Published:Updated:

மகிழ்ச்சியாக, மன நிம்மதியுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

ஒருவர் மகிழ்ச்சியாக, மன நிம்மதி யுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? முதலில், அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். அடுத்து, சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து, அதன் மூலம் நிரந்தரமாக வருமானம் கிடைக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். வாங்க நினைக்கும் பொருள்களை உடனே வாங்காமல் சில காலத்துக்குத் தள்ளிவைத்தல், முதலீட்டில் இழப்பைத் தவிர்க்கும் உத்திகளைப் பின்பற்றுதல் மூலம் ஒருவர் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு முன்னேற முடியும்” என முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் பேசினார்.

 வ.நாகப்பன், எஸ்.குருராஜ்
வ.நாகப்பன், எஸ்.குருராஜ்

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘முதலீடு... வளமான எதிர்க்காலத்துக்கான வழி..! என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில்தான் அவர் இப்படிப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியை ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் க.சுவாமிநாதன் வழி நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் எஸ்.குருராஜ், வ.நாகப்பன் ஆகியோர் பதில் அளித்தனர்.

‘‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது முதலீடு செய்ய உதவும் முறை. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) என்பது, ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றும் வசதி. சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) என்பது குறிப்பிட்ட இடை வெளியில் முதலீடு செய்த பணத்தை எடுப்பது’’ என எஸ்.குருராஜ் அளித்த விளக்கம் சூப்பர்.

‘‘பணவீக்க விகிதத்தைக் கணக்கில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். கடந்த கால வருமானத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யக் கூடாது. அஸெட் அலொகேஷன் முறைப்படி, பல்வேறு சொத்துப் பிரிவுகளில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் பெறமுடியும்” என்றார் வ.நாகப்பன்.

இந்த நிகழ்வை வீடியோவில் பார்க்க: http://bittly.in/1eRm3mFIwgg=

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு