Published:Updated:

ஹெல்த் பாலிசி இருந்தாலும் அவசர கால நிதி ஏன் அவசியம்? வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர்

அவசர கால நிதி
பிரீமியம் ஸ்டோரி
அவசர கால நிதி

E M E R G E N C Y F U N D

ஹெல்த் பாலிசி இருந்தாலும் அவசர கால நிதி ஏன் அவசியம்? வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர்

E M E R G E N C Y F U N D

Published:Updated:
அவசர கால நிதி
பிரீமியம் ஸ்டோரி
அவசர கால நிதி

பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்போது அவசர கால நிதியை ஏன் சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது தவறான கருத்தாகும். ஹெல்த் பாலிசி எடுத் திருக்கும் அதேநேரத்தில் அவசர கால நிதியை (எமர்ஜென்சி ஃபண்ட்) வைத்திருப்பது அவசியமாகும்.

ஹசன் அலி 
ஆலோசகர், 
Siptiger.com
ஹசன் அலி ஆலோசகர், Siptiger.com

திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவச் செலவுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும். அதே நேரத்தில், அதை நம்பி மட்டுமே 100% இருந்துவிட முடியாது. காரணம், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு களுக்குப் பிறகுதான் க்ளெய்ம் செய்ய முடியும். அப்போது நோய் பாதிப்பு ஏற்பட்டால் கையிலிருந்துதான் செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்போது அவசர கால நிதி சேர்த்து வைத்திருந்தால், நிலைமையைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

உதாரணமாக, அண்மைக் காலத்தில் கோவிட் சார்ந்த சிகிச்சை செலவில் தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 43% செலவு தொகைதான் க்ளெய்ம் தரப்பட்டிருக்கிறது என ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்ப ரேஷன் (General Insurance Corporation) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, சராசரியாக ரூ.1,90,450 க்ளெய்ம் செய்யப்பட்ட நிலையில் 1,09,160 ரூபாய்தான் க்ளெய்ம் தொகை தரப்பட்டிருக்கிறது. அதாவது, சராசரியாக ரூ.81,290 சொந்தப் பணத் திலிருந்து எடுத்துச் செலவு செய்திருக் கிறார்கள். இதுவே சிகிச்சை செலவு ரூ.6 லட்சமாக இருந்திருந்தால், ரூ.2.4 லட்சம் சொந்தப் பணத்தைச் செலவு செய்திருக்க வேண்டியிருந்திருக்கும். இப்போது புரிகிறதா, அவசர கால நிதி ஏன் வேண்டும் என்று.

ஹெல்த் பாலிசி இருந்தாலும் அவசர கால நிதி ஏன் அவசியம்? வழிகாட்டுகிறார் நிதி ஆலோசகர்

மேலும், பொதுவான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பற்களில் ஏற்படும் பாதிப்புகள், பிரசவ செலவுகள் போன்றவற்றுக்கு கவரேஜ் கிடையாது. இதுபோன்ற செலவுகளை எமர்ஜென்சி ஃபண்ட் இருந்தால்தான் ஈடுகட்ட முடியும். இந்தத் தொகையைக் கடனாக வாங்குவது கொரானா பரவல் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழலில் மிகவும் கடினம். மேலும், கொரோனா காலத்தில் சம்பளம் குறைக்கப் பட்டாலோ, வேலை இழப்பு ஏற்பட்டாலோ, குடும்பச் செலவுகள் பாதிக்காமல் இருக்கவும் இந்த அவசர கால நிதி அவசியம் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும்.

மாதக் குடும்பச் செலவைப்போல, 3 - 6 மடங்குத் தொகையை அவசரச் செலவு நிதியாக அனைவரும் வைத்திருக்க வேண்டும். இதை 12 மாதச் செலவு தொகையாக வைத்திருப்பது நல்லதுதான்.குடும்பத்தில் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால் சற்றுக் கூடுதலாக இந்த எமர்ஜென்சி ஃபண்ட் வைத்திருப்பது நல்லது.

அவசர காலச் செலவுக்கான பணத்தைக் கணவன், மனைவி இணைந்து ஜாயின்ட் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியும்.

இந்தத் தொகையை ஆர்.டி, எஸ்.ஐ.பி முறையில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து சேர்த்து வரலாம். இந்தத் தொகையை எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் விதமாக ஏ.டி.எம் வசதியுள்ள வங்கிச் சேமிப்பு கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் வைத்திருக்கலாம்.

அவசர கால நிதியிலிருந்து, பணம் எடுத்துச் செலவு செய்தால், மீண்டும் அதில் சேர்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் மீண்டும் ஏதாவது பிரச்னை வந்தால் அதைச் சுலபமாக சமாளித்து கடன் இல்லா வாழ்க்கை வாழ முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism