர்கால நிதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டமும் அவசியம் என்பதால், அரசுப் பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இது முழுக்க முழுக்க சுய விருப்பத்தின் பேரில் தாமாக முன்வந்து சேமிக்கும் திட்டம் ஆகும். தற்போது வங்கி சேமிப்புத் திட்டங் களுக்கு வழங்கப்படும் வட்டி குறைவாக இருப்பதாலும், பாதுகாப்பான அரசு முதலீட்டுத் திட்டம் என்பதாலும் சந்தையிலுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஆகச் சிறந்த தேர்வாக பி.பி.எஃப் திட்டம் கருதப் படுகிறது. இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் சேமிக்கலாம், இதனால் கிடைக்கும் பலன் என்ன என்பதையெல்லாம் பார்க்கலாம்.

யார் தொடங்கலாம்?

“18 வரை வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் யாரும் இதில் கணக்கைத் தொடங்கலாம். அதாவது, பணியில் இல்லையென்றாலும் எந்தவொரு தனிநபரும் இந்தத் திட்டத்தில் தங்களின் வருங்கால சேமிப்பைத் தொடங்கலாம். மேலும், 18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களின் எதிர்காலத் துக்காக 18 வயதுக்கு மேல் யாரும் பாதுகாவலராக இருந்து கணக்குத் தொடங்கலாம்.

நிறுவனங்களில் பணியாற்றும் இ.பி.எஃப் திட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேமிக்க முடியும்.”

எங்கு தொடங்கலாம்?

‘‘இந்த பி.பி.எஃப் கணக்கை வங்கிகள் மூலமாகவோ தபால் நிலைய அலுவலகங் களிலோ தொடங்கலாம். பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்து வங்கிகளிலும் பி.பி.எஃப் கணக்குத் தொடங்க முடியும். அருகில் உள்ள அல்லது நீங்கள் கணக்கு நிர்வகிக்கும் வங்கி அல்லது தபால் நிலையக் கிளைக்கு நேரில் சென்று கணக்குத் தொடங்கலாம். சில வங்கிகள் தங்களின் இணையதளத்திலேயே பி.பி.எஃப் கணக்கைத் தொடங்கும் வசதியை வழங்குகின்றன. அதன்மூலமும் கணக்கைத் தொடங்கலாம். நாடு முழுவதும் ஒரே ஒரு பி.பி.எஃப் கணக்கு நிர்வகிக்க முடியும். வங்கியிலிருந்து தபால் நிலையத்துக்கோ தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கோ கணக்கை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் உள்ளது.’’

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

‘‘பி.பி.எஃப் கணக்குத் தொடங்குவதற் கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் அரசு அங்கீகரித்துள்ள ஏதேனும் ஒரு அடையாளச் சான்றுடன், நடப்பு முகவரிச் சான்றும் சேர்த்து இரண்டு பாஸ்போர்ட் புகைப் படங்களுடன் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். கணக்குத் தொடங்கும்போது தவணையை ரொக்கமாகவோ, காசோலை வழங்குவதன் மூலமோ செலுத்தலாம்.”

எவ்வளவு சேமிக்கலாம்?

“இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 முதல் சேமிப்பைத் தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். ஒருவர் தன் பெயரில் ஒரு கணக்கும், பாது காவலராக ஒரு கணக்கும் வைத்திருந்தால் இரண்டு கணக்கையும் சேர்த்து மொத்த மாகவே ரூ.1.5 லட்சம் வரைதான் ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்ய முடியும். ஓராண்டு முதலீட்டுத் தொகையை ஒரே தவணையாகவோ, மாத தவணையாகவோ, காலாண்டு அடிப்படையிலோ எப்படி வேண்டுமானாலும் ஓர் ஆண்டுக்குள் இருப்பு வைக்கலாம். ஓராண்டில் 12 தவணைகள் வரை சேமிக்கலாம். அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் சேமிக்க முடியும்.”

கணக்கு நிர்வகிப்பு விதிமுறைகள் என்ன?

“இந்தத் திட்டத்தில் ஏதேனும் ஓர் ஆண்டில் குறைந்தபட்சமாக சேமிக்க வேண்டிய தொகை ரூ.500-ஐ இருப்பு வைக்கத் தவறினால், அந்தக் கணக்கு செயல் இழந்ததாகக் கருதப்படும். ஆனால், இவ்வாறு செயலிழந்த கணக்கை மீண்டும் புதுப்பிக்க முடியும். புதுப்பிக்க விரும்பும் போது, குறைந்தபட்ச தொகை யான ரூ.500 செலுத்துவதுடன் செயலிழப்பு அபராதக் கட்டண மாக ஓராண்டுக்கு ரூ.50 வீதம் செலுத்த வேண்டும்.

