Published:Updated:

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு... மூன்று வழிமுறைகள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு... மூன்று வழிமுறைகள்..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்வது என முடிவு செய்துவிட்டால், செய்கூலி, சேதாரம், தரம், பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி, காகிதத் தங்கம்தான் (Paper Gold). இதை டிஜிட்டல் கோல்டு எனலாம். டிஜிட்டல் வழியில் தங்கத்தில் முதலீடு செய்ய மூன்று முக்கிய வழிகள் இருக்கின்றன.

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தங்கத்தில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மற்றும் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களை வைத்திருக்கின்றன. கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் போதும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் பொறுத்து மாதம் ரூ.200, ரூ.500, ரூ.1,000 என்பது போல் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இந்த முறையில் தங்கமாகத் தரமாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்று நாம்தான் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு... மூன்று வழிமுறைகள்..!

கோல்டு இ.டி.எஃப்

டீமேட் கணக்கு இருந்தால்தான், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில், பல நிறுவனங்கள் ஒரு கிராம் தங்கத்தை நூறாகப் பிரித்து ஒரு யூனிட் என வைத்துள்ளன. அந்த வகையில் ரூ.50 இருந்தால்கூட இதில் முதலீடு செய்யலாம். இந்த முறையிலும் யூனிட்டுகளை விற்று நாம்தான் பணம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

கோல்டு பாண்ட்

நீண்ட கால முதலீடு, அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசு சார்பாக ரிசர்வ் வங்கி வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டு களில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு நான்கு முறை கோல்டு பாண்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டி தரப்படுகிறது. எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வின்போது பணத்தைப் பெற்றுக்கொண்டால், மூலதன ஆதாய வரி கிடையாது. இந்த முறையிலும் தங்கமாகக் கிடைக்காது. நாம்தான் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism