Published:Updated:

முதலீட்டாளர்களுக்கு உதவும் வாரன் பஃபெட் முதலீட்டு மொழிகள்..!

வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

முதலீடு

முதலீட்டாளர்களுக்கு உதவும் வாரன் பஃபெட் முதலீட்டு மொழிகள்..!

முதலீடு

Published:Updated:
வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட்டுக்கு இப்போது 91 வயது. அவரின் முதல் முதலீட்டை 11 வயதில் ஆரம்பித்தவர். நீண்ட கால முதலீட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். அவரின் முதலீட்டு அனுபவங்கள் (புதிய) முதலீட்டாளர் களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு சூழ்நிலை களில் முதலீடு பற்றிச் சொன்ன விஷயங்களின் தொகுப்பு இது...

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர் 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர் https://www.wmsplanners.com/

சேமிப்பு...

பொதுவாக, நாம் சம்பளத்தில் செலவு செய்தது போக மீதமுள்ள தொகையைத்தான் சேமிக்கிறோம். ஆனால், “சேமிப்பு போக செலவு செய்யுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.

வீண்செலவின் விளைவு...

‘‘ஒரு பொருள் உங்களுக்குத் தேவை என்று நீங்கள் கருதினால் அதை நீங்கள் அவசர அவசரமாக வாங்காதீர்கள்’’ என்கிற பொன் மொழி மூலம் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்கிறார் பஃபெட். அதாவது, ஒரு பொருளை நீங்கள் வாங்க நினைத்தால், அது உங்களுக்குக் கட்டாய தேவையா, அந்தப் பொருள் இல்லாமலே காலம் தள்ள முடியுமா என்று நிதானமாக யோசித்து வாங்க வேண்டும். அப்படிச் செய்யும்போது மிகவும் தேவையான பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்று சொன்ன வாரன் பஃபெட், ‘‘தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க நேரிடும்” என்று எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

‘‘நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தாலும் வருமானம் வரக்கூடிய வாய்ப்பை முதலீட்டின் மூலம் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் சாகும் வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்’’ என்பது மூலம் முதலீட்டின் முக்கியத்துவத்தை மிக எளிமையாக விளக்குகிறார் வாரன்.

ஒருவர் தனது முதலீட்டை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை, ‘‘அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கா தீர்கள்’’ என்கிறார். அதாவது, எவ்வளவு நல்ல நிறுவனம் அல்லது திட்டமாக இருந்தாலும் மொத்த முதலீட்டையும் அதில் போடக் கூடாது. முதலீட்டைப் பல்வேறு நிறுவனப் பங்குகள் மற்றும் திட்டங்களில் பிரித்து செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது முதலீட்டின் மீதான ரிஸ்க் குறையும் என்பதைதான் வாரன் பஃபெட் இப்படி சொல்லியிருக்கிறார்.

‘‘எப்போதும் ஒரே வருமானத்தை நம்பி இருக்காதீர்கள். இரண்டாவது வருமானத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்’’ என்கிறார் வாரன் பஃபெட். அவர் இரண்டாவது வருமானத்தை நீண்ட கால முதலீடு மூலம் பெறச் சொல்கிறார்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

முதலீட்டில் எப்படி ரிஸ்க் எடுக்க வேண்டும்?

‘‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியாமல் செய்வது மூலம்தான் ரிஸ்க் வருகிறது’’ என்கிறார் வாரன் பஃபெட். அதாவது, முதலீட்டைப் புரிந்து செய்தால் ரிஸ்க் இல்லை என்பது அவரின் கருத்தாகும். அவரைப் பொறுத்தவரை, அவருக்குப் புரியாத முதலீட்டில் ஒருபோதும் முதலீடு செய்ததில்லை.

‘‘உங்களால் புரிந்துகொள்ள முடியாத நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்யக் கூடாது’’ என்கிறார் வாரன்.

‘‘அடுத்து பத்து ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை மூடப்பட்டாலும் நீங்கள் எந்த நிறுவனப் பங்கை வைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருப் பீர்களோ, அந்த நிறுவனப் பங்கை வாங்க வேண்டும்’’ என்பது மூலம் நீண்ட கால முதலீட்டை வாரன் வலியுறுத்துகிறார்.

‘‘இன்று யாரோ ஒருவர் மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறார். அந்த மரத்தை யாரோ ஒருவர் நீண்ட காலத்துக்கு முன்பு நட்டிருக்கிறார்” என்பது மூலம் நீண்ட கால முதலீட்டின் நல்ல பலனை வாரன் பஃப்பெட் மிக எளிமைமையாக விளக்குகிறார்.

‘‘ஒருவர் செய்யும் மிகச் சிறந்த முதலீடு, அவர் அவரின் மீது செய்யும் முதலீடு. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வருமானம் ஈட்ட முடியும்” என்று சொன்ன பஃபெட்டின் கருத்து மிகவும் அர்த்தமுடையது.

முதலீட்டு உலகுக்குப் புதியவர்கள் பஃபெட் சொன்ன இந்தப் பொன் மொழிகளை மறக்கவே கூடாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism