Published:Updated:

நாமினி அவசியமில்லை... செபியின் புதிய உத்தரவு சொல்வது என்ன?

நாமினி
பிரீமியம் ஸ்டோரி
நாமினி

நாமினி

நாமினி அவசியமில்லை... செபியின் புதிய உத்தரவு சொல்வது என்ன?

நாமினி

Published:Updated:
நாமினி
பிரீமியம் ஸ்டோரி
நாமினி

இன்ஷூரன்ஸ் உட்பட எந்த வகையான முதலீடாக இருந்தாலும் சரி, நாமினி குறித்த விவரங்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என நிதி ஆலோச கர்கள் அனைவரும் வலியுறுத்திவரும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று சொல்லி எல்லோரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

செபி அமைப்பானது கடந்த வாரம் வெளியிட்ட சுற்ற றிக்கை ஒன்றில், தற்போது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு நாமினி விவரங்களைப் கட்டாயம் தெரிவிக்க வேண் டும் என்ற அவசியமில்லை என்ற புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

என்றாலும், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளரிடமிருந்து நாமினி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்கிற ஒப்புதலைக் கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கான காலக் கெடுவை மார்ச் 31, 2023 ஆக செபி நிர்ணயம் செய்துள்ளது.

நாமினி அவசியமில்லை... செபியின் புதிய உத்தரவு சொல்வது என்ன?

இதன்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் நாமினி குறித்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனில், அந்த விவரங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் திடம் வழங்க வேண்டும். ஒருவேளை, பல்வேறு காரணங்களால் நாமினி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கருதினால், ஒவ்வொரு வாடிக்கையாளரும் ‘நாமினி குறித்த விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை’ என்று சுய ஒப்புதலை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் திடம் தர வேண்டியது அவசியம் என செபி தெரிவித் துள்ளது.

மார்ச் 31, 2023 தேதிக்குள் வாடிக்கையாளர்கள் நாமினி குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை எனில், அவர்களின் கணக்குகள் முடக்கப்படும். அவ்வாறு முடக்கப்பட்டால் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள யூனிட்டுகளை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படும். நாமினி குறித்த விவரங்களை மீண்டும் வழங்கினால் மட்டுமே முதலீட்டாளர்கள் மேற்கொண்டு அந்தக் கணக்கைத் தொடர முடியும்.

நாமினி அவசியமில்லை... செபியின் புதிய உத்தரவு சொல்வது என்ன?

முதலீட்டாளர்கள் இந்த விவரத்தை ஆன்லைன் மூலமாக ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிப்பதன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையையும் பயன்படுத்தலாம். நேரடியாகவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் அந்த ஒப்புதல் கடிதத்தை வழங்கலாம்.

வங்கிக் கணக்கு, போஸ்ட் ஆபீஸ் மூலம் செய்யப் படும் முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், பிராவிடன்ட் ஃபண்ட் முதலீடுகள் போன்ற அனைத்து முதலீட்டுக்கும் நாமினி விவரங்களைப் பதிவு செய்வது பொதுவாகப் பயன்தரும் விஷயமாகும்.

அவ்வாறு நாமினி விவரங்களைப் பதிவு செய்யாமல் முதலீட்டாளர் இறக்க நேரிட்டால் அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட தொகையைப் பெறுவதற்கு பல்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சில சமயம், நீதிமன்றம் வரை சென்று சட்டபூர்வமான தீர்வுகளைப் பெற வேண்டியிருக்கும். இதனால், பணவிரயம், காலதாமதம் ஆகிய பிரச்னைகளுடன் மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

நாம் முதலீடு செய்யும் தொகை நம் காலத்துக்குப் பிறகும் நமக்கு விருப்பமானவர்களுக்குச் செல்வதை ஊர்ஜிதப்படுத்த உதவுவதுதான் நாமினி பதிவேற்றம் ஆகும். மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டில் முதலீடு செய்யும்போது நாமினி குறித்த விவரங்கள் தரத் தேவை இல்லை என்று செபி அமைப்பு சொன்னாலும், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கான நாமினி தொடர்பான விவரங்களை அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப்போனால், அந்த விவரங்களை மறக்காமல் தந்துவிடுவதுதான் சரியாக இருக்கும்!

உரிமை கோரப்படாத பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்கிலும், சேமநல நிதிக் கணக்குகளிலும் முடங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணமே, நாமினி குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதுதான். அதனால் முதலீட்டாளர்கள் நன்கு ஆராய்ந்து செபி அறிவுறுத்திய விதிமுறைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவதை கவனத்தில் கொள்வது அவசியத்திலும் அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism