Published:Updated:

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தெந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 18

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தெந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

சேமிப்பும் முதலீடும் - 18

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

கடன் ஃபண்டுகள் மூலம் நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட கால நிதித் தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதைப் பார்ப்போம்.

நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் ஃபண்டு களில் மீடியம் டூரேஷன் ஃபண்ட், மீடியம் டு லாங் டூரேஷன் ஃபண்ட், கில்ட் ஃபண்ட் வித் 10 இயர் கான்ஸ்டன்ட் டூரேஷன் ஃபண்ட் ஆகியவை முக்கியமானவையாகும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

கடன் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, மூன்று ஆண்டுக்கு உட்பட்ட முதலீடுகளைக் குறுகிய காலம் என்றும், மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு உட்பட்ட முதலீடுகளை நடுத்தரக் காலம் என்றும், ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீடுகளை நீண்ட காலம் என்றும் சொல்லலாம்.

மீடியம் டூரேஷன் ஃபண்ட்  

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், இந்தத் திட்டத்தில் 3 மற்றும் 4 ஆண்டுகளுக்கிடையே முதிர்வு கொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங் களில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்டில் சிறிய வீடு வாங்க, வீட்டுக் கடன் வாங்க முன்பணம், சிறிய கார் வாங்க தேவைப்படும் தொகை, வெளிநாட்டுச் சுற்றுலா, பிள்ளைகளின் கல்வி அல்லது கல்யாணத்துக்கு சுமார் 3 ஆண்டுகள்தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இந்த நிலையில், முதலீட்டில் ரிஸ்க் எடுப்ப வராக இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத வராக இருந்தாலும் இந்த மீடியம் டூரேஷன் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) அல்லது லிக்விட் ஃபண்டில் மொத்த முதலீட்டை மேற்கொண்டு விட்டு அதிலிருந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.டி.பி) முறையில் மீடியம் டூரேஷன் ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றிக் கொள்வது லாபகரமாக இருக்கும்.

இந்த வகை ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், மூன்றாண்டு மற்றும் ஐந்து ஆண்டு காலத்தில் முறையே 5% மற்றும் 6% உள்ளது. அதே நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் முறையே 8 - 9% மற்றும் 7.5 - 8.5 சதவிகிதமாக உள்ளது.

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தெந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

மீடியம் டு லாங் டூரேஷன் ஃபண்ட்

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகை, 4 மற்றும் 7 ஆண்டுகளுக்கிடையே முதிர்வு கொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டில் பெரிய வீடு வாங்க வீட்டுக் கடன் முன்பணம், பெரிய கார் வாங்கத் தேவைப்படும் தொகை, வெளிநாட்டுச் சுற்றுலா, பிள்ளைகளின் கல்வி அல்லது கல்யாணத்துக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது என்கிற நிலையில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இந்த மீடியம் டூரேஷன் ஃபண்ட் இருக்கிறது. இதில் எஸ்.ஐ.பி முறை அல்லது மொத்த முதலீட்டை மேற்கொள்வது லாபகரமாக இருக்கும்.

மீடியம் டு லாங் டூரேஷன் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுக் காலத்தில் முறையே 6.33% மற்றும் 5.85 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் முறையே 8.50 - 9.10% மற்றும் 7.5 - 8.3 சதவிகிதமாக உள்ளது.

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தெந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

லாங் டூரேஷன் ஃபண்ட்  

இந்த ஃபண்டில் திரட்டப்படும் தொகை, ஏழு ஆண்டுகளுக்கு மேல் முதிர்வு கொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகும். கார் வாங்க, வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணத்துக்கு சுமார் ஏழு ஆண்டுகள் இருந்தால், இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீடு செய்யலாம். இவற்றைக் கலந்தும் செய்யலாம். லாங் டூரேஷன் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுக் காலத்தில் முறையே 8%, 7% மற்றும் 8 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் முறையே 8.50 - 9.10% மற்றும் 7.5 - 8.3 சதவிகிதமாக உள்ளது.

நடுத்தர, நீண்ட கால கடன் ஃபண்டுகள்... எந்தெந்தத் தேவைகளுக்கு முதலீடு செய்யலாம்?

கில்ட் ஃபண்ட் வித் 10 இயர் கான்ஸ்டன்ட் டூரேஷன் ஃபண்ட்

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் ஏறக் குறைய 10 ஆண்டுகள் முதிர்வு கொண்ட அரசுக் கடன் பத்திரங்களில் குறைந்தபட்சம் 80% முதலீடு செய்யும் திட்டம் இதுவாகும்.

இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம், மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுக் காலத்தில் முறையே 7.90%, 7.35% மற்றும் 9.32 சதவிகிதமாக உள்ளது.

அதே நேரத்தில், மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுக் காலத்தில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் முறையை 6.15 - 9.45% மற்றும் 5.1 - 9.15 சதவிகிதமாக உள்ளது.

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், பெரிய கார், சொந்த வீடு வாங்க, பிள்ளை களின் கல்வி மற்றும் திருமணத் துக்கு சுமார் 10 ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த ஃபண்ட் பிரிவில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீடு செய்யலாம். இரண்டு முறைகளில் கலந்தும் முதலீடு செய்து வரலாம்.

மேற்கண்ட ஃபண்டுகளில் பெரும்பாலானவற்றில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் அல்லது எப்போது வேண்டுமானாலும் பணமாக்கிக்கொள்ளும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட் ஃபண்ட் வகையைச் சேர்ந்த தாகும். இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் தொகை, முதலீடு செய்யும் கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலத்துக்கு இணையாக ஒருவரின் முதலீட்டுக் காலமும் இருப்பது லாபகரமாக இருக்கும்.

வருமான வரி அனுகூலம்

மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கடன் ஃபண்டுகள் வரிக்குப் பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும். இதற்குக் காரணம், கடன் ஃபண்டுகளில் பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும் என நாம் ஏற்கெனவே சொல்லி யிருக்கிறோம்.

அதே நேரத்தில், ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அந்த வகையில் 20% மற்றும் 30% வரி வரம்பில் வருபவர்களுக்கு மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கும்.

(முதலீடு செய்வோம்)

எக்காலத்துக்கும் ஏற்ற கடன் ஃபண்ட்..!

 மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் எக்காலத்துக்கும் ஏற்றதாக டைனமிக் பாண்ட் ஃபண்ட் (Dynamic Bond Fund) இருக்கிறது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் தொகை, அனைத்து முதிர்வுகொண்ட கடன் சந்தை மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப பிரித்து முதலீடு செய்யப்படும். நாம் முதலீடு செய்யும் தொகை ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும். ஆனால், உறுதியாக எப்போது தேவைப்படும் எனத் தெரியவில்லை எனில், டைன மிக் பாண்ட் ஃபண்ட் ஏற்றதாகும். இந்த ஃபண்ட் பிரிவு ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு மற்றும் பத்து ஆண்டுக் காலத்தில் முறையே 5.20%, 6.78%, 6,25% மற்றும் 7.77% வருமானம் கொடுத் திருக்கிறது. டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் முறையே ஓராண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுக் காலத்தில் முறையே 6.52 - 12%, 8.6 - 9.35% மற்றும் 7.80 - 8.5 சதவிகிதமாக உள்ளது.