நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அதிக பணவரத்து கொண்ட நிறுவனங்களில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? லாபம்தரும் முதலீட்டு ஃபார்முலா...

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

I N V E S T M E N T

ஜினேஷ் கோபானி  ஹெட் ஈக்விட்டி, ஆக்ஸிஸ் ஏ.எம்.சி

நீங்கள் புதிதாக ஒரு பேக்கரியை ஆரம்பிக் கிறீர்கள். ரூ.1,00,000-க்கு மூலப்பொருள்களை வாங்கி, அதன் மூலம் கேக்குகளைத் தயாரிக் கிறீர்கள். அதை ரூ.1,30,000–க்கு விற்பனை செய்கிறீர்கள். வாங்கியவர் உங்களுக்கு முன்பணம் எதுவும் தரவில்லை. மேலும், அவர் 15 நாள் களுக்குப் பிறகு, அந்தத் தொகையை உங்களுக்குத் தருவதாகச் சொல்கிறார்.

இது, உங்கள் முதல் வாடிக்கையாளர் மற்றும் புதிய வணிகம் என்பதால், பணத்தை 15 நாள்கள் கழித்துப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொள் கிறீர்கள். இந்தப் பரிவர்த்தனையின் முடிவில் உங்கள் ரொக்கப் பணநிலை (cash position) என்ன என்பதைப் பார்ப்போம்.

உங்கள் வருவாய் (விற்பனை மதிப்பு) = ரூ.1,30,000. ரூ.1,00,000 மதிப்புள்ள மூலப்பொருள்கள் உற்பத்தியான பொருள்களை ரூ.1,30,000–க்கு விற்பனை செய்திருக் கிறீர்கள். எனவே, உங்கள் லாபம் = 1,30,000 – 1,00,000 = ரூ.30,000 (பணியாளர் சம்பளச் செலவு இல்லாமல்).

ஆனால், உங்களிடம் இப்போது மேற்கொண்டு செலவு, கேக் செய்ய பணம் எதுவும் இல்லை. இந்த வியாபாரம் மூலம் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை அல்லது உங்கள் கைக்குப் பணம் வரவில்லை. அடுத்து பணம் இருந்தால்தான் புதிதாகப் பொருள் களைத் தயாரிக்க முடியும். அப்படித் தயாரித்தால், பொருளை வாங்கிக் கொண்டு போனவர், திரும்ப வந்து பணம் கொடுத்துப் பொருளை வாங்குவார்.

ஜினேஷ் கோபானி  ஹெட் ஈக்விட்டி, ஆக்ஸிஸ் 
ஏ.எம்.சி
ஜினேஷ் கோபானி  ஹெட் ஈக்விட்டி, ஆக்ஸிஸ் ஏ.எம்.சி

பணவரத்து என்னும் ஆக்ஸிஜன்...

இது ஓர் எடுத்துக்காட்டுதான். இந்த வகையான பணச் சிக்கல்கள், சூழல்கள் வணிக உலகில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும்கூட ஏற்படலாம். ஒரு வணிகத்தில் / நிறுவனத்தில் பணவரத்து (cash flow) நன்றாக இருந்தால்தான் வணிகம் நன்றாக இருக்கும்; விற்பனை நன்றாக இருக்கும்; ஆனால், அது பண வரத்தை உருவாக்கவில்லை என்றால், அது சிறந்த வணிகம் / தொழிலல்ல.

ஒரு வணிகமானது தொடர்ச்சி யான பண வரத்தை உருவாக்கவில்லை என்றால், எவ்வாறு புதிய பொருள் களை உற்பத்தி செய்ய முடியும், வணிகத்தில் மேலும் எப்படி முதலீடு செய்ய முடியும்? எனவேதான், பணவரத்தை ஒரு தொழிலின் ஆக்ஸிஜன் அதாவது, பிராண வாயு என்கிறோம்.

நாம் அனைவரும் சம்பளம் அல்லது வருமானம் மூலம் பணம் சம்பாதிக்கிறோம். எனவே, நாம் நம் வங்கிக் கணக்குகளில் பண வரத்தைப் பெறுகிறோம். இதேபோல், நாம் செலவு செய்யும்போது நம் கணக்கி லிருந்து பணம் வெளியேறுவது (cash outflow) நடக்கும். பணவரத்து என்பது உங்கள் வணிகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாயும் பணம். பாசிட்டிவ் பணவரத்து என்பது நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும் பணத்தைவிட, நிறுவனத் துக்குள் அதிக பணம் வருவதைக் குறிக்கும். வணிக செயல்திறனை நிர்ணயிக்கும்போது இது லாபத்தைப் போலவே முக்கியமானதாகும்.

நிறுவனம் அதிக தாமதமாகப் பணத்தைப் பெறவில்லை என்றால், அதன் செலவுகள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், நிறுவனத்தில் கடுமையான நிதி அழுத்தம் உருவாகும். நிறுவனம், அதன் குறுகியகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இது நிறுவனத்துக்குக் கூடுதல் சுமையாக மாறும்.

முதலீடு
முதலீடு

ரொக்கப் பணம் ஏன் ராஜா? (Why Cash is the King?)

எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படப் பணவரத்து மிக முக்கியமான ஒரு நிதிக் காரணி (financial factor) ஆகும். ஒரு நிறுவனம் நல்ல வருவாய், நியாயமான செலவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தைக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், அதன் நிதி நடவடிக்கைகள் திறமையாக வடிவமைக்கப்படவில்லை எனில், அது நெகட்டிவ் பணவரத்தைக் கொடுத்து விடும். இது மிக அதிக வருமானம் ஈட்டும் ஒரு நபரைப் போன்றதாகும். ஆனால், அவரது செலவுகள் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் நெகட்டிவ் பணவரத்து இருக்கும். அத்தகைய நபர் என்ன செய்வார்? அவர் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து கடன் வாங்குவார். இது அவரது நிதிச் சுமையை அதிகரிக்கும்.

நிறுவனங்களுக்கும் இதேதான் நடக்கும். பாசிட்டிவ் பணவரத்து இல்லாமல் இருந்தால், எந்தவொரு நிறுவனமும் எவ்வளவு சிறப்பான வணிக மாதிரியை (business model) மேற்கொண்டிருந்தாலும் அது திவாலாகிவிடும். பண வரத்துக் குறைந்த நிலையில் நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்கு அல்லது சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டதை நாம் கண்டிருக்கிறோம்.

முதலீடு / மூலதனச் செலவுகள்

வணிகத்தை வளர்க்கவும் விரிவு படுத்தவும், ஒரு நிறுவனம் பெரும்பாலும் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட், இயந்திரங்கள் அல்லது தொழில் நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். கையில் பணம் இல்லாமல், ஒரு நிறுவனத்தால் இந்தத் தேவையான முதலீடுகளைச் செய்ய முடியாது. இதனால், நல்ல பணவரத்து இல்லாத நிறுவனத் தால் ஒருபோதும் சிறப்பான வளர்ச்சியைப் பெற முடியாது.

வணிகத்தை விரிவுபடுத்த கடன் வாங்க முடியும்தான். ஆனால், கடன் வாங்கும்போது ஆண்டுக்கு சுமார் 12% - 15% வட்டி கட்ட வேண்டியிருக்கும். இது நிறுவனத்தின் நிகர லாபத்தைச் சாப்பிட்டுவிடும்.

விரிவாக்கம் செய்வது எளிது...

ஒரு நிறுவனத்தில் ரொக்கக் கையிருப்பு பணம் அதிகமாக இருந்தால், அது பிற நிறுவனங் களை வாங்குவதன் மூலம் சுலபமாக விரிவாக்க வாய்ப்பு களைப் பெறும். இது போன்ற வாய்ப்புகள், எப்போதாவது ஒரு முறைதான் வரும். அப்போது, குறிப்பிடத்தக்க ரொக்கப் பணத்தை அல்லது எளிதில் பண மாக்கக்கூடிய முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களால் அவற்றைச் செயல்படுத்த முடியும்.

