பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு சரியாகத் திட்டமிடுவது எப்படி?

நிதித் திட்டமிடல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் திட்டமிடல்

நிதித் திட்டமிடல்

இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் இரண்டு இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்தனர். இருவரும் ஸ்மார்ட்டானவர்கள் தான். இருவரும் எதிர்காலக் கனவுகளுடன் வேலையில் சேர்ந்தனர். அண்மையில் கல்லூரிப் படிப்பின் 25-வது ஆண்டு விழாவை சக மாணவர்கள் ஏற்பாடு செய்திருக்க, இரு வரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இருவருக்கும் திருமணமாகி, ஆளுக்கு ஒரு மகன் இருக்க, இருவரும் வேறுவேறு நிறுவனங்களில் கிட்டத்தட்ட ஒரே பதவியில் இருந்தார்கள். சம்பளத்திலும் பெரிய வித்தியாச இல்லை. ஒரே ஒரு வித்தியாசம், ஒருவரின் மகன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்திருந்தார். மற்றொரு வரின் மகன் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயர் பட்டம் பெற்றிருந்தார்.

த.ராஜன், 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

இந்தப் பெரிய வேறுபாட்டுக்கு என்ன காரணம்?

முக்கியமான காரணம், நிதித் திட்டமிடல் படி ஒருவர் தன் பிள்ளையின் எதிர்காலத் தேவைக்கு முதலீடுசெய்து, அதைப் பயன்படுத்தி மகன் ஆசைப்பட்ட டாக்டர் படிப்பை வெளிநாட்டில் படிக்க வைத்து அவரை டாக்டர் ஆக்கிவிட்டார். இன்னொருவர், அப்படி எதுவும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கிலேயே செலவு செய்து வந்ததால், அவரிடம் இருந்த பணத்தைக் கொண்டு மகன் ஆசைப்பட்டபடி படிக்க வைத்திருக்கிறார்.

கல்விச் செலவு அதிகரித்துக்கொண்டிருந் தாலும், பிள்ளைகளின் உயர்கல்வியில் ஒரு பொறுப்புள்ள பெற்றோராக நடந்துகொள் வார்கள். அவர்கள் பிள்ளைகளின் உயர் கல்வியில் சமரசம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக் கான அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட நல்ல முதலீட்டுத் திட்டம் தேவை ஆகும்.

பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு சரியாகத் திட்டமிடுவது எப்படி?

காப்பீடு கட்டாயம்...

உங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் பிள்ளைகளையும் சேருங்கள். கவரேஜ் குறை வாக இருந்தால், அதை அதிகரித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செலவுகள் அதிகமானால், சேமிப்பு மற்றும் முதலீடுகள் கரையாமல் இருக்கும். மேலும், உங்களுக்கு எடுத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசியில் கவரேஜ் தொகையை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

உங்களின் ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு முழுக்க முழுக்க ஆயுள் கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ளவும். அப்போதுதான் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் எதிர்பாராத விதமாக நடந்தால் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் போன்றவை தடைபடாமல் உரிய நேரத்தில் நிறைவேறும்.

உயர்கல்விக்கான செலவுகள்...

கல்விக்கான செலவுகள் மற்றும் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவ தால், பிள்ளைகளின் உயர்கல்விக்கென தனியே சேமித்து வருவது அவசியமாகும். மாதக் குடும்ப பட்ஜெட்டில் அதற்கு எனத் தனியே ஒரு தொகையை ஒதுக்குவது கட்டாயமாகும். எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிர மாக பிள்ளைகளின் உயர் கல்விக்கான முதலீட்டை ஆரம் பிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பது நல்லது. அப்போதுதான் குறைவான முதலீட்டுத் தொகை இருந்தாலே பெரிய தொகுப்பு நிதி சேரும்.

உயர்கல்விக்கான செலவைக் கணக்கிடும்போது பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை எனில், பணப்பற்றாக் குறை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை உருவாகக்கூடும்.

இப்போது ஆன்லைனின் உயர்கல்வி செலவைக் கணக் கிட உதவும் நிறைய கால்கு லேட்டர்கள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி சரியான தொகையைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

பிள்ளையின் உயர்கல்விக் கான செலவு இன்றைய மதிப் பில் ரூ.10 லட்சம் என வைத்துக் கொள்வோம். பிள்ளையின் தற்போதைய வயது 5 என வைத்துக்கொள்வோம்.

18 வயதில் பிள்ளையின் உயர்கல்விச் செலவுக்குப் பணம் தேவை என வைத்துக் கொள்வோம். பணவீக்க விகிதம் ஆண்டுக்கு சுமார் 6% என வைத்துக்கொள்வோம்.

பிள்ளையின் உயர்கல்விக்கு இதுவரைக்கும் ரூ.50,000 முதலீடு செய்யப்பட்டிருக்கிறது எனவும் வைத்துக்கொள்வோம். பிள்ளையின் உயர்கல்விக்கு இன்னும் 13 ஆண்டுகளே இருப்பதாலும் கல்விக்கான முதலீடு என்பதாலும் நடுத்தர அளவு ரிஸ்க் உள்ள ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 9% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள் வோம்.

உயர்கல்வி கால்குலேட்டரில் இந்த விவரங்களை உள்ளீடு செய்தால், பிள்ளையின் உயர் கல்விக்கு இன்னும் 13 ஆண்டு கள் கழித்து ரூ.21,32,928 தேவை எனக் காட்டும். இந்தத் தொகை யைச் சேர்க்க மாதம் ரூ.6,724 தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும்.

இது ஓர் உதாரணம்தான். நீங்கள் உங்கள் பிள்ளையின் வயது, முதலீட்டை ஆரம்பிக்கும் காலம், உயர்கல்வி செலவின் இன்றைய மதிப்பு, பணவீக்க விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுப்பு நிதியைக் கணக்கிட்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்து வருவது அவசியம்.

பிள்ளை பிறந்தவுடன் உயர் கல்விக்கான செலவுக்கு முதலீடு செய்யும்போது முதலீட்டுக் காலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருக்கும். அப்போது லார்ஜ்கேப் ஃபண்டுகள், மல்ட்டிகேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில்கூட சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்து வந்தால், அதிக தொகுப்பு நிதி சேரும். முதலீட்டில் ரிஸ்க் எடுக்கவில்லை எனில், பெண் பிள்ளை எனில், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில்கூட முதலீடு செய்து வரலாம்.

பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு சரியாகத் திட்டமிடுவது எப்படி?

பிள்ளைகளின் இதர செலவுகளுக்கு நிதித் திட்டம்...

உயர்கல்வி செலவு தவிர, பிள்ளைகளுக்குக் கல்யாணம், வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சி / வணிகம் செய்வதற்கு தேவையான தொகுப்பு நிதி ஆகியவற்றுக்கும் பெற்றோர் நிதித் திட்டம் தீட்டுவது அவசியமாகும்.

உயர்கல்விக்குத் திட்டம் தீட்டியது போல, இந்தத் தேவை களுக்கும் பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு முதலீடு செய்து வருவது அவசியமாகும்.

இப்படி நிதித் திட்டம் வகுத்துக்கொள்ள போதிய நிதி அறிவு, திறமை இல்லாதபட்சத்தில் அதற்கென இருக்கும் நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம். அவர்கள் உங்களின் நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தி நிதி இலக்குகள் சரியாக நிறைவேற உதவி செய்வார்கள். சரியாகத் திட்டமிட்டு, அதன்படி சேகரிக்கத் தொடங்கினால், உங்கள் பிள்ளையும் வெளிநாடுகளில் படிப்பது நிச்சயம்!

பிள்ளைகளுக்கு சேமிப்பைக் கற்றுக்கொடுங்கள்!

உங்களின் மைனர் பிள்ளைகளின் பெயரில் வங்கிச் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து கொடுக்கலாம். அதில், அவர்களுக்கு பிறந்த நாள், பண்டிகைகளின்போது கிடைக்கும் பரிசுத் தொகைளைச் சேமித்து வரலாம். மேலும், அவர்களுக்குக் கொடுக்கும் பாக்கெட் மணியின் ஒரு பகுதியைச் சேமித்து வரும் பழக்கத்தை உருவாக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குப் பணத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். இது எதிர்காலத்தில் அவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க வழி வகுக்கும்.

மைனர் பெயரில் நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்துவரலாம். ஆனால், இவற்றைப் பணமாக்குவது அவ்வளவு சுலபமில்லை. மேலும், மைனர் பெயரில் இருக்கும் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு எதிராக அடமான கடனை வங்கிகள் தருவதில்லை. எனவே, நீங்கள் உங்கள் பெயரிலேயே பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்து, தேவைக்கேற்ப விற்று பிள்ளைகளின் பணத் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.