எத்தனை ஆண்டுகள் செலுத்த தவறுகிறோமோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அபராதம் கணக்கிட்டு வசூலிக்கப்படும். இவ்வாறு செயலிழந்த கணக்கைப் புதுப்பிக்கச் செலுத்தும் தொகையும் அந்த ஆண்டுக்கான சேமிப்புத் தொகையும் ரூ.1.5 லட்சம் என்ற வரம்புக்குள்தான் இருக்க வேண்டும்.”

வட்டியும், வரிச் சலுகையும் குறித்து..?

“பி.பி.எஃப் திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டியானது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஆண்டுக்கு 7.1% என்ற அளவில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானத்துக்கு வரி எதுவும் இல்லை. மேலும், சேமிக்கப்படும் ரூ.1.5 லட்சத்துக்கு 80சி பிரிவில் வருமான வரி விலக்கு கோரும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, குடும்பத்தினரில் ஒருவருக்கு மேற்பட்டோர் வருமானம் ஈட்டுபவராக இருப்பின், இந்தச் சேமிப்பின் மூலம் கூடுதலாக வரி விலக்குப் பெற முடியும். வட்டியானது பி.பி.எஃப் கணக்கிலேயே ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் செலுத்தப்பட்டு விடும்.”

கடன் எடுக்கும் வசதி பற்றி..?

“பி.பி.எஃப் கணக்கில் கடன் வாங்கும் வசதியும் வழங்கப் படுகிறது. பி.பி.எஃப் கணக்குத் தொடங்கப்படும் நிதியாண்டு அல்லாமல், அடுத்து ஒரு நிதி ஆண்டு முடிவடைந்த பிறகு மூன்றாம் நிதி ஆண்டிலிருந்து அந்தக் கணக்கின் மீது கடன் பெறமுடியும். கணக்கு 2010-11-ல் தொடங்கியிருந்தால், 2012-13-ம் நிதி ஆண்டில் கடன் பெறலாம். உங்களுடைய கணக்கில் உள்ள தொகையில் 25% கடன் பெற முடியும். ஒரு நிதி ஆண்டில் ஒரு முறை மட்டுமே கடன் பெற முடியும். ஐந்தாம் நிதி ஆண்டு வரை மட்டுமே கடன் வசதி உண்டு. மேலும், ஒருமுறை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கடனுக்கு பி.பி.எஃப்க்கு வழங்கப்படும் வட்டியைவிட 1% கூடுதல் வட்டி வசூலிக் கப்படும்.”

திட்ட முதிர்வு காலம் குறித்து..?

“இந்த பி.பி.எஃப் திட்டம் 15 ஆண்டு திட்டம் என்றாலும், முதிர்வுக் காலம் என்பது திட்டம் தொடங்கிய ஆண்டு தவிர்த்து, 15 ஆண்டுகள் நிறைவு பெற வேண்டும். முதிர்வுக் கால நிறைவுக்குப் பிறகு கணக்கை முடித்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி மொத்த முதிர்வுத் தொகையைப் பெறலாம். அல்லது முதலீடு ஏதும் செய்யாமல் தொடர்ந்து திட்டத்தைத் தொடரும் வசதியும் உள்ளது. தொடரும் ஆண்டு களுக்கு வட்டி வழங்கப்படும். அதற்கு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் பணத்தை எடுக்கலாம்."

இடையில் பணம் எடுக்க முடியுமா?“

“ஏதேனும் அவசரத் தேவை காரணமாக இடையில் பணம் எடுக்க விரும்பினால் அதற்கான வசதியும் இதில் உண்டு. கணக்குத் தொடங்கிய ஆண்டு தவிர்த்து, அடுத்த ஐந்தாண்டு நிறைவுக்குப் பிறகு, 50% வரை இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். பேலன்ஸ் கிரெடிட்டில் 50% வரை எடுக்க முடியும். இவ்வாறு ஒரு முறை மட்டுமே பணத்தை எடுக்க அனுமதி உண்டு. செயலிழந்த கணக்கு எனில், அதில் பணம் எடுக்கும் அனுமதி வழங்கப்படாது. அதேபோல், கணக்கை முன்பே முடிக்க விரும்பினாலும் ஐந்தாண்டு நிறைவுக்குப் பிறகே முடிக்க முடியும். ஆனால், தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே கணக்கை முன்பே முடிக்க அனுமதி உண்டு. முன்பே கணக்கை முடிக்க 1% வட்டி பிடித்தம் செய்யப்படும்.”

கணக்குதாரர் இறந்துவிட்டால் என்ன செய்வது..?

"கணக்குதாரர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியாது. கணக்கை முடிக்கும்போது அதற்கான வட்டியும் வழங்கப்படும்.”