Published:Updated:

முதலீட்டில் லாபத்தை எப்போது வெளியே எடுக்க வேண்டும்?

வ.நாகப்பன் ,  எஸ்.குருராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன் , எஸ்.குருராஜ்

முதலீடு

முதலீட்டில் லாபத்தை எப்போது வெளியே எடுக்க வேண்டும்?

முதலீடு

Published:Updated:
வ.நாகப்பன் ,  எஸ்.குருராஜ்
பிரீமியம் ஸ்டோரி
வ.நாகப்பன் , எஸ்.குருராஜ்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மத்திய பட்ஜெட்டும் நீங்களும்..!’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ், மத்திய பட்ஜெட் என்ன மாதிரியான தாக்கத்தைத் தனிநபர்களில் ஏற்படுத்தி யிருக்கிறது என்பதை விளக்கிப் பேசினார். பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு என்னென்ன புதிய சலுகைகள் வழங்கியுள்ளது என்பதையும் சொன்னார்.

அடுத்து பேசிய நிதி ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘நம் நாட்டில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்.பி.ஐ வட்டியை அதிகரிக்கக்கூடும். இதனால் நாட்டில் பணப் புழக்கம் குறைந்து, விலைவாசி குறையும். அதே நேரத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்’’ என்றார்.

வ.நாகப்பன் ,  எஸ்.குருராஜ்
வ.நாகப்பன் , எஸ்.குருராஜ்

அடுத்து நடந்த குழு விவாதத்தில், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் பங்கு பெற்றார். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பாக முதலீட்டாளர்கள் கேள்விகளைக் கேட்க, நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். டாக்டர் செல்வகுமார் என்பவர், ‘‘பங்குச் சந்தை முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை எப்போது வெளியில் எடுக்க வேண்டும்’’ என்று கேட்டார். அதற்கு வ.நாகப்பன், ‘‘லாபம் மிக அதிகமாக இருந்தால், லாபத்தை மட்டும் தனியே எடுத்து பாதுகாப் பான கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து சந்தை இறக்கத் திலிருந்து பணத்தைப் பாதுகாக்கலாம். மற்றபடி உங்கள் பங்கு முதலீடு லாபத்தில் இருந்து, பணமும் தேவை எனில், உங்கள் தேவைக்கேற்ப பணத்தை எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார்.

ராஜா என்பவர், எஸ்.ஐ.பி முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் கேட்க, அதற்குப் பதிலளித்த க.சுவாமிநாதன், ‘‘பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி ஈக்விட்டி ஃபண்டுகளில் லாபம் பார்க்க எஸ்.ஐ.பி சிறந்த வழி. சம்பளம் அதிகரிப்பது அவசியம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்க: https://bit.ly/3BBJRrX