ஒளிமயமான ஓய்வுக்காலத்துக்கு திட்டமிடல்...’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேனல் ஹெட் எல்.வெங்கடேசன், ‘‘நம்மில் பெரும்பாலானோர் 48, 50 வயதில்தான் ஓய்வுக் கால முதலீட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள். இது மகா தவறு. குறைந்தபட்சம் 40 வயதிலாவது அதைச் செய்துவிட வேண்டும். ஓய்வுக்கால முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பித்தால் குறைவான தொகையை முதலீடு செய்தால் போதும். ஓய்வுக்கால தொகுப்பு நிதியை (கார்பஸ்) முடிவு செய்யும்போது மருத்துவப் பணவீக்க விகிதம் சுமார் 10% கணக்கில் கொள்ள வேண்டும்” என்றார்.

அடுத்து பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், primeinvestor.in), ‘‘ஓய்வுக்கால முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி முறை சரியாக இருக்கும். ஓய்வுக் கால முதலீட்டுத் தொகையை மாதம்தோறும் எடுத்து செலவு செய்ய எஸ்.டபிள்யூ.பி பிளான் முறை பொருத்தமாக இருக்கும்” என்றார்.

இறுதியில் முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க: https://www.facebook.com/NaanayamVikatan/videos/2573282032975337