டிவிடெண்ட் வழங்கலாம்...

நிறுவனங்கள் பங்கு முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் அளிப்பது மற்றும் பங்குகளைத் திரும்ப வாங்குவது (பைபேக்) மூலம் வெகுமதி அளிக்க முடியும். முதலீட்டாளர்கள் பங்குகளை விற்காமல் வருமானம் ஈட்ட ஒரு சிறந்த வழியாகத் தொடர் டிவிடெண்ட் இருக்கிறது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் கொடுக்க நிறுவனங் களுக்குப் பணம் தேவைப்படுகிறது. பாசிட்டிவ் பணவரத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தால் தொடர்ந்து டிவிடெண்ட் வழங்க முடியும்.

நெகட்டிவ் பணவரத்தால் ஏற்படும் பிரச்னைகள்...

கோவிட் -19 வைரஸ் பரவல் போன்ற நிகழ்வுகள் நிறுவனங்களின் விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தைப் பாதித்தன.தொற்றுநோய் காரணமாக நிறுவனங் களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக, வருவாய் ஈட்ட முடியவில்லை. பணியாளர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பல நிறுவனங் களால் சம்பளம் கொடுக்கக்கூட முடியவில்லை. போதுமான வருமானம் இல்லாததால் பணியாளர்கள் எண்ணிக் கையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. ஆனால், ரொக்கப் பணம் மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளை வைத்திருந்த நிறுவனங்கள் நெகிழ் வானதாகவும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எளிதில் கடந்தும் சென்றன.

பங்கு வாங்கும்போது பணவரத்தைக் கவனியுங்கள்...

முதலீட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அதிக பணம் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஏனெனில், இந்த நிறுவனங்கள், பணம் இல்லாத நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வருவாய் குறைந்தாலும் தாங்கிக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும்.

புதிய இயல்புநிலை திரும்பியவுடன் பணவளம் மற்றும் ஆரோக்கிய மான பேலன்ஸ் ஷீட் கொண்ட நிறுவனங்கள், மற்ற நிறுவனங் களைக் காட்டிலும் மிக விரைவி லேயே வளர்ச்சி வாய்ப்புகளை மீண்டும் பெற முடியும்.

பாசிட்டிவ் பணவரத்து மற்றும் வலுவான அடிப்படைகளைக் (strong fundamentals) கொண்டிருக்கும் நிறுவனங்களை அடையாளம் காணும் திறன் பங்கு முதலீட்டின் (stock investing) முக்கிய சாராம்சமாகும்.

குறுகியகாலத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும், அதன் பங்கு விலை உயர்வுக்கும் பெரிய தொடர்பு இல்லாததுபோல் தெரியும். ஆனால், நீண்ட காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடு, பணவரத்து, நிகர லாபம் அதிகரிப்பு போன்றவற்றை ஒட்டிதான் அந்த நிறுவனப் பங்கு விலை அதிகரிக்கிறது.

எனவே, நீண்டகாலத்தில் செல்வம் உருவாக, நல்ல தொடர்ச்சியான பணவரத்தைக் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அவசியம். இந்த நோக்கில் நீங்களும் ஆராய்ந்து முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களாலும் எதிர்காலத்தில் நன்கு செல்வத்தை உருவாக்க முடியும் என்பதை மறக்காதீர்கள்!

பிட்ஸ்

ம் நாட்டில் ஸ்மார்ட் போன்களின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலரை (இந்திய ரூபாய் 140 லட்சம் கோடி) இந்த ஆண்டு எட்டும் என இன்டர் நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (IDC) தெரிவித்து உள்ளது!