Published:Updated:

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டில் லாபம் பெறும் வழிமுறைகள்!

ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

விழிப்புணர்வு

இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டில் லாபம் பெறும் வழிமுறைகள்!

விழிப்புணர்வு

Published:Updated:
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்ட் லாபங்கள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் முதலில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி தரியன், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகள் செயல்படும் விதம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘ஆக்டிவ் சாய்ஸ், பேசிவ் சாய்ஸ் ஆகிய இரு முதலீட்டு முறைகளில் பேசிவ் சாய்ஸில் இ.டிஎஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுக்கு முக்கியமான இடம் உண்டு. இவற்றில் நிர்வாகக் கட்டணம் மிகவும் குறைவு. இவற்றின் மூலம் நீண்ட காலத்தில் சிறப்பான லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு’’ என்றார். மேலும், இந்த முதலீட்டு முறைகளில் உள்ள பாசிட்டிவ்வான விஷயங்கள் பற்றியும், வரி உட்பட கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஏ.கே.நாராயண்,  ஜீவன் கோஷி தரியன்
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி தரியன்

அடுத்து பேசிய முதலீட்டு நிபுணர் ஏ.கே.நாராயண், இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்டார். தவிர, இவற்றில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதையும் விளக்கிச் சொன்னார். குறிப்பாக, பேங்க், ஆட்டோ, பார்மா தொடர்பான இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும் பொதுத்துறை நிறுவனங்களின் இ.டி.எஃப்-களிலும் முதலீடு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘7 - 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது இ.டி.எஃப் முறையில் முதலீடு செய்யலாமா?’’ என ஒரு வாசகர் கேட்டதற்கு, ‘‘நீண்ட கால முதலீட் டுக்கு பேசிவ் முதலீட்டு முறைகளைவிட ஆக்டிவ் முதலீட்டு முறைகளே அதிக வருமானம் தருவதாக இருக்கும்’’ என்றார் ஜீவன்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவைப் பார்க்க: http://bitly.ws/sCji